
தன்னம்பிக்கையுடன் இருப்பது என்பது மிக சிரமமான விஷயம்தான். சில பேருக்கு அவர்கள் செய்வதோ அல்லது சொல்வதோ சரி என்று தெரிந்தும் பயப்படுவார்கள். நபருக்கு நபர் இது மாறுபடும் என்றாலும், நம்முடைய சைகைகள், தோரணைகள் மற்றும் தேர்ந்தெடுக்கும் ஆடைகள்கூட தன்னம்பிக்கையை வெளிப்படுத்த சக்திவாய்ந்த கருவிகளாக இருக்கலாம் என்று உளவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இவை அனைத்தும் கூட நம்முடைய நம்பிக்கையையும் உணர்வையும் அடுத்தவர்களுக்கு சிறப்பாக வெளிப்படுத்தலாம். மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதற்கும், நம் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்துவதற்கும் உதவக் கூடிய body language tips களை இப் பதிவில் பாரக்கலாம்.
உடல் மொழி என்றால் என்ன?
உடல் மொழி என்பது தோரணை, சைகைகள், முகபாவனை மற்றும் பிற அசைவுகள் மூலம் நம்முடைய எண்ணங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் ஒரு சிறந்த வழியாகும். ஒரு சில பேர் வாயை திறந்து பேசாமலேயே ஆக்ஷனாலேயே தன் மனதில் இருப்பதை வெளிபடுத்தி விடுவார்கள். நம்முடைய உடல் மொழியானது கண்ணாடியைப் போல் உள் உணர்வை தெள்ளத் தெளிவாக காட்டி கொடுத்துவிடும். ஆகவே நீங்கள் உங்களிடமிருக்கும் உணர்வை அல்லது எண்ணத்தை சரியான உடல் மொழியோடு காட்டினால் தான் அடுத்தவர்களுக்கு உங்களின் அசைக்க முடியாத நம்பிக்கையையும் எண்ணங்களையும் பற்றி தெரியவரும்.
நேராக உட்கார்ந்து பேசவும்/ நிமிர்ந்து நின்று பேசவும்:
நீங்கள் ஒருவரிடம் உட்கார்ந்து கொண்டு பேசினாலோ அல்லது நின்று கொண்டு பேசினாலோ நீங்கள் உங்களை உடலை நிமிர்த்தி நேராக வைத்தும் பேசும்போது அந்த posture உங்களை தன்னம்பிக்கையுடன் தோற்றமளிக்கச் செய்யும். இன்னும் கொஞ்சம் கூடுதலாக, கன்னத்தை உயர்த்தி, கால்களை திறந்த, அகலமான நிலையில் வைக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் சாய்ந்து கொண்டு பேசும்போது மற்றவர்களுக்கு உங்கள் மீதான நம்பிக்கை குறைந்துபோக வாய்ப்பிருக்கலாம்.
இடத்திற்கேற்றவாறு ஆடையை தேர்ந்தெடுத்து அணியுங்கள்:
தொழில்நுட்ப ரீதியாக, ஆடை என்பது ஒரு வகையான உடல் மொழி அல்ல, ஆனாலும் உங்களின் தோற்றத்தை அதிக அளவில் எடுத்து காண்பிப்பது இந்த ஆடைதான். ஆபீஸில் ஒரு presentationஐ நீங்கள் கொடுக்கப் போகிறீர்கள் என்றால் நீங்கள் போட்டிருக்கும் உடைதான் உங்களின் கருத்து எத்தனை உறுதியானது என்பதை எடுத்துக் காட்டும். நீங்கள் எந்த இடத்திற்கு எப்படி பட்ட சூழ்நிலையில் போகிறீர்களோ அதற்கேற்ற உடையை தேர்ந்தெடுத்து அணிவது மிக மிக அவசியம். ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள், ஆகவே உங்களின் தன்னம்பிக்கை உங்களின் ஆடையில்தான் வெளிப்படும்.
பேசும்போது அவ்வப்போது கைகளை ஆட்டி பேசுங்கள்:
நீங்கள் பேசும்போது உங்கள் கைகளைப் பயன்படுத்தும்போது, செயல்பாடு நரம்பியல் செயல்பாட்டை அதிகரிக்கும் மற்றும் நீங்கள் அதிக சைகைகளைப் பயன்படுத்தும்போது எதிரில் உள்ளவர் உங்களின் பேச்சை மிகவும் தியானத்தோடும் நம்பிக்கையோடும் கேட்பார்கள். வெறும் வாயால் மட்டும் பேசும் போது எதிரில் உள்ளவர்களின் தியானமும் குறைந்துவிடும்.
இடையிடையே மூச்சை விட்டு உங்களின் மன அழுத்தத்தை தளர்த்தி கொள்ளவும்:
ஒரு presentation ஐ கொடுக்கும்போதோ அல்லது மிக முக்கியமான உரையாடலின் போதோ நிதானத்தை கடைபிடிப்பது மிக மிக அவசியம். முக்கியமான ஒன்றை பற்றி பேசும்போது நீங்கள் பதட்டமாக இருந்தீர்களேயானால் அந்த உணர்வுகள் உங்கள் உடல் மொழியில் வெளிப்படும்.இந்த மாதிரியான உணர்வுகளை கட்டுபடுத்துவதற்கு நீங்கள் பேச்சின் நடுவில் அவ்வப்போது மூச்சை உள்ளிழுத்து வெளியேற்றலாம். ஆழமான சுவாசங்களை எடுத்துக்கொள்ளும் போது உங்களை அது அமைதியாக உணர வைக்கும்.
இடையிடையே சிரிப்பதற்கு முயற்சிக்கவும்:
நீண்ட நேரமாக ஒரு விஷயத்தை பற்றி பேசும்போது இடையிடையே சிரித்து பேசும்போது உங்களுக்கும் உற்சாகமாக இருக்கும், அடுத்தவர்களுக்கும் அலுப்பில்லாமல் கேட்பதற்கு ஏதுவாக இருக்கும். மேலும் உங்களுடைய தன்னம்பிக்கையும் வலுபடுத்தபடும்.
கண்களால் தொடர்பு கொள்ளவும்:
கண்களால் தொடர்பு கொள்வது என்பது அத்தனை எளிதானது அல்ல. எல்லோராலும் இதை எளிதாக செய்ய இயலாது. ஆனால் மற்றவர்களுக்கு உங்கள் பார்வையாலேயே நீங்கள் சொல்ல வந்ததை காண்பிக்கும்போது அது இன்னும் உங்களின் நம்பிக்கையை மேம்படுத்தலாம் மற்றும் உங்களின் வலிமையையும் வெளிப்படுத்தலாம். நீங்கள் வாயால் பேசும்போது உங்கள் கண்களிலும் அதற்கான தெளிவான பார்வையை அடுத்தவர்களுக்கு தெரிவிப்பது மிக மிக அவசியம்.
இந்த ஐந்து body language tipsஐ நினைவில் வைத்து கொண்டு உங்கள் தன்னம்பிக்கையையும் வலிமையையும் சிறப்பாக வெளிப்படுத்த முயற்சி செய்யவும்.