மனிதர்கள் தனித்துவம் வாய்ந்த உயிரினங்கள். நாம் ஒவ்வொருவரும் தனித்தனி விருப்பு வெறுப்புகளுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். பிடித்த உணவுகள் முதல் நேசத்துக்குரிய பயண இடங்கள் வரை, நமது விருப்பத்தேர்வுகள் நமது அனுபவங்களையும் உலகத்துடனான தொடர்புகளையும் வடிவமைக்கின்றன. ஆனால் நாம் இதைத்தான் விரும்புகிறோம் என்பதை எப்படி தீர்மானிக்கிறோம்? இந்த செயல்பாட்டின்போது நமக்குள் என்ன நடக்கிறது? மேலும், ஒரு விஷயத்தை பிடித்துபோக நம்மை நாமே கட்டாயப்படுத்த முயன்றால் என்ன ஆகும்? ஆகியவற்றை பற்றி தெரிந்துகொள்வோம்.
1. விருப்பங்களின் தன்ம:
நமது உளவியல்(Psychology) மற்றும் உயிரியலில்( Biology) விருப்பத்தேர்வுகள் ஆழமாக வேரூன்றியுள்ளன. அவை மரபியல், வளர்ப்பு, கலாச்சாரம் மற்றும் தனிப்பட்ட அனுபவங்களின் மூலம் தீர்மானிக்கப்படுகின்றன.
நரம்பியல் பாதைகள்: நமது மூளை நேர்மறை அல்லது எதிர்மறை உணர்வுகளுடன் தொடர்புடைய இரண்டு நரம்பியல் பாதைகளை கொண்டுள்ளது. இனிமையான ஒன்றை நாம் சந்திக்கும்போது, இந்தப் பாதைகள் அதற்கேற்று வலுவடைந்து, நமது விருப்பத்தை உணர்த்துகின்றன. உதாரணமாக, நீங்கள் ஒரு குறிப்பிட்ட வகை இசையை ரசிக்கிறீர்கள் என்றால், உங்கள் மூளை அதை மகிழ்ச்சியுடன் இணைத்து, அதை விருப்பமானதாக மாற்றுகிறது. அந்நேரத்தில் நீங்களே ஒரு வித சந்தோஷத்தை உணர்வீர்கள்
உணர்ச்சி சங்கங்கள்: உணர்ச்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நேர்மறையான நினைவுகள் அல்லது உணர்ச்சிகளுடன் இணைக்கப்பட்ட விஷயங்களை காணும்போது இது வெளிப்படும். சிறு வயதில் நீங்கள் ருசித்த ஐஸ்கிரீம் கடைக்கு மீண்டும் வரும்போது, நீங்கள் விரும்பும் ஒன்றை உங்களுக்குப் பிடித்த நபரும் தேர்வு செய்யும்போது, ஒரு வித சொல்லமுடியாத உணர்வுகள் நமக்கு தூண்டுகின்றன.
சமூகத்தில் பிரபலமானவர்கள்: நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழல் நமது தேர்வுகளில் கணிசமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. உதாரணத்திற்கு, சமூகத்தில் செல்வாக்கு உள்ளவர்கள் ஒரு சில விஷயத்தை உபயோகித்து ஆதரிப்பதால் சில ஃபேஷன் சம்பந்தமான விஷயங்கள் நம்மை அறியாமல் நமக்கு பிடித்து போகின்றன.
2. முடிவெடுக்கும் செயல்முறை:
ஆய்வு: பல்வேறு விஷயங்களை ஆராய்ந்து பாருங்கள். வித்தியாசமான உணவு வகைகளை முயற்சி செய்து பாருங்கள். பலதரப்பட்ட புத்தகங்களைப் படியுங்கள் அல்லது புதிய இடங்களுக்குச் சென்று வாருங்கள். இம் முயற்சிகள் நம் எல்லைகளை விரிவுபடுத்துகின்றன.. இந்த ஆய்வு நம்மிடம் இருக்கும் ஆர்வம் ஒரு வித எரிசக்தியாய் செயல்படுகிறது.
ஒப்பீடு: நமது மூளை இயற்கையான ஓர் ஒப்பீட்டாளர் போன்றது. ஒப்பீட்டின் அடிப்படையில் பல விஷயங்களின் அடிப்படையில் நம் விருப்பங்களை மதிப்பீடு செய்கிறோம். பல நேரங்களில் அந்த விருப்பங்களில் உள்ள நன்மை, தீமைகளை அறியாமலேயே நாம் எடைபோடுகிறோம். அந்தளவுக்கு நம் விருப்பம் நம்மைக் கட்டுப்படுத்தும்.
மீண்டும் மீண்டும் செய்வது: மீண்டும் மீண்டும் ஒரு விஷயத்தை செய்யும்போது உங்கள் விருப்பம் வெளிப்படுகிறது. நாம் எந்த விஷயத்திலும் எவ்வளவு அதிகமாக ஈடுபடுகிறோமோ, அவ்வளவு அதிகமாக அது விருப்பமானதாக மாறும்.
3. விருப்பங்களை கட்டாயப்படுத்துவதன் தாக்கங்கள்:
ஆனால் எதையாவது விரும்புவதற்கு நம்மை நாமே கட்டாயப்படுத்த முயற்சித்தால் என்ன ஆகும்?
அறிவாற்றல் மாறுபாடு: நாம் ஒரு விருப்பத்தை கட்டாயப்படுத்தும்போது, அறிவாற்றல் முரண்பாட்டை உருவாக்குகிறோம். நமது உண்மையான உணர்வுகளுக்கும் நாம் விரும்பும் கருத்துக்கும் இடையிலான மோதல் போன்றது அது. உதாரணமாக, நீங்கள் விரும்பாத ஒரு பொழுதுபோக்கை விரும்புவது போல் நடிப்பது, உங்களது உள் மோதலுக்கு வழிவகுக்கும்.
விருப்பத்தின் முரண்பாடு(The Paradox of Choice): நம் முன் பல விருப்பங்கள் இருந்தால் அது நம்மை மூழ்கடிக்கலாம். உதாரணமாக ஒரு விரிவான பட்டியலிலிருந்து விருப்பமானதை தேர்ந்தெடுக்க நம்மை நாமே நிர்ப்பந்திக்கும்போது, முடிவெடுக்கும் சோர்வு ஏற்படுகிறது. அந்நேரத்தில் களைப்பின் காரணமாக நாம் ஏதாவது ஒன்றை (விருப்பமானதோ அல்லாததோ) தேர்வு செய்துவிடுவோம். எனவே, உங்களுக்கு பிடித்தவற்றைக்கு நீங்கள் உண்மையாக இருப்பது உங்களுக்கு மிகவும் நல்லது.