இந்த 8 பழக்கங்கள் உங்கள் மூளையை சேதப்படுத்தும்!

Habits that Damaging Your Brain!
Habits that Damaging Your Brain!

தற்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வேகமான தொழில்நுட்ப உலகில் நமது தினசரி பழக்கவழக்கங்களால் நம் மூளையின் ஆரோக்கியம் கணிசமாக பாதிக்கப்படுகிறது. நாம் தூங்குவது முதல் அதிக நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது வரை நாம் செய்யும் ஒவ்வொரு செல்களினாலும் மூளை வெகுவாக பாதிக்கப்படுகிறது. அந்த வகையில், நமது மூளையை சேதப்படுத்தும் 8 பழக்கங்கள் என்னென்ன என்பது பற்றி ஆராயலாம். 

  1. மோசமான தூக்க முறை: இரவு நேரத்தில் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துவிட்டதால், யாருமே சரியாக தூங்குவதில்லை. ஒருவர் சரியாக தூங்காதபோது மனச்சோர்வு பிரச்சனைகள், உடல் சோர்வு, அறிவாற்றல் குறைபாடு, நினைவாற்றல் மற்றும் நரம்பியல் பாதிப்புகள் ஏற்படும் ஆபத்துக்கள் உள்ளது. 

  2. அரிதாக நகருதல்: நமது உடல் அதிக நேரம் செயலற்ற நிலையில் இருக்கும்போது, அது உடலை மட்டுமின்றி மூளையையும் வெகுவாக பாதிக்கும். மூளைக்கான ரத்த ஓட்டம் குறைந்து, அறிவாற்றல் செயல்பாட்டை பாதித்து மனநல பிரச்சினைகள் உண்டாக வழிவகுக்கும். எனவே ஒரு நாளில் அதிக நேரம் உடல் அசைவின்றி ஒரே இடத்தில் இருக்காதீர்கள். 

  3. அதிக Screen Timing: இப்போது மக்களிடையே ஸ்மார்ட் போன், கம்ப்யூட்டர், லேப்டாப் என எலக்ட்ரானிக் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. இத்தகைய சாதனங்களில் இருந்து வெளிவரும் Blue Light நமது தூக்கத்தை சீர்குலைத்து கண் சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக இது நமது அறிவாற்றல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என சொல்லப்படுகிறது. 

  4. அதிக சர்க்கரை உட்கொள்வது: நாம் அதிக சர்க்கரை உட்கொள்ளும்போது அது மூளையில் வீக்கத்தை ஏற்படுத்தி, அறிவாற்றல் செயல்பாட்டை பாதிக்குமாம். இதனால் அல்சைமர் போன்ற நோய்கள் ஏற்படலாம். 

  5. அதிக ஒலியில் ஹெட்ஃபோன் பயன்படுத்துவது: நீண்ட நேரம் ஹெட் போன் வழியே அதிக சத்தத்தில் பாடல்கள் கேட்கும்போது, அது நம் செவியை பாதித்து மூளை நரம்புகளை பலவீனமாக்கும். 

  6. சமூக தனிமைப்படுத்துதல்: இயற்கையாகவே மனிதர்கள் கூட்டமாக வாழும் சமூக விலங்குகள். இதிலிருந்து ஒருவர் தன்னை அதிகமாக தனிமைப்படுத்திக் கொள்ளும்போது மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் மூளை சார்ந்த வேறு சில பாதிப்புகளுக்கு அது வழிவகுக்கும்.

  7. நெகட்டிவ் செய்திகளை அதிகம் பார்ப்பது: ஒருவர் தொடர்ச்சியாக எதிர்மறையான செய்திகளை தன் மூளைக்குள் செலுத்தும்போது மன அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே தொலைக்காட்சி, இணையம் என உங்களுக்கு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் செய்திகளை தவிர்ப்பது நல்லது. 

  8. அதிகமாக இருட்டில் இருப்பது: இயற்கையான வெளிச்சத்தை பெறாமல் அதிக நேரம் இருட்டிலேயே நேரம் செலவழிக்கும் பழக்கமானது, ஒருவரின் Circadian Rhythms எனப்படும் தூக்க முறையை முற்றிலுமாக பாதித்து, பலவிதமான மூளை சார்ந்த பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். 

இதையும் படியுங்கள்:
மனச்சோர்வை குறைக்கும் 5 பழக்கங்கள்!
Habits that Damaging Your Brain!

என்னதான் நவீனமயமாக்கப்பட்ட வாழ்க்கைமுறை தேவைதான் என்றாலும், நமது மூளையின் ஆரோக்கியத்தை இத்தகைய பழக்கங்கள் பாதிக்கும்போது, அதில் நாம் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். இந்த 8 பழக்கங்களை கைவிட்டு தினசரி முறையாக ஒருவர் தூங்கி, உடல் செயல்பாடுகளில் ஈடுபட்டு, மக்களுடன் பழகி சமூகத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டால், அது நேர்மறையான மாற்றங்களை நமது வாழ்வில் கொண்டு வரும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com