உங்களை Confident-ஆக உணர வைக்கும் 7 தந்திரங்கள்!

7 Tricks to Make You Feel Confident.
7 Tricks to Make You Feel Confident.

உங்களுக்கு மற்றவர்களை விட Confident-ஆக இருக்க வேண்டும் என ஆசையா? அப்படியானால் இந்த பதிவில் நான் சொல்லப்போகும் 7 தந்திரங்களை அப்படியே கடைப்பிடியுங்கள். 

1. அதிகமாக செயல்களில் இறங்குங்கள்: இங்கு பெரும்பாலானவர்கள் எப்போதும் கான்ஃபிடன்ட் இல்லாமல் இருப்பதற்கு, அவர்களால் முடிந்த விஷயங்களை செய்யாமல் போவதே காரணமாக இருக்கிறது. எனவே உங்களது நேரத்தை வீணடிக்காமல், ஏதோ ஒரு செயலை முழு மூச்சுடன் உங்களின் முழு ஆற்றலையும் பயன்படுத்தி செய்து கொண்டே இருங்கள். அப்படி நீங்கள் செய்யும் செயல்களில் இருந்து உங்களுக்கான கான்ஃபிடன்ட் உயிர்த்தெழும். 

2. வாய்ப்புகளை தேடிச் செல்லுங்கள்: எவன் ஒருவன் தனக்கான வாய்ப்புகளை தேடிச் செல்கிறானோ, அவனுக்கு தன்னம்பிக்கை தானாக வரும் என சொல்லப்படுகிறது. ஏனெனில் வாய்ப்புகளைத் தேடாமல் அமைதியாக இருப்பவர்கள், தான் எதையுமே செய்யாமல் இருப்பதை நினைத்து வருந்தி சோர்வாக இருப்பார்கள். ஆனால் வாய்ப்புகளைத் தேடிச்சென்று தோல்வி அடைந்தாலும், கஷ்டப்பட்டு முயற்சித்துதானே தோற்றோம் என்ற தன்னம்பிக்கை உங்களுக்குள் ஏற்படும்.  

3. GI உணவுகளைத் தவிருங்கள்: சில உணவுகளை கொஞ்சமாக சாப்பிட்டாலே அது நமது ரத்த சர்க்கரை அளவை உடனடியாக அதிகரிக்கும். இத்தகைய உணவுகளைத் (Glycemic Index) GI உணவுகள் என்பார்கள். இந்த உணவுகள் நம்மை எப்போதும் மந்தமாகவே உணர வைக்கும். 

4. ஒல்லியாக இருக்க முயலங்கள்: என்னதான் இப்போதெல்லாம் குண்டாக இருப்பதை கிண்டல் செய்யக்கூடாது எனக் கூறினாலும், குண்டாக இருப்பதால் பல மனநல பாதிப்புகள் மற்றும் உடல் நல உபாதைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே நீங்கள் ஒல்லியாக இருந்தாலே அது உங்கள் கான்ஃபிடென்ட்டை அதிகமாக்கும். 

5. தைரியமாக பேசுங்கள்: நீங்கள் எப்படி பேசுகிறீர்கள் என்பதில் உங்களுடைய தன்னம்பிக்கை வெளிப்படுகிறது. எனவே பிறரிடம் பேசும்போது சோர்வாக பேசாமல், தன்னம்பிக்கையுடன் உங்களுடைய ஆற்றல்களை வெளிப்படுத்தும் விதமாக பேசுங்கள். அது உங்களை நீங்களே சிறப்பாக உணர வைக்கும்.

இதையும் படியுங்கள்:
கொரோனாவுக்கு அடுத்ததாக உலகில் பரவவுள்ள ஜாம்பி வைரஸ்.. ஜாக்கிரதை மக்களே! 
7 Tricks to Make You Feel Confident.

6. தோற்றாலும் கவலைப்படாதது போலவே இருங்கள்: நீங்கள் ஏதோ ஒரு விஷயத்தை முயன்று தோற்றுவிட்டீர்கள் என்றால், பிறரிடம் நீங்கள் தோற்றதை எண்ணி கவலைப்படுவது போல காட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பிறர் தாழ்வாக பார்க்க வைத்துவிடும். எனவே தோல்விகளை நீங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்வது போலவே இருங்கள். தேவையில்லாமல் அந்த உணர்ச்சிகளை பிறரிடம் வெளிப்படுத்த வேண்டாம்.

7. உங்களுக்கு நீங்களே ராஜா: எப்போதுமே உங்களுடைய செயல்களுக்கு பிறர் அங்கீகாரம் வழங்க வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள். நீங்கள் செய்த சிறப்பான விஷயங்களை நினைத்து நீங்களே பெருமிதம் கொள்ளுங்கள். எந்த சூழ்நிலையிலும், யாருக்காகவும், எதற்காகவும் காத்திராமல் உங்கள் வேலையை நீங்கள் செய்தாலே, தைரியமாக எதையும் எதிர்கொள்ளும் மனநிலை உங்களுக்கு கிடைத்துவிடும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com