கோடைகாலத்தில் உணவில் நெய் சேர்த்தால் இவ்வளவு நன்மைகளா?

Benefits of adding ghee to food in summer.
Benefits of adding ghee to food in summer.

தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகளில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய பொருளாக நெய் உள்ளது. இது எல்லா பருவங்களிலும் சாப்பிடும் பிரபலமான ஒன்றாக இருந்தாலும், கோடைகாலங்களில் உணவில் சேர்க்கப்படும்போது குறிப்பிட்ட சில நன்மைகளை வழங்குகிறது. 

இந்தப் பதிவில் தமிழகத்தில் கோடைகாலத்தில் உணவில் நெய் சேர்ப்பதால் கிடைக்கும் சில நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

  1. குளிர்ச்சி தரும்: கோடைகாலத்தில் நெய்யை உட்கொள்வது உடலுக்கு மிகவும் நல்லதாகும். குறிப்பாக நெய் உடலுக்கு குளிர்ச்சி தரும் என்பதால், உடல் உஷ்ணத்தைத் தணிக்க உதவுகிறது. எனவே கோடை காலத்துக்கு நெய் ஒரு சிறந்த உணவாகும்.

  2. சருமத்திற்கு நல்லது: வெயில் காலத்தில் சருமம் விரைவில் வறண்டு விடும் என்பதால், நெய் சாப்பிடுவது மூலமாக சருமத்தில் இயற்கையாகவே ஈரப்பதத்தை அதிகரிக்க முடியும். மேலும் நெய் உங்களை உட்புறமாக நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. இதன் மூலமாக சருமம் மென்மையாக இருக்கும்.

  3. செரிமானத்துக்கு உதவும்: காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் நெய்யை உட்கொள்வது மூலமாக, செரிமானம் மேம்படுவதாக சொல்லப்படுகிறது. மேலும் இது பித்த தோஷத்தையும் கட்டுப்படுத்துமாம். இதில் ஆன்டிவைரஸ் எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் பல்வேறு விதமான நோய்களை தடுக்கும் ஆற்றல் உள்ளது. எனவே கோடைகாலத்தில் தினசரி காலையில் நெய்யை சாப்பிட்டு வந்தால், பல்வேறு விதமான நன்மைகளை அடையலாம்.

  4. நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும்: தினசரி நெய் சாப்பிடுவதால் நமது நோய் எதிர்ப்பு ஆற்றல் வலுப்பெறுகிறது. இதனால் பல்வேறு விதமான தொற்று நோய்களிலிருந்து நாம் பாதுகாப்புடன் இருக்கலாம். இதில் இருக்கும் யூரிக் அமிலம், நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த உதவுகிறது. குறிப்பாக இதில் விட்டமின் சி மற்றும் ஏ நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு மண்டலம் ஒட்டுமொத்தமாக சிறப்பாக மாறுகிறது.

  5. ஆரோக்கியக் கொழுப்பு: நெய்யில் ஆரோக்கியக் கொழுப்பு நிறைந்துள்ளதால், உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் நமது அன்றாட ஆற்றல் தேவையைப் பூர்த்தி செய்கிறது. இதன் மூலமாக உடலில் முக்கியமான ஹார்மோன்கள் உற்பத்தியாவது தூண்டப்படுகிறது. எனவே கோடைகாலத்தில் உங்கள் உணவில் நெய்யை கட்டாயம் சேர்த்துக் கொள்ளுங்கள். 

இதையும் படியுங்கள்:
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் Golden Recipe!
Benefits of adding ghee to food in summer.

நெய்யில் பல நன்மைகள் இருந்தாலும் அதில் அதிக கலோரி இருப்பதால் மிதமாகவே உட்கொள்ள வேண்டும். மேலும் இதுகுறித்து உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் தகுந்த சுகாதார நிபுணர்களை சந்தித்து ஆலோசனை பெறுவது அறிவுறுத்தப்படுகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com