தோல்விகளில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய 6 பாடங்கள்!

6 Lessons to Learn from Failures!
6 Lessons to Learn...Image credit - pixabay
Published on

வாழ்க்கையில் தோல்விகள் பெரும்பாலும் எதிர்மறையான விளைவுகளாகவே பார்க்கப்படுகிறது. வெற்றியை கொண்டாடும் அதே நேரத்தில் தோல்வியில் துவளும் மனம் நிறைய பேருக்கு உண்டு. ஆனால் தோல்வி ஒரு மதிப்புமிக்க பாடத்தை வழங்குகிறது என்ற உண்மையை புரிந்துகொண்டால் தோல்வியையும் கொண்டாடத் தொடங்கி விடுவோம் என்பதே உண்மை. 

தோல்விகளிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்

1. விடாமுயற்சி

முயற்சிகளில் தோல்வி கிட்டும்போது விடாமுயற்சி என்கிற பாடத்தை அது கற்றுத்தருகிறது. தோல்வியை சமாளித்து முன்னேறிச்செல்ல ஊக்கமளிக்கிறது. ஒவ்வொரு முறையும் தோல்வியை சந்திக்கும்போது அவற்றை ஏற்றுக்கொண்டு விடாமுயற்சியுடன் செயல்படும்போது பின்னாளில் வெற்றி பெறும் சூழல் நிச்சயமாக உருவாகும். அதற்கான அடித்தளத்தை தோல்வி உருவாக்குகிறது.

2. சுயபிரதிபலிப்பு

தோல்வி ஒருவரை, தன்னை உள்நோக்கி பார்க்கவும் அவரின் செயல்கள் முடிவுகள் மற்றும் தவறுகளை பற்றி சிந்திக்கவும் வைக்கிறது. ஒவ்வொரு தோல்வியும் முக்கியமான கேள்வியை அவர் முன் வைக்கிறது. ‘’என்ன தவறு நடந்தது? இந்த அனுபவத்திலிருந்து நான் என்ன கற்றுக் கொண்டேன்? போன்ற கேள்விகள் சுயப் பிரதிபலிப்புக்கு வழிவகுக்கிறது. இது ஒருவரின் பலம் மற்றும் பலவீனங்களை பற்றிய ஆழமான நுண்ணுறிவுக்கு வழிவகுக்கும். 

3. அப்டேட்டாக இருத்தல்; 

நாளுக்கு நாள் உலகம் வேகமாக மாறி வருகிறது. அதற்கு ஏற்ப ஒருவர் தன்னை அப்டேட் செய்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். மாற்றத்திற்கு தன்னை உட்படுத்திக் கொண்டு புதிய அணுகுமுறைகள், உத்திகள், புதுமையான யோசனைகள் போன்றவற்றை கற்றுக்கொண்டு அவற்றை பிரயோகித்தால் தோல்வி விலகி வெற்றி கிடைக்கும்.

4. வளர்ச்சி மனப்பான்மை

வளர்ச்சி மனப்பான்மையை வளர்ப்பதில் தோல்வி ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பின் மூலம் ஒருவர் தனது திறன்கள் மற்றும் புத்திசாலித்தனத்தை வளர்க்க முடியும் என்கிற நம்பிக்கையை அது தருகிறது. தோல்வியடையும் போது தன்னை திறமையற்றவர் ஆகவோ, தகுதியற்றவராகவோ கருதாமல் வளர்ச்சி மனப்பான்மையைத் தழுவ வேண்டும். அது படைப்பாற்றல், வளம் மற்றும் கற்றலுக்கான வாய்ப்பைத் தருகிறது.

5. பச்சாதாபம்; 

தோல்வியுறும் ஒரு மனிதர் தன்னைப்போலவே தோல்வியுற்ற இன்னொரு மனிதரின் மனப் போராட்டங்களை எளிதாக புரிந்து கொள்வார். இந்த உணர்வு பச்சாதாபமாக உருவெடுத்து வலுவான உறவுகளை வளர்க்கிறது. போட்டி மனப்பான்மையைக் காட்டிலும், ஊக்கம் மற்றும் ஒத்துழைப்பு கலாச்சாரத்தை உருவாக்குகிறது. 

இதையும் படியுங்கள்:
கல்நெஞ்சுக்காரர்களையும் கரைய வைப்பது எது தெரியுமா?
6 Lessons to Learn from Failures!

6. வெற்றியை மறுவரையறை செய்தல்; 

உண்மையில் வெற்றி என்றால் என்ன என்பதை மறு வரையறை செய்ய தோல்வி கற்றுக் கொடுக்கிறது. அது வெற்றியைப் பற்றிய நமது புரிதலை விரிவுபடுத்த உதவுகிறது. ஒவ்வொரு முயற்சியும் வெற்றி பெற்றாலும், இல்லாவிட்டாலும் அந்த முயற்சி வளர்ச்சிக்கும் அறிவுக்கும் பங்களிக்கிறது என்பதை உணர வேண்டும். கற்றல் அனுபவங்கள், தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் மீண்டும் முயற்சி செய்வதற்கான தைரியம் ஆகியவற்றை தருகிறது. அவை வெற்றியை மறு வரையறை செய்ய உதவுகிறது, 

எனவே தோல்வி என்பது பயப்பட வேண்டிய அல்லது தவிர்க்க வேண்டிய ஒரு அம்சம் அல்ல. மாறாக இது மனித அனுபவத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகவும் வளர்ச்சிக்கான படிக்கட்டாகவும் உள்ளது. எனவே தோல்வியையும் கொண்டாடலாம் என்கிற மனப்பான்மையை வளர்த்துக்கொண்டால் வெற்றி தேடிவரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com