நீங்க சுதந்திரமா இருக்கணுமா? இந்த 7 விஷயங்களை நிறுத்தினாலே போதும்!

Freedom Man
Freedom
Published on

சுதந்திரம் என்பது விலைமதிப்பற்ற மற்றும் அதிகாரமளிக்கும் ஒன்றாகும். நாம் சுதந்திரமாக இருக்கும்போது நம் விருப்பப்படி வாழலாம். இதன் காரணமாகவே பலர் தங்கள் வாழ்க்கையில் சுதந்திரத்தை அடைய முயற்சி செய்கிறார்கள். அது தனிப்பட்ட சுதந்திரம், நிதி சுதந்திரம் அல்லது நமக்கு பிடித்ததை செய்யும் சுதந்திரம் என எதுவாக இருந்தாலும், சில பழக்கவழக்கங்கள் அவற்றை அடைவதற்கு தடையாக இருக்கின்றன. அவை என்னவென்று இப்பதிவில் பார்க்கலாம்.

  1. தள்ளிப்போடுதல்: தள்ளிப்போடுதல் என்பது உங்கள் சுதந்திரத்தைப் பறிக்கும் தீய பழக்கமாகும். முக்கிய வேலைகள் மற்றும் பொறுப்புகளை தள்ளிப் போடுவது அதிகமான மன அழுத்தத்தைக் கொடுத்து உங்களது நேரத்தின் மீதான கட்டுப்பாட்டை இழக்க வழிவகுக்கிறது. எனவே உங்களது நேரத்தை நிர்வகிக்க பயிற்சி செய்து, முக்கியமான விஷயங்களை தள்ளிப் போடாமல் உடனடியாக செய்வதற்கு முக்கியத்துவம் கொடுங்கள். 

  2. பிறரை எதிர்பார்ப்பது: நீங்கள் செய்யும் செயல்களை பிறர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஒருபோதும் எதிர்பார்க்காதீர்கள். நீங்கள் செய்யும் புதிய செயல்களைப் பற்றி பிறருக்கு ஒன்றுமே தெரியாது. அனைவருமே அவரவர் வாழ்க்கையில் ஓடிக்கொண்டிருப்பார்கள். யாருக்கும் உங்களை கண்டுகொள்ள நேரம் இருக்காது. எனவே உங்களது வாழ்க்கையை வாழ்வதற்கு பிறரை ஒருபோதும் எதிர்பாராதீர்கள். 

  3. தோல்வி பயம்: தோல்வி பயம் உங்களை முடக்கி ரிஸ்க் எடுப்பதில் இருந்தும், உங்கள் கனவுகளை பின் தொடர்வதில் இருந்தும் தடுக்கலாம். தோல்வி என்பது வாழ்க்கையில் ஒரு பகுதியாகும். இதை ஏற்றுக்கொண்டு தைரியமாக புதிய விஷயங்களை முயற்சித்து வாழ்க்கையில் முன்னேறப் பாருங்கள். 

  4. வரவுக்கு மீறிய செலவு: நிதிச்சுமைகள் உங்களது சுந்தரத்தை வெகுவாக பாதிக்கும். அதிகப்படியான கடன் மற்றும் செலவழிப்பு உங்கள் வாழ்க்கையை உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாமல் போகச் செய்யலாம். பொறுப்பான வரவு செலவுத் திட்டத்தை கையாள்வது மூலம், எதிர்காலத்துக்கு தேவையானதைச் சேமித்து, உங்கள் வாழ்க்கையில் சுதந்திரத்தை நீங்கள் அடைய முடியும். 

  5. எதிர்மறையான பேச்சு: உங்களைப் பற்றி நீங்களே எதிர்மறையாக பேசும்போது, உங்கள் மீதான நம்பிக்கை விரைவாக இழக்க வழிவகுக்கும். உங்களை நீங்களே தொடர்ந்து விமர்சித்துக் கொள்வதால், உங்கள் தன்னம்பிக்கை குறைந்து இலக்குகளை நோக்கி பயணிப்பது தடைபடுகிறது. எனவே ஒருபோதும் உங்களைப் பற்றி தவறாக பேசாதீர்கள். 

  6. மக்களை மகிழ்விப்பதை நிறுத்துங்கள்: நீங்கள் எப்போதுமே பிறருக்கு பிடித்தபடியே இருக்க வேண்டும் என நினைப்பது தவறு. இது உங்களுக்கு சிக்கலையே ஏற்படுத்தும். ஒருவன் எல்லா இடத்திலும் சரியாகவே தன்னை காட்டிக்கொள்ள முற்படுகிறான் என்றால் அவன் உண்மை இல்லை என அர்த்தம். மனிதர்களுக்குள் நல்லது கெட்டது என இரண்டுமே இருக்கும். எனவே அனைத்தையும் பிறருக்கு வெளிப்படுத்துங்கள். யாருடைய மகிழ்ச்சிக்காகவும் உங்களுடைய சுயத்தை தவறாக பிரதிபலிக்க வேண்டாம். 

  7. கடந்த காலத்தில் வாழ்வதை கைவிடுங்கள்: முடிந்த விஷயங்களை உங்களால் ஒருபோதும் மாற்ற முடியாது. எனவே கடந்த கால நிகழ்வுகளில் இருந்து பாடத்தை கற்றுக்கொண்டு, நிகழ் காலத்தை எப்படி சிறப்பாக மாற்றி அமைக்கலாம் என்பது பற்றி சிந்தியுங்கள். அது உங்களது எதிர்காலத்தை மிகச் சிறப்பாக கட்டமைக்க உதவும். எனவே, கடந்த காலத்தைப் பற்றி அதிகம் சிந்திக்காமல் நிகழ்காலத்தின் மீது கவனம் செலுத்தி, வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழுங்கள். 

இதையும் படியுங்கள்:
குழந்தைகள் தர்பூசணி பழம் சாப்பிடலாமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 
Freedom Man

இந்த 7 விஷயங்களை நீங்கள் உங்கள் வாழ்வில் கைவிடுவது மூலமாக உங்களுக்கான சுதந்திரத்தை நீங்கள் அடைய முடியும். இதை முயற்சித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com