கோபம் தலைக்கேறிய நபர்களை கூல் டவுன் செய்ய 8 தலையாய உத்திகள்!

Motivation Image
Motivation ImageImage credit - pixabay.com
Published on

ரோக்கியமான உறவுகளையும் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் பராமரிக்க கோபத்தை நிர்வகிப்பது அவசியம். யாராவது கோபமாக இருக்கும் போது, ​​​​அவர்களை குளிர்விக்க நீங்கள் பல உத்திகளை பயன்படுத்தலாம். அதை பற்றி தெரிந்து கொள்வோம்:

1. தூண்டுதல்களை அடையாளம் காணவும்:

கோபத்தைத் தூண்டுவது எது என்பதைப் முதலில் புரிந்து கொள்வது முக்கியம். அவரது கோபம் அதிகரிக்க செய்யும் குறிப்பிட்ட சூழ்நிலைகள் அல்லது நிகழ்வுகளை அடையாளம் காண அந்த நபரிடம் கொஞ்சம் நிதானமாக பேச்சு கொடுங்கள். தூண்டுதல்களைக் கண்டறிவதன் மூலம், அவற்றைத் தவிர்க்க அல்லது மிகவும் திறம்பட நிர்வகிப்பதில் உங்களால் முடிந்த விஷயங்களை செய்தோ அல்லது சில அறிவுரைகளை அவர்களுடன் பகிர்ந்தோ, கோபத்தை தணிக்க முயற்சி செய்யலாம்.

2. அமைதியாக இருங்கள்:

கோபமாக இருப்பவர்களுடன்  பேசும் போது அமைதியாக இருங்கள். உங்கள் சொந்த உணர்ச்சி நிலை அவர்களுக்கு சில தாக்கங்களை ஏற்படுத்தலாம். காரணம் பொதுவாக கோபத்தில் இருக்கும் நபர்கள் எதிரில் உள்ளவர்கள் என்ன தான் சொன்னாலும் அதை கவனிக்காமல் கத்தி கொண்டே இருப்பார்கள். இது சில நேரங்களில் நமக்கு எரிச்சலை உண்டாகும். ஆனால் அந்த நேரத்தில் நாம் பொறுமையை கடைபிடித்தால், அந்த அமைதியே எதிரில் உள்ளவரின் கோபத்தை தணிந்துவிடும்.  

3. தெளிவாக கேளுங்கள்:

கோபப்பட்ட நபரின் முன்னிலையில் நீங்கள் தெளிவாகத்தான் இருக்கிறீர்கள் என்பதாக முதலில் காட்டி கொள்ளுங்கள். ஏதோ ஒரு விஷயத்தில் பாதிக்கப் பட்டதால் சில நபர்களுக்கு கோபம் உண்டாகியிருக்கும். அப்போது அந்த நபர் தன் உள்மனதில் இருந்து நிறைய விஷயங்களை தன் புலம்பல்கள் மூலமாக உங்களிடம் கூறுவது போல் கொட்டி தீர்த்து விடுவார். இறுதியில் அதுவே அந்த நபரின் கோபத்தை தணிந்துவிடும் செயலாக மாறலாம்.

5. பரிதாபம் காட்டுங்கள்:

சில பேர் கண்ணீருடன் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவார்கள். நீங்கள் அவர்களின் சூழ்நிலையை புரிந்து கொண்டு உங்கள் பரிதாபத்தை  வெளிப்படுத்துங்கள். எடுத்துக்காட்டாக, ‘நீங்கள் ஏன் வருத்தப்படுகிறீர்கள் என்பதை என்னால் பார்க்க முடிகிறது’ அல்லது ‘இந்தச் சூழல் உங்களுக்கு எவ்வளவு ஏமாற்றமாக இருக்கும் என்பதை நான் புரிந்து கொள்கிறேன்’ என்பதுபோல நீங்கள் கூறும்போது, அவர்களின் மனம்  இலகுவாக மாறும். 

6. மன்னிப்பு கேட்க தயங்காதீர்கள்: 

அவர்களின் கோபத்திற்கு காரணமான தவறு நீங்கள் ஏதேனும் செய்திருந்தால், நேர்மையான மன்னிப்பு கேளுங்கள். மன்னிப்பு கேட்பது உங்களை பலவீனப்படுத்தாது. மாறாக, அது உங்களின் முதிர்ச்சியையும், உங்களுக்கு  அவரின் மேல் உள்ள மரியாதையும் வெளிக்காட்டுகிறது, இதுவே  அவர்களின் கோபத்தை தணித்து விடும். 

இதையும் படியுங்கள்:
உற்சாகமும் பயனும் தரும் பொழுதுபோக்குகள் எவை தெரியுமா?
Motivation Image

7. நகைச்சுவையுடன் சூழ்நிலையை இலகுவாக்குங்கள்:

பொருத்தமான நகைச்சுவை பதற்றத்தை சில நேரங்களில் தணிக்க உதவும். ஆனால்  நகைச்சுவைக்கும் சில கால நேரம் உள்ளது. அதனால் அவர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தாமல் எச்சரிக்கையாக இருப்பது அவசியம், ஆனால் சரியான நேரத்தில் நாம் வெளிப்படுத்தும் நகைச்சுவை உணர்வு அல்லது கருத்துக்கள், கோபம் அடைந்தவரின் மனதை திசை திருப்பி இயல்பு நிலைக்கு கொண்டு வரும்.

8. இடம் கொடுங்கள்:

சில நேரங்களில் கோபப்பட்ட நபர்களுக்கு மனதை ஒரு நிலை படுத்த நேரம் தேவைப்படும். இதனால் அவர்கள் தனியாக இருக்க விரும்புவார்கள். நீங்களும் அதை புரிந்து கொண்டு அவர்களை தனியாக விட்டுவிடுங்கள். சிறிது நேரம் கழித்து நீங்களே அந்த நபரை தொடர்பு கொண்டு, ‘இப்போது நான் பேச வரலாமா’ என்று கேட்டு உங்கள் கருத்தைப் பகிர ஆரம்பியுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com