நம் வளர்ச்சியை தடுக்கும் 5 வில்லன்கள்!

Motivation article
Motivation articleImage credit - pixabay.com
Published on

வாழ்க்கையில் நாம் முன்னேற நினைத்து ஒவ்வொரு அடியையும் வெற்றிகரமாக எடுத்து வைப்போம். ஆனால் நாம் முயற்சி செய்யும்பொழுது நமக்கு தடையாக நம் வளர்ச்சியை தடுக்கும் விதமாக ஐந்து வில்லன்கள் இருக்கிறார்கள் அவர்கள் யார் என்று உங்களுக்கு தெரியுமா?

 அந்த 5 வில்லன்கள்:

ஊக்கமின்மை, மாற்றம், பிரச்சனைகள், பயம் மற்றும் தோல்வி.. இப்போது, சினிமாவில் வருவது போல் இந்த வில்லன்களை ஒவ்வொருவராக எதிர்த்து நிற்போம், அவர்களை வெல்லக் கூடிய ஆயுதங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

1-ஊக்கமின்மை:

நீங்கள் செய்கிற எதையும் மேலோட்டமாகப் பார்க்காதீர்கள். ஆழ்ந்து யோசித்து அதன் உண்மையான நோக்கத்தை உள்ளே பதிய வைத்துக் கொள்ளுங்கள். எதிர்மறையான வார்த்தைகளைத் தவிர்த்து விடுங்கள்.

2-மாற்றம்:

நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மாற்றங்கள் நிகழ்ந்தே தீரும் அதைப் புரிந்து கொள்ளுங்கள், முரண்டு பிடிக்காதீர்கள். மாற்றம் இல்லாமல் முன்னேற்றம் இல்லை. இதை மனதில் வையுங்கள்.

3-பிரச்னைகள்:

பிரச்னைகள் நிகழ்ந்தே தீரும். தயாராக இருங்கள், அவற்றை எப்படி எதிர்கொள்ளலாம் என்று முன் கூட்டியே யோசித்துக் கொள்ளுங்கள், ஒன்று அல்ல, மூன்று தீர்வுகளைச் சிந்தித்து வையுங்கள். அத்தனைப் பிரச்னைகளுக்கு உள்ளே ஒரு புதிய வாய்ப்பு ஒளிந்து இருக்கும், தேடிப்பிடித்து பயன்படுத்துங்கள்.

4-பயம்:

பயம் இல்லாதது போல் நடிக்காதீர்கள். எனக்கு இதை நினைத்து அச்சமாக உள்ளது என்று ஒப்புக் கொள்கிறவன் கோழை அல்ல. பயத்தை ஏற்றுக் கொள்கிறவனால்தான் அந்தப் பயத்தை வெல்ல முடியும். உங்கள் பயத்தின் தொடக்கப்புள்ளி எது என்று யோசியுங்கள், அங்கே அடியுங்கள்.

இதையும் படியுங்கள்:
ஒருவருடைய மதிப்பு எதை வைத்து தீர்மானிக்கப் படுகிறது தெரியுமா?
Motivation article

5-தோல்வி:

சறுக்கல்கள் வரும்போது, மாத்தி யோசியுங்கள். இந்தத் தோல்வியும் ஒரு வெற்றியாக இருக்கலாம். சில செயல்களை நம்மால் கட்டுப்படுத்த முடியும்,  மற்ற பல செயல்கள் நம் கையில் இல்லை. நம்மால் முடிந்ததை மட்டும் தொடுங்கள், சரி செய்யுங்கள்.

மேலே படித்த ஐந்து வில்லன்களான, ஊக்கமின்மை, மாற்றம், பிரச்னைகள், பயம் மற்றும் தோல்வி..இவற்றை சாதுரியமாகக் கையாண்டால் வாழ்க்கைப் பயணம் இனிதே நடைபெறும். வாழ்க்கையில் வெற்றி அடையலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com