நடுநிலைத் தன்மையுடன் இருக்க வேண்டிய 6 முக்கியமான சூழ்நிலைகள்!

6 Important Situations to Be Neutral!
6 Important Situations to Be Neutral!

சில சூழ்நிலைகளில் ஒரு மனிதர் நடுநிலை தன்மையுடன் இருப்பது அவசியம். அதைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

1. சூடான விவாதங்கள்:

இரண்டு நண்பர்கள் அல்லது உறவினர்கள் அரசியலைப் பற்றியோ அல்லது கிரிக்கெட், மதம் என பொது விஷயத்தைப் பற்றியோ மிகவும் சூடாக விவாதம் செய்து கொண்டிருக்கும் போது யார் பக்கமும் சாயாமல் நடுநிலைத் தன்மையுடன் ஒருவர் இருக்க வேண்டியது அவசியம். அவர்கள் இருவரும் உங்களை தன் பக்கம் சாய முயற்சி செய்வார்கள். ஆனால் அது ஆபத்தில் முடியும். உறவிலும் நட்பிலும் விரிசல் விழுந்துவிடும். எனவே உங்கள் கருத்தை ஒருதலைப் பட்சமாக பேசாமல் பொதுவாக பேசி அவர்களை அமைதிப் படுத்த வேண்டும்.

2. கலாச்சார பன்முகத்தன்மை:

வசிப்பிடம் அல்லது அலுவலகத்தில் பலவித மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் உடன் வசிக்கலாம் அல்லது பணி புரியலாம். அப்போது கலாச்சாரத்தைப் பற்றிய காரசார விவாதங்கள் எழும்போது யாருக்கும் ஆதரவு அளித்துப் பேசக்கூடாது. ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் அதற்குரிய மதிப்பு இருக்கும். எனவே எதை எந்த கலாச்சாரத்தையும் உயர்வாகவோ தாழ்வாகவோ மதிப்பிட முடியாது அந்த நேரத்தில் நடுநிலைத் தன்மையுடன் இருக்க வேண்டும்.

3. தொழில் முறை சார்ந்த விஷயங்களில்:

அலுவலகத்தில் நடைபெறும் புதிய ஆட்களை வேலைக்கு தேர்ந்தெடுக்கும் இன்டர்வியூக்குள், ரிவ்யூக்கள் போன்ற இடங்களில் நடுநிலைத் தன்மையுடன் ஒருவர் செயல்பட வேண்டும். ஏனென்றால் நீங்கள் எடுக்கும் முடிவு அந்த நிறுவனத்தையே பாதிக்கும். மேலும் தகுதியான ஒருவருக்கு முறையாகக் கிடைக்கக்கூடிய வேலையோ ஊதிய உயர்வோ உங்களால் தடைபடக்கூடாது.

4. குடும்ப மற்றும் நட்புகளுக்குள் சண்டை வரும்போது:

உறவினர்களிடையே அல்லது குடும்ப உறுப்பினர்களிடையே அல்லது நெருங்கின நண்பர்கள் இடையே சண்டை சச்சரவு ஏற்படும்போது அந்த இடத்தில் யார் சார்பாகவும் பேசாமல் நடுநிலைத் தன்மை உடன் இருப்பது மிகவும் அவசியம். ஒருவர் பக்கம் சார்ந்து பேசி விட்டால் இன்னொருவரின் வெறுப்பை சம்பாதித்துக் கொள்ள நேரம்

5. காதலுக்கு ஆலோசனை வழங்கும் போது:

உங்களது நெருங்கிய நண்பரோ அல்லது தோழியோ உறவினரோ தங்களுடைய காதலர்கள் அல்லது தம்பதிகளிடையே காதல் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு ஆலோசனை கேட்டு வரும்போது அந்த நேரத்தில் நடுநிலைத் தன்மை மிகவும் அவசியம். இரண்டு புறமும் அவர்களது உணர்வுகளை கேட்டு அறிந்து அதற்கேற்றார் போல தான் அவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
நீண்ட விரல்களைக் கொண்டவர்களுக்கான 8 மெஹந்தி மாடல்கள்!
6 Important Situations to Be Neutral!

6. வேலை மாற்றத்தின் போது:

தற்போது இருக்கும் நிலையை விட அடுத்த நிலைக்கு செல்லலாம். ஆனால் அதற்கு கம்போர்ட் சோனை விட்டு வெளியே வர வேண்டும். ஆனால் புதிய வேலையில் நிறைய அனுகூலங்கள் இருக்கும் நிலையில் உங்களுடைய முடிவை நடுநிலைத் தன்மையுடன் ஆராய்ந்து பார்த்து எடுக்க வேண்டும். இதுபோன்ற உங்கள் வாழ்க்கையை மாற்றும் முடிவுகளை எடுக்கும் போது மிகவும் கவனமாக அதன் சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்து முடிவு எடுக்கவேண்டும்.

நடுநிலைத் தன்மையை ஒருவர் வகிக்கும் போது அது அளவற்ற நன்மையையும் அமைதியையும் ஒரு மனிதருக்கு அளிக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com