வளமான வாழ்வுக்கு வழிகாட்டும் 10 ஜப்பானிய கோட்பாடுகள் பற்றி தெரியுமா?

Motivation Image
Motivation Imagepixabay.com

லகில் நீண்ட ஆயுளுடன் வாழும் மக்கள் அதிகமுள்ள நாடுகளில் ஒன்று ஜப்பான். அந்நாட்டின் மக்கள் நீண்ட ஆயுளுடன் வாழ காரணம் அவர்கள் கடைபிடிக்கும் உடல் நலமும், மன நலமும் இணைந்த சிறந்த வாழ்வியல் முறையும், கோட்பாடுகளும்தான். ஜப்பானியர்கள் கடைபிடிக்கும் வாழ்வில் மேன்மை தரும் கோட்பாடுகள் சுருக்கமாக...

ங்களை யாரோடும் ஒப்பிடாதீர்கள், வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறப்பு அம்சம் உண்டு. எனவே எப்போதும் உங்களை யாருடனும் கம்பேர் செய்யாதீர்கள். அது உங்களின் தன்னம்பிக்கை குறைவுக்கு காரணமாக அமையும்.

ங்களை தொடர்ந்து இம்புரூவ் செய்து கொள்ளுங்கள். நீங்கள் மேற் கொள்ளும் சின்னஞ்சிறு மாற்றங்கள் கூட உங்களுக்கு நல்ல வித்தியாசமான பலன்களை தரலாம். மாற்றங்களை தொடர்ச்சியாக செய்து அதன் மூலம் பெரிய பெரிய வெற்றிகளை பெறலாம்.

நீங்கள் செய்யும் தவறுகளை ஏற்றுக்கொள்ள பழகுங்கள். தவறு செய்வது மனித இயல்பு, உடனே அதை திருத்திக்கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் தவறுகளை ரசிக்க பழகுங்கள். மாறாக மூட் அவுட் ஆகாதீர்கள் சிக்கலான விஷயங்களை உள்ளது உள்ளபடி. ஏற்றுக்கொள்ளுங்கள். அதே நேரத்தில் அதில் இருக்கும் நல்ல விஷயங்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்.

வாழ்க்கையில் எதுவும் வீணாகிப்போவதில்லை, அனைத்தையும் ஏற்றுக்கொள்ளுங்கள். நடந்ததற்கு நன்றியாக இருங்கள். நடந்தவற்றில்  பாடம் கற்றுக்கொள்ளுங்கள்.

து நடந்தாலும் அதை  பொறுமையாக ஏற்றுக்கொள்ளும் மன பக்குவமும், சுய கட்டுபாடும்  அவசியம். எது நடந்தாலும் உணர்ச்சிவசப்படாதீர்கள். வாழ்க்கையில் பொறுமை, விடாமுயற்சி, சகிப்புத்தன்மை அவசியம்.

நீங்கள் பார்ப்பதில் உள்ள அழகை ரசியுங்கள், நல்லதை எங்கிருந்தாலும் பாராட்டுகள். அதில் பாடம் கற்க முயலுங்கள்.

வாழ்நாள்  முழுவதும் தொடர்ந்து செல்லும் படியான ஒன்றை தேர்ந்தெடுத்து அதன்படியே செல்லுங்கள். வாழ்வில் பிடித்ததை செய்யுங்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகளை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளும்படி பொறுமையாக விளக்குங்கள், விவரியுங்கள் விவாதம் செய்யாதீர்கள்.

இதையும் படியுங்கள்:
கிட்னி கல்லை கரைக்கும் அற்புதக் காய்.. மாதம் ஒருமுறையாவது சாப்பிடுங்க! 
Motivation Image

வாழ்க்கையில் எது நடந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளுங்கள். சில சமயங்களில் சில உங்கள் கட்டுப்பாட்டையும் மீறி நடக்கலாம். உங்களால் மாற்ற முடியாததை, ஏற்க முடியாததை மற்றவர்களிடம்  தெளிவுபடுத்திவிடுங்கள். அடுத்த வேளையில் கவனம் செலுத்துங்கள்.

ன்றாடம் நாம் செய்யும் செயல்களை எடை போடுங்கள். தவறு இருந்தால் உங்களை திருத்திக்கொள்ளுங்கள்..

மற்றவர்களின் தயவு இல்லாமல் நம் வாழ்வு நகராது  எனவே நம்மை சுற்றி இருப்பவர்களை அனுசரித்து செல்லுங்கள், அவர்களை மரியாதையுடன் நடத்துங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com