மனித மூளை என்பது ஒரு வலிமை மிக்க கருவி. நாம் எதை நினைக்கிறோமோ, எதை நம்புகிறோமோ அதை நோக்கியே நம் வாழ்க்கை நகரும். நம்முடைய எண்ணங்கள், நம்பிக்கைகள், பழக்கங்கள் நம் வாழ்க்கையை உருவாக்குகின்றன. ஆனால், நாம் விரும்பாத பழக்கவழக்கங்கள், எதிர்மறையான எண்ணங்கள், நம்மை ஆட்டிப் படைத்தால் என்ன செய்வது? அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நம் மனதை Reprogram செய்ய வேண்டியது அவசியம்.
உடல் மற்றும் மன ஆரோக்கியம்: மனதை ரீப்ரோக்ராம் செய்ய முதலில் நாம் நம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ள வேண்டும். போதுமான தூக்கம், ஆரோக்கியமான உணவு, தொடர்ச்சியான உடற்பயிற்சி ஆகியவை மனதை தெளிவாகவும், புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க உதவும். மன அழுத்தத்தைக் குறைக்க தியானம், யோகா போன்ற நுட்பங்களை முயற்சி செய்யலாம்.
சுய விழிப்புணர்வு: நாம் பிற விஷயங்களைப் பற்றி புரிந்து கொள்வதை விட, நம்மைப் பற்றி நாம் நன்கு புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். நம்முடைய பலம், பலவீனம், எண்ணங்கள், உணர்வுகள் ஆகியவற்றை முதலில் நாம் அறிந்துகொள்ள வேண்டும். நம்மை நாமே கேள்விகேட்டு நம் நடவடிக்கைகளை ஆராய்ந்து பார்ப்பது, நம்மை மேம்படுத்த உதவும்.
புதிய பழக்கங்களை உருவாக்குதல்: பழைய பழக்கவழக்கங்களை மாற்றி, புதிய பழக்கங்களை முயற்சி செய்வது மனதை மறுவடிவமைப்பு செய்யும் முக்கியமான படி. நாம் விரும்பும் மாற்றங்களை நோக்கி செல்லும் வகையில், நம்மை நாமே திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். சிறு சிறு இலக்குகளை நிர்ணயித்து அவற்றை அடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக முன்னேற்றம் அடைவதன் மூலம், நாம் நம் இலக்கை எளிதாக அடையலாம்.
பாசிட்டிவ் மனப்பான்மை: எல்லா விஷயங்களையும் நேர்மறையாக பார்ப்பது மனதை ரீப்ரோக்ராம் செய்யும் ஒரு சக்தி வாய்ந்த கருவி. நாம் எதை நினைக்கிறோமோ அதுவே நம் வாழ்க்கையில் நடக்கும். எனவே, நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்வது மிகவும் முக்கியம். நாம் நம்மைப் பற்றியும், நம் வாழ்க்கையைப் பற்றியும் நேர்மறையாக சிந்திக்க வேண்டும். நாம் செய்யும் செயல்களுக்கு நம்மை நாமே அவ்வப்போது பாராட்டிக்கொள்ள வேண்டும்.
சூழலை மாற்றுங்கள்: நாம் இருக்கும் சூழல் நம் மனதை பெரிதும் பாதிக்கும். எனவே, நேர்மறையான சூழலை உருவாக்கிக்கொள்வது மிகவும் முக்கியம். நேர்மறையான மக்களுடன் இணைந்து செயல்படுவதால், அவர்களுடன் இணைந்து நாமும் நேர்மறை சிந்தனை உடையவர்களாக மாறுவோம்.
தொடர் கற்றல்: புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வது மனதை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும். புதிய திறமைகளைக் கற்றுக்கொள்வது புதிய இடங்களுக்கு பயணம் செய்வது, புதிய மக்களை சந்திப்பது போன்றவை நம் மனதை வளப்படுத்தும். தொடர்ந்து கற்றுக் கொள்வதன் மூலம், நாம் எப்போதும் புதிய விஷயங்களை கண்டுபிடித்து புதிய அனுபவங்களைப் பெறலாம்.
உங்கள் மனதை ரீப்ரோக்ராம் செய்வது ஒரு தொடர்ச்சியான செயல்முறை. உடனடியாக எதையும் மாற்றிவிட முடியாது. நீங்கள் தொடர்ச்சியாக முயற்சி செய்தால், நிச்சயம் எதை வேண்டுமானாலும் மாற்றி, உங்களது இலக்கை அடையலாம்.