நேரத்தை வீணடிக்காமல் இருக்க 7 வழிமுறைகள்!

motivation article
motivation articleImage credit - pixabay
Published on

து முக்கியம் என்பதை உணர்ந்து செயல்படுங்கள். 'ஒரே கல்லில் இரண்டு மாங்காய்' என்ற பழமொழி கேட்பதற்கு நன்றாக இருக்கும். ஆனால், பல மாங்காய்களைக் குறிவைத்து ஒரு கல்லை என்பவனுக்கு எதுவுமே கிடைக்காது. உங்களுக்கு தொடர்பில்லாத, தேவை இல்லாத எந்த விஷயத்திலும் பார்வையை திருப்பாதீர்கள். இதனால் நேரம் வீணாகும்.

அடுத்தவர்கள் என்ன  சொல்வார்களோ  என்று யோசித்து, தயங்கி எதையும் செய்யாமல் நேரத்தைக் கடத்தாதீர்கள். இந்த உலகம் வேகமானதாக மாறிவிட்டது. எல்லோருக்கும் செய்வதற்கு நிறைய வேலைகள் உள்ளன.

நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று பார்த்துக்கொண்டே இருந்து உங்களை விமர்சனம் செய்ய யாருக்கும் நேரம் இல்லை. அப்படி யாராவது செய்தால் அவர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் என்று அர்த்தம். அதை  பொருட்படுத்தாதீர்கள்.

அடுத்தவர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதற்காக உங்களுக்கு பிடிக்காத வேலைகளை செய்யாதீர்கள். இதனால் இரண்டு பாதிப்புகள். ஒன்று அந்த செயலில் உங்களுக்கு சந்தோஷம் கிடைக்காது. இரண்டு சந்தோஷம் தராத செயலை செய்வதால் வழக்கமான நேரத்தை விட கூடுதல் நேரம் தேவைப்படும் உங்கள் நேரம்தான் வீணாகும்.

இதையும் படியுங்கள்:
நாம் செய்யும் செயல்களுக்கு நாமே பொறுப்பு!
motivation article

எந்த வேலையானாலும்  எல்லாவற்றையும் நீங்களே செய்ய நினைக்காதீர்கள். களைத்துப்போய் விடுவீர்கள் வேலைகளை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள். இணைந்து செயல்பட்டால் நேரம் வீணாகாது. அடுத்தவர்களுடன் உங்களை ஒப்பிடாதீர்கள். இதனால் உங்கள் நினைப்பு உங்கள் நேரத்தையே விழுங்கும். இதனால் கசப்பு உணர்வும், பொறாமை, விரக்தி மட்டுமே மிஞ்சும். இதனால் உங்கள் நிம்மதி கெடும். நேரத்தை இதில் வீணாக்க வேண்டாம்.

நினைத்த ஒரு விஷயம் தவறாக முடிந்தால் யார் மீதும் புகார் சொல்லாமல், இது கிடைத்திருந்தால் தப்பு நடந்திருக்காது. இவர் உதவியிருந்தால் இப்படி ஆகியிருக்காது என்றெல்லாம் புலம்பாமல் தவறை உங்கள் முயற்சியால் சரி செய்யுங்கள். இதனால் நேரம் வீணாகாது.

எல்லாவற்றிலும் கச்சிதம் தேடாதீர்கள். 'இந்த செயலை இப்படி முடிப்பதற்கு இதெல்லாம் தேவை. இதைச் செய்ய இந்த நேரத்துத்துக் காக காத்திருக்க வேண்டும் என்றெல்லாம் நினைக்காமல், சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் மிக நீண்ட நேரத்தை வீணாக்காதீர்கள். மனதில் தோன்றும் நிமிடத்தில் செயலில் இறங்கினால் நேரம் வீணாகாது. காலம் பொன் போன்றது. அதனை சரியான நேரத்தில், சரியான முறையில் பயன்படுத்தினால் நேரம் உங்களை தேடி வரும். வெற்றியும் கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com