நீங்கள் விரும்புவதை காந்தம் போல ஈர்க்க இந்த 5 விஷயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்! 

 5 Things to attract what you want.
5 Things to attract what you want.

இப்போது உங்கள் வாழ்வில் நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்களோ அது கடந்த காலத்தில் நீங்கள் செய்த செயல்களின் விளைவுகள்தான். எனவே இன்று, இப்போது நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதுதான் உங்களுடைய எதிர்காலமாக மாறும். நாம் அனைவருக்குள்ளும் ஒரு சில விஷயங்களை வாழ்வில் அடைய வேண்டும் என்ற ஆசை இருக்கும். அது பணம், பொருள், காதல் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அத்தகைய விஷயங்களை உங்கள் பக்கம் ஈர்க்க நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 4 விஷயங்களைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

  1. உங்களுக்கு என்ன தேவை என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்: உங்கள் வாழ்க்கையை ஒரு விளையாட்டு போல நினைத்துக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு ஃபுட்பால் விளையாட்டில் ஜெயிக்க வேண்டுமெனில் எதிராளியை விட கோல் போஸ்டின் உள்ளே அதிகமுறை பந்தை அடிக்க வேண்டும். செஸ் போட்டியில் ஜெயிக்க, எதிராளியின் ராஜாவை கைப்பற்றுவதற்கான தந்திரத்தை வகுக்க வேண்டும். எனவே உங்களுடைய இலக்கு வெறும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதாக மட்டும் இருந்தால், அது சரியான குறிக்கோள் இல்லை. நீங்கள் என்ன செய்தால் உங்களுக்கு அந்த பணம் கிடைக்கும் என்பதில் ஒரு தெளிவு வேண்டும். 

  2. நீங்கள் செய்வதை நம்புங்கள்: ஒரு இலக்கை லட்சியமாகக் கொண்டிருப்பது நல்ல விஷயம்தான். ஆனால் அதற்கான முயற்சியில் அந்த இலக்கை அடைய முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இல்லை என்றால், ஒரு போதும் உங்களால் அதை அடைய முடியாது. எனவே உங்களது இலக்கின் மீதான முழு நம்பிக்கை நீங்கள் அதில் பாதி வெற்றி அடைந்ததற்கு சமம். 

  3. செயலில் அதிக கவனம் செலுத்துங்கள்: நாம் செய்து முடிக்க விரும்பும் எல்லா விஷயங்களையும் மனதிலேயே நினைத்துக் கொண்டிருந்தால் அது நடந்துவிடாது. உங்களுக்கு சிக்ஸ் பேக் வேண்டுமென்றால் ஒர்க்கவுட் செய்தால் மட்டுமே அது கிடைக்கும். அதேபோலத்தான் நீங்கள் பணம் சம்பாதிக்க வேண்டுமெனில் அதற்கான செயலில் கவனம் செலுத்த வேண்டும். எனவே அதிகம் எதைப் பற்றியும் சிந்திக்காமல், செயலில் அதிக கவனம் செலுத்துங்கள். 

  4. நீண்ட காலம் தொடர்ந்து செய்யுங்கள்: வாழ்க்கையில் எதுவும் ஒரே இரவில் மாறிவிடாது. ஒரு வாரத்தில் 10 கிலோ எடையை ஒருவராலும் குறைக்க முடியாது. அப்படி குறைத்தால் மிகப்பெரிய உடல் பாதிப்புகள் ஏற்படும். நீங்கள் எம்மாதிரியான இலக்குகளை நிர்ணயம் செய்து வைத்துள்ளீர்களோ அதை அடைவதற்கு சில காலம் எடுத்துக் கொள்ளும். அதை அடையும் வரை நீங்கள் நிச்சயம் கஷ்டப்பட்டு உழைத்தாக வேண்டும். நீண்ட காலம் எதிலும் உங்களால் தொடர்ந்து உழைக்க முடியாது என்றால், எந்த இலக்குகளையும் நிர்ணயம் செய்யாமல் சராசரியாக வாழ்க்கையை கழிப்பதே சிறந்தது. 

இதையும் படியுங்கள்:
பொருளாதார சுதந்திரத்தை ( financial freedom) அடைய வழிகள்!
 5 Things to attract what you want.

இந்த 4 விஷயங்கள் பற்றிய புரிதலை ஏற்படுத்திக் கொண்டு அதற்கு ஏற்றவாறு நீங்கள் செயல்பட்டால், நிச்சயம் உங்களது இலக்கை நீங்கள் அடைய முடியும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com