உங்களைப் புது மனிதனாக மாற்றும் 8 சிறப்பு வாய்ந்த தத்துவங்கள்!

Motivation
Motivation

ஒரு விடியலைக் காண வேண்டுமென்றால் ஒரு இரவை நாம் கடந்துதான் ஆக வேண்டும். ஆனால் இயற்கை போல் வாழ்க்கையல்ல. நமக்கு ஏற்ற நேரத்திற்காக காத்திருக்கும் ஒவ்வொரு வினாடியும் ஒரு இழப்புத்தான். அப்போது நம்மை வெளியே கொண்டுவர சில நேரம் நமக்கு தத்துவங்களே துணைபுரிகின்றன.

சிலர், பேருந்தில், ஆட்டோவில், சாலையோர சுவற்றில் எழுதியிருக்கும் தத்துவங்களைப் படித்து பெரிய அளவில் பயனடைந்திருப்பார்கள். இதுபோல படிப்பது ஒரு வகை என்றால், மற்றொன்று மனம் கவலைக் கொள்கையில், தாமாகத் தேடிப் படிப்பது. அந்தவகையில் சில எழுத்தாளர்கள் கூறிய வாழ்க்கைத் தத்துவங்களைப் பற்றி பார்ப்போம்.

1.  எப்போதும் அனைவரையும் புகழ்ந்து கொண்டே இருக்கும் நபர்களையும், உங்களையும் புகழ்ந்து கொண்டே இருக்கும் மனிதர்களையும் நம்பவே நம்பாதீர்கள். – John Churton Collins.

2.  உங்களுக்காக சில நேரங்களை நீங்கள் ஒதுக்கும்போதோ இல்லை உங்களுக்கான நேரம் கிடைக்கும்போதோ புத்தகங்களைப் படியுங்கள். – Hojo Soun.

3.  முதலில் நீங்கள் பேசப் போவதற்கான அர்த்தங்களைத் தெரிந்துக்கொண்டும், புரிந்துக்கொண்ட பிறகும் மற்றவர்களிடம் பேசுங்கள். – Epictetus

4.  உங்களிடம் ஒரு பூங்காவும், ஒரு நூலகமும் இருந்தால் உங்களுக்கு வேண்டியது அனைத்தும் கிடைத்துவிடும்.- Marcus Tullius Cicero.

5.  காலையில் யோசியுங்கள், மதியம் செயல்படுங்கள், மாலை உணவருந்துகள், இரவு தூங்கிவிடுங்கள். – William Blake

6.  எல்லா கஷ்டங்களும் நீங்கள் தவறான இடத்தில் இருக்கும்போதே வரும். நீங்கள் ஒரு இடத்தில் இருக்கும்போது சந்தோஷமாக இல்லையென்றால் அந்த இடத்தை விட்டு விலகிவிடுங்கள். – Timothy Leary

7.  திட்டம் செய்து ஆபத்தில் இறங்குவதற்கும், முடியாது என்பதற்கும் சிறிய வித்தியாசம் உள்ளது. – George S. Patton

இதையும் படியுங்கள்:
வளமான வாழ்வுக்கு வழிகாட்டும் 10 ஜப்பானிய கோட்பாடுகள் பற்றி தெரியுமா?
Motivation

8.  உங்கள் பிரச்சனைகளை உங்களுடன் இருப்பவர்களிடம் கூறினால் 80 சதவீத நபர்கள் அதைக் கண்டுக்கொள்ள மாட்டார்கள். மற்ற இருபது சதவீதம் பேர் நீங்கள் பிரச்சனையில் உள்ளீர்கள் என்று எண்ணி சந்தோஷப் படுவார்கள்.- Tommy Lasorda

இந்த 8 தத்துவங்களைப் புரிந்துக்கொண்டால் நிச்சயம் உங்கள் வாழ்வில் சிறு மாற்றத்தையாவது நீங்கள் காண்பீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com