சில மாறுதல்கள் சிறப்பான மகிழ்ச்சியை ஏற்படுத்தும்!

motivation article
motivation articleImage credit - pixabay
Published on

ம் வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லை என்று நாம் நினைப்போம். ஆனால் அதற்காக மகிழ்ச்சியை வரவழைத்துக் கொள்ள சின்ன சின்ன முயற்சிகளை கூட நாம் செய்யாமல் இருப்போம்.

அன்றாட வாழ்க்கையில் சில எளிமையான மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டாலே மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உத்தரவாதம் கிடைக்கும்.

நாம் வேலை செய்யும் இடத்திலும் சரி வீட்டிலும் சரி வெளியிலும் சரி மகிழ்ச்சி என்பது நம் கையில்தான் உள்ளது. நாம் நடந்து கொள்ளும் விதமும், நாம் செய்யும் சின்ன சின்ன காரியங்களும் தான் நமக்கு மகிழ்ச்சியை தரும்.

மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதுதான் நம் அனைவரின் விருப்பமாக இருக்கும். ஆனால், நம்மை எப்படி மகிழ்ச்சியாக வைத்திருப்பது என்று தெரியாமல் தேவையற்ற கவலைகள் மற்றும் ஸ்ட்ரெஸ் ஆகியவற்றில் நாம் சிக்கிக் கொள்கிறோம். 

திட்டமிட்டு வாழ்ந்தால் வாழ்வில் வருகின்ற துன்பங்கள் மற்றும் சவால்களை விரட்டியடித்து நாம் இன்பமாக வாழ முடியும். நம் அன்றாட வாழ்க்கையில் சில எளிமையான மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டாலே மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உத்தரவாதம் கிடைக்கும். அதற்கு பயனுள்ள வகையிலான டிப்ஸ்களை இப்போது பார்க்கலாம்.

வ்வொரு நாளும் நம் வாழ்க்கையில் ஏற்பட்ட நல்ல விஷயங்கள் என்ன என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். நல்ல விஷயங்களை முதலில் நாம் அங்கீகரிக்க வேண்டும். தினசரி டைரியில், நம் வாழ்க்கையில் நடக்கும் நல்ல விஷயங்களை எழுதி வரலாம். இதன் மூலமாக சாதகமான விஷயங்கள் மீது நம் மனம் அக்கறை செலுத்தும். அது நம் வாழ்க்கையில் மகிழ்ச்சியை பெருக்கும்.

இதையும் படியுங்கள்:
வெற்றி பெற உறுதுணையாக இருக்கும் ஆர்வமும் அர்ப்பணிப்பும்!
motivation article

வீட்டில் உள்ள உறுப்பினர்கள், வீட்டுக்கு அருகாமையில் இருப்பவர்கள், நண்பர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் மத்தியில் நல்லதொரு பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். அனைவரிடமும் அன்பு செலுத்தி, கருணை காட்ட வேண்டும். அது நமக்கு பன்மடங்காக திரும்பக் கிடைக்கும். உங்கள் பழக்கம் ஆரோக்கியமானதாக இருந்தால் எப்போதுமே மகிழ்ச்சியான சூழல் காணப்படும்.

நம் மனதை எப்போதுமே ஒருநிலைப்படுத்திக் கொள்ள வேண்டும். குழப்பமான மனநிலையில் இருக்கக் கூடாது. தியானம் செய்வது மனதை ஒருநிலைப்படுத்த உதவும். மேலும் தேவையற்ற கவலை மற்றும் ஸ்ட்ரெஸ் ஆகியவற்றை விரட்டியடிக்க உதவும்.

பிறர் கூறும் கருத்துக்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அதில் இருக்கும் நல்ல விஷயங்கள் ஏற்றுக் கொண்டு தேவையில்லாத விஷயங்களை தூக்கி எறிய வேண்டும். அப்படித்தான் மகிழ்ச்சியை வரவைக்கும் இன்னொரு வழி. பிறர் பேச்சுக்கும் மதிப்பளிக்க வேண்டும் அப்படி மதிப்பளித்தால் மன உளைச்சலும் இருக்காது ஆனால் மகிழ்ச்சி மட்டும் இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com