Victory is in our hands!
Motivational articlesImage credit - pixabay

வெற்றி எங்கள் கையிலே!

Published on

ரு படியில் ஒரு கால். மற்றொரு படியில் மற்றொரு கால். முதற்படியில் இருக்கும் காலை எடுத்து இரண்டாம் படியில் வைத்து, இரண்டாம் படியில் வைத்த காலை மூன்றாம் படியில் வைக்கிறீர்கள். ஒரு படியை இழந்து இன்னொரு படிக்குப் போவது போல, ஒரு தோற்றம் தெரியும். அதனால் ஒரு படியில் கற்றதை மறந்துவிட்டு, மற்றொரு படிக்குப் போய்விடலாம் என்று எண்ணிவிடாதீர்கள்.

படியை இழக்கிறீர்கள். உண்மை! ஆனால், படி மூலம் அடைந்த உயரத்தை இழக்கவில்லை. படிகள் கீழே போகப்போக, உங்கள் உயரம் கூடிக் கொண்டே போகிறது. உயரத்தை எங்கும் இழப்பதில்லை.

அப்படித்தான் வெற்றிக்குரிய பண்புகளை படிப்பினைகளைப் பெறுகிறபோது, புதிதாக ஒன்றைப் பெறுகிறபோது, முன்னரே பெற்றதைத் துறக்கவும் கூடாது மறக்கவும் கூடாது.

வெற்றிபெற வேண்டும் என்னும் ஆசை உங்களிடம் இருக்க வேண்டும். ஆர்வம் உங்களிடம் இருக்க வேண்டும்.

பாலைவனத்தில் ஒருவன் நடக்கிறான். தொடர்ந்து நடக்கிறான் அவனுக்கு தாகம் எடுக்கிறது. குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்குமா என்று பார்த்துக் கொண்டே நடக்கிறான். நடக்க நடக்க அவன் நா வறண்டு போகிறது. அவனால் மேலும் நடக்க முடியவில்லை.

அதற்காக இருந்த இடத்தில் இருந்தால் தண்ணீர் கிடைக்குமா? தண்ணீர், தானே அவனைத் தேடி வருமா? வராது  அவன்தான் அதைத்தேடி நடக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
ரத்தன் டாட்டா கூறிய ஊக்கமளிக்கும் சில பொன்மொழிகள்!
Victory is in our hands!

இப்படி ஏங்கி. ஏங்கி, எதிர்பார்த்து, எதிர்பார்த்து நடக்கிறபோது, சிறிது தொலைவில் ஒரு குட்டை தெரிகிறது. அதில் தண்ணீர் இருக்கிறது

தண்ணீரைப் பார்த்ததும் அவன் எப்படி நடக்கிறான்? எவ்வளவு வேகமாக இடைப்பட்ட தூரத்தைக் கடக்கிறான் அதன் பின் அந்த தண்ணீரை எவ்வளவு ஆர்வத்தோடு குடிக்கிறான்.

ஒரு லட்சியத்தை அடைவதற்கு ஒரு வெற்றியை பெறுவதற்கு அத்தகைய ஆர்வம் பிறக்க வேண்டும். தாகம் கொண்ட பிறகு அவன் நினைவெல்லாம் நீரைப் பற்றியது. அவன் கண் தேடுவதெல்லாம் அந்த நீரையே. ஒருவேளை அவன் உறங்கினாலும் உறக்கத்தில் வரும் கனவிலும் அந்த நீரும் நீர் தேடலுமே வரும்.

அதுபோல இலட்சியத்தில் உறுதியாக நின்று தொடர்ச்சியாக உழைத்தால் வெற்றி உங்களுக்கு நிச்சயம் வெற்றிக்கனி உங்கள் கையிலே வந்து உட்காரும்.

logo
Kalki Online
kalkionline.com