வெற்றிகளை எளிதாக்கும் சில குறிப்புகள்!

Motivation Image
Motivation Image

வெற்றி என்று மூன்று எழுத்துதான் எல்லோருடைய இலக்கும் கூட. ஆனால் அதை எப்படி அடைய வேண்டும். அதனை அடைய என்ன செய்ய வேண்டும் என்ற புரிதல் நம்மில் பலருக்கு இல்லை. இல்லாமல் முயற்சி செய்துவிட்டு எனக்கு வெற்றி கிடைக்கவில்லை என்று புலம்புபவர்கள் நம்மில் பலர் உண்டு. வெற்றிகளை நாம் மிக எளிதாக அடைய முடியும் அதற்கான சில குறிப்புகள் இதோ இப்பதிவில்.

தெளிவான இலக்குகளை அமைப்பது:

உங்களை தொடர்ந்து ஊக்கப்படுத்துவதற்கும், ஒழுக்கமாக இருப்பதற்கும் உதவக்கூடிய ஒரு காரணத்தை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். அதற்கு உங்களிடம் தெளிவான இலக்குகள் இருக்க வேண்டும். “உங்களுக்கு என்ன வேண்டும்?” “எதனால் உங்களுக்கு அது வேண்டும்?” மற்றும் “அதனை அடைவதற்கு உங்களுக்கு எது உதவி புரியும்?” என்பது போன்ற கேள்விகளுக்கான பதில்களை நீங்கள் கேட்டுக் கொள்வதன் மூலமாக ஒழுக்கத்தோடு வாழலாம் மற்றும் வாழ்க்கையில் எளிதாக வெற்றி பெறலாம்.

தினசரி வழக்கத்தை பின்பற்றுதல் : 

உங்களுடைய அன்றாட வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட வழக்கத்தை தொடர்ச்சியாக பின்பற்றுவதன் மூலமாக ஒழுக்கத்தை வளர்க்கலாம். உங்களை மேம்படுத்தக்கூடிய விஷயத்தை தொடர்ந்து நீங்கள் செய்து கொண்டிருக்கும் பொழுது அது உங்களை வளர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்லும்.

முன்னேற்றத்தை கொண்டாடுதல் :

ஒரு சிறிய இலக்காக இருந்தாலும் சரி அல்லது எந்த ஒரு வேலையை செய்து முடித்தாலும் சரி அதனை கொண்டாட மறவாதீர்கள். உங்களுக்கான அங்கீகாரத்தை வழங்கி, நீங்கள் சாதித்த விஷயத்தை நீங்கள் கொண்டாடும் பொழுது உங்களுடைய தன்னம்பிக்கை அதிகரிக்கும். இதனால் எதிர்காலத்தில் மிகப்பெரிய இலக்குகளை அடைவீர்கள்.

நேர மேலாண்மையை பின்பற்றுதல் : 

உங்களுடைய நேரத்தை சரியாக பயன்படுத்துவது அவசியம். உங்களுக்கு வழங்கப்பட்ட வேலைகளை டெட்லைன்களுக்கு முன்னமே முடிப்பது மற்றும் விஷயங்கள் கைமீறி போவதை தவிர்ப்பதற்கு இந்த நேர மேலாண்மை உதவும். இதனால் உங்களின் வேலைப்பளு அதிகரிக்காமல் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.

சுய கட்டுப்பாட்டை வளர்த்தல்:

கடுமையாக உழைப்பது முக்கியம்தான். என்றாலும் கூட அவ்வப்போது உங்களுக்கு மகிழ்ச்சியை தரக்கூடிய விஷயங்களில் ஈடுபடுவதும் அவசியம். எனவே எதற்கு முன்னுரிமை தர வேண்டும் என்ற கட்டுப்பாட்டை பெறுவதற்கு ஒழுக்கம் அவசியம். இது காலப்போக்கில் உங்களை உயர்ந்த நிலையில் கொண்டு சேர்க்கும்.

இதையும் படியுங்கள்:
கோடைகாலத்தில் சருமம் அழகு பெற சில டிப்ஸ்!
Motivation Image

நேர்மறையான எண்ணப் போக்கு :

உங்களைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொள்வதன் மூலமாகவும் கடுமையாக உழைப்பதன் மூலமாகவும் எதையும் சாதித்து விடலாம் என்பதை நீங்கள் முதலில் நம்ப வேண்டும். நேர்மறையான யோசனைகள் உங்களுக்கு ஊக்கத்தையும், உங்களுடைய இலக்குகளை நோக்கி வேலை செய்வதற்கான ஒரு உந்துதலையும் அளிக்கும். இறுதியில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றி உங்களுக்கு கிடைக்கும்.

உங்களுடைய முன்னெற்றத்தை கண்காணித்தல் : 

உங்களின் அன்றாட வளர்ச்சியை கண்காணிப்பது மற்றும் நீங்கள் என்ன வேலையை செய்து முடித்திருக் கிறீர்கள் என்பதை மாத இறுதியிலோ அல்லது வார இறுதியிலோ ஆய்வு செய்ய வேண்டும். அவ்வாறு ஆய்வு செய்த பிறகு அதில் ஏதேனும் மாற்றங்கள் தேவைப் படுகிறதா என்பதை நீங்கள் முடிவு செய்யலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com