மன உறுதியைத் தரும் 6 விஷயங்கள்!


6 things that give you confidence!
confidence!Image credit - pixabay
Published on

வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் வெற்றியாளர் களுக்கு சவால் தான் ஏன் தெரியுமா? சவால்களை எதிர்கொண்டால்தான் வெற்றி கிடைக்கும். மன உறுதிதான் இதை எல்லாவற்றுக்கும் மிக முக்கிய காரணம். ஒருவர் எவ்வளவு பெரிய பலசாலியாக இருந்தாலும் சரி புத்திசாலியாக இருந்தாலும் சரி அவருக்கு மனஉறுதி இல்லை என்றால் எதிலும் வெற்றிபெற முடியாது என்பதே உண்மை. 

சிலர் கடுமையாக உழைப்பார்கள். சிலர் நான் புத்திசாலித்தனமாக இருக்கிறேன் நான் வெற்றி பெற்று விடுவேன் என்று சொல்லி கடைசியில் தோல்வியைத்தான் தழுவுவார்கள். ஆனால் நான் மன உறுதியோடு இருக்கிறேன் என்னால் வெற்றி பெற முடியும் என்று யார் நினைக்கிறார்களோ அவர்கள் பக்கத்தில் தோல்வி வர அஞ்சும் என்பதே உண்மை. மனுஉறுதிக்கு என்ன செய்ய வேண்டும். இதோ கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆறு விஷயங்களைக் கடை பிடியுங்கள் போதும்.

1) மனதில் கோபம், வெறுப்பு ஏற்படும்போது யாரிடமும் பேசாதீர்கள். வெறுமனே கண்களை மூடி உங்களை சுற்றியுள்ள சத்தங்களை கேளுங்கள். இல்லையென்றால் ஹெட்போனை மாட்டிக்கொண்டு பறவைகளின் கீச்சுக்குரல், காற்றின் இசை, பூனை, நாய்களில் சத்தம், மெல்லிய இசை ஆகியவற்றை கேட்கலாம்.

2) மனத்தளர்ச்சி ஏற்படும்போது கண்களை மூடி 'நான் வலிமையானவன்' 'நான் கோபப்படமாட்டேன்' எனக் கூறிக்கொள்ளுங்கள். இது தவறான எண்ணங்களை நோக்கி உங்கள் மனம் செல்வதை தடுக்கும்.

3) மூச்சை இழுத்து விடுவதும் ஒரு தியானம்தான். மெதுவாக மூச்சை இழுத்தபடி ஒன்று முதல் பத்து வரை எண்ணுங்கள். மீண்டும் பத்து முதல் ஒன்று வரை எண்ணியபடி மூச்சை மெதுவாக விடுங்கள்.

4) புதிய காற்று, சூரிய ஒளி, தண்ணீர், உணவு, குழந்தைகள், மலர்கள், சாக்லேட், வாழ்க்கைப் பாடங்கள், புத்தகம், செல்ல பிராணிகள், நடை பயிற்சி, நடனம், தூக்கம் இவை எல்லாம் உங்களின் மனஇறுக்கத்தை போக்கும் அற்புத மருந்துகள்.

இதையும் படியுங்கள்:
வெற்றி எங்கள் கையிலே!

6 things that give you confidence!

5) உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த யாரும் இல்லை என நினைக்கிறீர்களா? அப்படி என்றால் 'மனதுடன் பேசுங்கள்'. 'வாழ்கையில் எனக்கு என்ன தேவை?' என மனதிடம் கேளுங்கள். கேட்கவில்லை என்றால் எதுவும் கிடைக்காது.

6) தோல்வி உங்களுக்குள் எதிர்மறை உணர்வுகளை உண்டாக்கலாம். ஆனால், தோல்வியடையாத மனிதர்களே உலகில் இல்லை. தோல்வியே இல்லை என்றால் எப்படி உங்களால் கற்றுக்கொள்ள முடியும்? நீங்கள் தோல்வியடைவில்லை; உங்கள் முயற்சிதான் தோல்வியடைந்து என நினைத்துக்கொள்ளுங்கள்.

மன உறுதியை மட்டும் மூலதனமாக கொள்ளுங்கள் வெற்றி உங்களைத் தேடிவரும். மனஉறுதி இல்லாமல் எதைமே  சாதிக்க முடியாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com