நேர்மறை எண்ணங்களைத் தக்கவைத்துக் கொள்ள 8 உத்திகள்!

motivation article
motivation articleImage credit - pixabay
Published on

திர்பாராத அல்லது சவாலான சூழ்நிலைகளில் நேர்மறையான மனநிலையைப் (Positive mindset) பின்பற்றுவது  நமது நல்வாழ்வுக்கு மிகவும் அவசியம். நம் வாழ்க்கை நம்மை பல்வேறு வளைவுகளில் அழைத்துச் செல்கிறது. அதில் எல்லா நேரத்திலும் நம் மனநிலையை எவ்வாறு நேர்மறையான எண்ணங்களால் கொண்டு செல்லலாம் என்பதற்கான உத்திகளை பற்றி தெரிந்து கொள்வோம்.   

1. உங்களிடம் இருக்கும் பலத்தில் கவனம் செலுத்துங்கள்

நமது பலவீனங்கள் அல்லது தோல்விகளைப் பற்றி சிந்திப்பதற்குப் பதிலாக, நமது பலத்தில் கவனம் செலுத்துவோம். உங்களைத் தனித்துவமாகவும் திறமையாகவும் மாற்றும் குணங்களை வேறு யாரும் அங்கீகரிக்க வேண்டாம், அதற்கு நீங்களே முக்கியத்துவம் கொடுங்கள். அவ்வாறு செய்வதன் மூலம், உங்களைப் பற்றி நீங்கள் மிகவும் நேர்மறையாக உணர்வீர்கள்.

2. நன்றியுணர்வுக்கான பயிற்சி 

நன்றியுணர்வு என்பது மரியாதைக்கு அப்பாற்பட்டது. ஒவ்வொரு நாளும் நன்றியுணர்வுடன் இருக்க வேண்டிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். காரணம் நன்றியுணர்வு நல்ல நோக்கத்துடன் செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தை உங்கள் மனதில் உண்டாக்கும்.

3. உங்கள் நேர்மறையான குணங்களை பிரதிபலிக்கவும்

உங்களிடம் உள்ள ஏதோ ஒரு நல்ல விஷயம் எந்த வகையில் மற்றவரிடம் பிரதிபலிக்கிறது என்பதை சற்று சிந்தித்து பாருங்கள். நீங்கள் உறுதியானவரா? விவரம் சார்ந்தவரா? அல்லது இரக்கம் உள்ளவரா? இப்படி உங்களை பற்றிய நேர்மறையான குணங்களின் பட்டியலை உருவாக்கிக்கொள்ளுங்கள். 

4. சுய பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுங்கள்

உங்களை நீங்களே கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியமானது. தேவையான நேரங்களில் நீங்களே எடுத்துக்கொள்ளும் இடைவெளிகள், கொண்டாட வேண்டிய மகிழ்ச்சியான தருணங்கள் மற்றும் தேவையான சுய-கவனிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் நீங்கள் உங்களுக்கான நேர்மறையான சுய-பிம்பத்தை வளர்த்துக்கொள்வீர்கள். உங்களுக்குத் தேவையான பராமரிப்புகளை நீங்களே பார்த்துக்கொண்டால், அதைத் தாண்டி நீங்கள் சந்திக்கும் எந்தச் சூழ்நிலையையும் திறம்பட சமாளிக்கும் பக்குவத்திற்கு வந்துவிடுவீர்கள்.

5. எதிர்மறை எண்ணங்களிலிருந்து உங்கள் கவனத்தை மாற்றவும்

நம் மனதில் இயற்கையாகவே எதிர்மறை சார்பு உள்ளது. இதனால் நாம் எதிர்மறை எண்ணத்தில் கவனம் செலுத்துவதற்கு எளிதாக தள்ளப்படுவோம். எதிர்மறை எண்ணங்களில் இருந்து உங்களை நீங்களே திசைதிருப்ப. ஓடுவது, நடப்பது, உடற்பயிற்சி போன்ற உடல் செயல்பாடுகளில் ஈடுபடுங்கள். 

6. நகைச்சுவையைக் கண்டறியவும்

சிரிப்பு ஒரு சக்திவாய்ந்த கருவி. உங்களைச் சிரிக்க வைக்கும் அல்லது வேடிக்கையான வீடியோக்களைப் பார்க்கும் நபர்களுடன் நேரத்தைச் செலவிடுங்கள். நகைச்சுவை மன அழுத்தத்தை குறைத்து நேர்மறை மனநிலைக்கு பங்களிக்கும். இதை தக்க வைப்பதன் மூலம் நீங்கள் பல சூழ்நிலைகளைக் கூலாக கையாளலாம்.

இதையும் படியுங்கள்:
எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்ளுங்கள்; ஏற்றம் நிச்சயம்!
motivation article

7. சவால்களை சமாளிப்போம் வாய்ப்புகளாகப் பார்க்கவும்

சவால்களை வாய்ப்புகளாக பார்க்கத் தொடங்குங்கள். அதற்கு பயந்தோ அல்லது அதைப் பற்றியே நினைத்தோ மன உளைச்சலுக்கு ஆளாகாதீர்கள். மாறாக, தடைகளைத் தாண்டி, பல மதிப்புமிக்க பாடங்களைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளாக அவற்றை பார்க்க தொடங்குங்கள் .

8. திறம்பட நிர்வகியுங்கள் மற்றும் 'இல்லை' என்று சொல்ல கற்றுக்கொள்ளுங்கள்

பணிகளுக்கு ஏதார்த்தமான முன்னுரிமையைக் கொடுங்கள், சில நேரங்களில் அதை செயல்படுத்த முடியாத பட்சத்தில் உங்கள் மனதை ஒருநிலைப்படுத்தி தேவைப்படும் போது 'இல்லை', ‘முடியாது’ என்று சொல்லத் தயங்காதீர்கள். காரணம் முடியாத ஒன்றை முடியும் என்று சொல்லி பிறரிடம் சமாளிப்பதை விட உங்கள் நேரத்தையும் கடமைகளையும் உங்கள் சூழ்நிலைக்கேற்ப  நிர்வகிப்பதன் மூலம், நீங்கள் மன அழுத்தத்தைக் குறைத்து நேர்மறையான கண்ணோட்டத்தை இயல்பாக பெறுவீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com