எவரையும் ஈர்க்கும் 6 வழிகள்!

6 Ways to Impress Anyone!
6 Ways to Impress Anyone!

இந்த பதிவில் பிறருக்கு நீங்கள் ஈர்ப்பு மிக்கவராகத் தெரிய பின்பற்ற வேண்டிய 6 வழிகள் பற்றி பார்க்கலாம். இதைத் தெரிந்துகொண்டு செயல்படுத்துவது மூலமாக அனைவருக்கும் பிடித்த நபராக நீங்கள் மாற முடியும். 

1. கான்ஃபிடன்ஸ்: தன்னம்பிக்கை இருக்கும் நபர்களை அனைவருக்குமே பிடிக்கும். இது உங்களுக்கு ஒரு கவர்ச்சியான தோற்றத்தை ஏற்படுத்துகிறது. சுயமரியாதையை அதிகரிக்கும் செயல்களை செய்வது மூலமாக, உங்களுக்கு இந்த கான்பிடன்ஸ் தானாகப் பிறக்கும். எனவே எல்லா இடங்களிலும் தன்னம்பிக்கை உடைய நபராக நீங்கள் இருந்தாலே பிறருக்கு உங்களை அதிகம் பிடிக்கும். 

2. நீங்களாக இருப்பது: இன்றைய நவீன உலகில் பலர் தங்களை சிறப்பாகக் காட்டிக்கொள்ள பொய்யாக நடிக்கிறார்களே தவிர, அவர்களின் உண்மைத் தன்மையை வெளிப்படுத்த யாரும் விரும்புவதில்லை. ஆனால் யார் ஒருவர் தனக்குப் பிடித்த விஷயங்களை செய்துகொண்டு, எந்த ஒரு நடிப்பும் இல்லாமல் அவராகவே எல்லா இடங்களிலும் பிரதிபலிக்கிறாரோ, அவரை அனைவருக்குமே பிடிக்கும்.

3. நகைப்புத்தன்மை: இதை ஆங்கிலத்தில் அழகாக sense of humor எனச் சொல்வார்கள். எல்லா இடங்களிலும் ஜாலியாக நகைச்சுவை வெளிப்படுத்தும் நபர்களை அனைவருக்குமே பிடிக்கும். எனவே எப்போதும் கடினமான முகத்தோற்றத்தை வெளிப்படுத்தாமல், யாரிடமாவது பேசும்போது ஜாலியாக அரட்டையடுத்துப் பேசுங்கள். 

4. பேச்சுத்திறன்: சிறப்பாகவும், தெளிவாகவும் பேசுபவர்கள் பிறர் மனதில் சிறந்த இடத்தைப் பிடிக்கிறார்கள் என ஆய்வுகள் சொல்கிறது. எனவே உங்களை மற்றவர்களுக்குப் பிடிக்க வேண்டும் என நினைத்தால், உங்களது பேச்சுத் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் எப்படி பேசுகிறீர்களோ அதில் உங்களுடைய அறிவும் ஆர்வமும் வெளிப்படும். எனவே பேச வேண்டும் என்பதற்காக ஏதோ ஒன்றை பேசாமல், தைரியமாக பேசும் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். 

இதையும் படியுங்கள்:
நீங்கள் இரவில் சரியாகத் தூங்குவதில்லையா? ஜாக்கிரதை மக்களே!
6 Ways to Impress Anyone!

5. நல்ல குணம்: ஒருவரிடம் இருக்கும் நல்ல குணங்கள் உண்மையிலேயே பிறரால் அதிகம் விரும்பப்படும். பிறருடன் பழகும்போது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பழகுங்கள். எல்லா இடங்களிலும் முடிந்தவரை நல்ல பண்புகளை வெளிப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள். இது பிறர் உங்களை எப்போதும் சிறப்பாகவே பார்க்க உதவும்.

6. உங்கள் மீது கவனம் செலுத்துங்கள்: நீங்கள் பிறரைப் பற்றி எதுவும் நினைக்காமல் உங்கள் மீது கவனம் செலுத்தி, உங்களுக்கானவற்றை செய்தாலே, பிறர் உங்களை சிறப்பாக பார்ப்பார்கள். எப்போது நீங்கள் பிறரைக் கவர வேண்டும் என்பதற்காக ஒரு செயலை செய்கிறீர்களோ, அது நல்ல பலனைக் கொடுக்காது. ஆனால் எதிலும் கவனம் செலுத்தாமல் உங்களுக்கான விஷயங்களில் மட்டும் நீங்கள் கவனம் செலுத்தும்போது, பிறருக்கு நீங்கள் ஈர்ப்பு மிக்கவர்களாகத் தெரிவீர்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com