நீங்கள் இரவில் சரியாகத் தூங்குவதில்லையா? ஜாக்கிரதை மக்களே!

Not sleeping well at night.
Not sleeping well at night.

இன்றைய காலத்தில் பலருக்கு இருக்கு பொதுவான பிரச்சினை எதுவென்றால் அது தூக்கமின்மைதான். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே தூக்கமின்றி அவதிப்படுகின்றனர். குறிப்பாக அதிகப்படியான ஸ்மார்ட்போன் பயன்பாட்டால், அவர்களின் தூக்கமுறை முற்றிலும் பாதிக்கப்பட்டு, பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். 

அந்த காலத்துடன் ஒப்பிடும்போது இப்போது அதிகப்படியான நபர்கள் தூக்கமின்மையில் சிக்கித் தவிப்பதாக தரவுகள் சொல்கிறது. இரவில் வெகு நேரம் விழித்திருப்பதால், காலையில் பலர் சூரிய உதயத்தைப் பார்ப்பதே இல்லை. காலையில் எழுந்திருப்பதே காலதாமதமாகத்தான். மேலும் பலருக்கு இரவு நேரப் பணி இருப்பதால், முறையான தூக்கம் இல்லாமல் போகிறது. 

தூக்கமின்மைக்குக் காரணங்கள்: 

நான் தொடக்கத்தில் சொன்னது போலவே, தூக்கமின்மைக்கு முதல் காரணமாக இருப்பது அதிகப்படியான டிஜிட்டல் சாதனப் பயன்பாடுதான். அதிக நேரம் டிஜிட்டல் திரையைப் பார்ப்பதால் தூக்கம் பாதிக்கப்பட்டு, தூக்க சுழற்சி மோசமாகிறது. எனவே இரவு நேரத்தில் அதிகப்படியாக டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்தாதீர்கள். 

அதேபோல தூங்கச் செல்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, கேஃபின் நிறைந்த, டீ, காபி போன்றவற்றைக் குடிப்பதைத் தவிருங்கள். இது உங்களது தூக்கத்தைக் கெடுக்கும். 

அதேபோல மன அழுத்த தருணங்களிலும் முறையாக தூக்கம் வராது. எனவே உங்களுக்கு வாழ்வில் ஏதேனும் குழப்பமோ மன அழுத்தமோ இருந்தால், அதை உடனடியாக சரி செய்வது நல்லது. 

முறையாகத் தூங்காததால் ஏற்படும் விளைவுகள்:

  • இரவு நேரத்தில் நமது உடலுக்கும் மூளைக்கும் ஓய்வு தேவை என்பதால், சரியாக தூங்காதபோது பல பாதிப்புகளை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும். குறிப்பாக மனச் சோர்வு மற்றும் பதட்டம் போன்ற மனநிலை பிரச்சனைகளை ஏற்படுத்தி, மேலும் மன உளைச்சலை அதிகமாக்கிவிடும். 

  • சரியாக தூங்காதபோது நோய் எதிர்ப்பு மண்டலம் வெகுவாக பாதித்து பலவீனமாகிவிடும். இதனால் நரம்பியல் கோளாறுகள் கூட ஏற்படலாம்.

  • நீண்ட நாள் சரியாகத் தூங்காதவர்களுக்கு பக்கவாத அபாயம் இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். இது ரத்த அழுத்தத்தை அதிகரித்து பல எதிர்மறைத் தாக்கத்தை உடலில் ஏற்படுத்திவிடும். 

  • சரியாகத் தூங்கவில்லை என்றால் ஞாபக மறதி ஏற்படலாம். ஏனெனில் மூளைக்குப் போதிய ஓய்வு கிடைக்காதபோது, அதன் செயல்பாடு வெகுவாக பாதிக்கிறது. இதனால் கவனச் சிதறல், முடிவில் தெளிவின்மை போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும். 

இதையும் படியுங்கள்:
உடல் வலிமையாக இருக்க இந்த கசப்பு உணவுகளையும் சாப்பிடுங்களேன்!
Not sleeping well at night.

எனவே தினசரி குறைந்தது 7-8 மணி நேரம் முறையாகத் தூங்குவதை உறுதி செய்து கொள்வது நல்லது. நமது உடல்நலம் நன்றாக இருந்தால்தான் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பதை உணர்ந்து, தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com