தொழிலில் வெற்றி பெறுவதற்கான 8 வழிகள்!

motivation Image
motivation ImageImage credit - pixabay.com

1. தீர்மானித்து விட்டீர்கள் அல்லவா. இன்னும் எவ்வளவு நாட்கள் வீணாக்கப் போகிறீர்கள். செயலில் இறங்கு. இறங்கிப் பார்த்தால் எல்லாம் புரியும். தன்னம்பிக்கை மேவும். நீ வெற்றி மேல் வெற்றி பெறுவாய்.

2.  இதோ பார்!. உன் பொருட்களை வாங்குபவர்கள் யார் அவர்கள் என்ன காரணத்திற்காக உன் பொருளை வாங்குகிறார்கள் என்று தெரிந்துகொள். உன் பொருளிலிருந்து அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று பேச்சுக் கொடுத்தால் சொல்வார்கள். கவனி. எப்போதும் அவர்கள் அருகில் இரு.

3. நீயாகச் செய். யாரையும் சார்ந்து நிற்காதே. சவால்களை சமாளி. தப்பிக்கப் பார்க்காதே. உடன் வேலை செய்பவர்களை உற்சாகப் படுத்து. அவர்களுக்குச் சுதந்திரம் கொடு. தனது நிறுவனம் போல் அவர்கள் எண்ணி செயல்படும் அளவிற்கு சூழ்நிலையை உருவாக்கு. போட்டியாளர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதிலும் கவனம் வை.

4. தொழிலாளர்கள் எவ்வளவு சிறப்பாக செய்கிறார்களோ, எவ்வளவு பொறுப்புணர்வுடன்  செய்கிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு உன் தொழில் உற்பத்தி பெருகும். அவர்கள் குடும்பம் மகிழ்ச்சியாக இருந்தால்  நிறுவனத்தில் அவர்கள் மனநிறைவுடன் வேலை செய்வார்கள். எனவே அவர்கள் மனநிறைவில் கவனம் வை. வருமானத்தில் ஒரு பகுதியை அவர்களுடன் பகிர்ந்து கொள்.அடிக்கடி அவர்களை ஊக்கப்படுத்து.

5.  வேலை நடக்கும் இடத்திற்கு போய்ப் பார். தவறாக செய்தால் நீ செய்து காட்டு. இதனால் உன் பெருமை தாழ்ந்து விடாது. 

இதையும் படியுங்கள்:
சாப விமோசனமும், வையகம் போற்றும் வைகாசி விசாகமும்!
motivation Image

6. பலர் தோற்பதற்குக் காரணம் தங்களின் முக்கிய தொழிலில் இருந்து  பல்வேறு சிறுதொழில்களைத் தொடங்கி கவனத்தை சிதற விட்டுவிடுவார்கள். உன் சிந்தனை உன் கவனம் எல்லாம் உன் அடிப்படைத் தொழிலில் இருக்க வேண்டும். எங்கிருந்து உன் வருமானம், ஆதாயம், பெருமை எல்லாம் வருகிறதென்ற அடிப்படையை நன்றாகத் தெரிந்து கொள்.

7. அமைப்பு சிறிதாக தெளிவாக இருக்கட்டும். தேவைக்கு மேல் வேலைக்கு ஆள் போடாதே. வேலை நடக்காது.

8.  வேலை செய்பவர்களிடம் கெடுபிடியாகவும் இருக்கக்கூடாது. அவர்களை சுதந்திரமாகவும் விட்டுவிட முடியாது. வேலை செய்பவரது தனித்திறமை வெளிவரும்படி சுதந்திரம் கொடு. தாங்கள் சொல்கிற யோசனையை செயல்படுத்தி வெற்றி காணமுடியும் என்று சொல்வார்களானால் அதற்கு வாய்ப்பு கொடு.  இப்படி தொழிலாளர்களை ஊக்கப்படுத்திதான்  பல நிறுவனங்கள்  புதிய பொருட்களை கொண்டு வந்திருக்கின்றன. அந்த யோசனைகளில் உங்கள் தொழிலுக்கு ஏற்ப பயன்படுத்துங்கள் வெற்றி நிச்சயம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com