

வாழ்க்கையில் நாம் கடைபிடிக்கவேண்டிய விஷயங்கள் நிறையவே உள்ளன. அவைகளை எல்லாம் நாம் சரிவர கடைபிடித்தாலே அனைத்தும் நன்மையில் முடியும்.
பொதுவாக கிடைக்கும் என்பாா் கிடைக்காது, கிடைக்காதென்பாா் கிடைத்துவிடும், என்ற பாடல் வரிகளுக்கேற்ப நாம் நினைப்பதெல்லாம் நடந்து விடுவதில்லை. அதற்கு தகுந்தாற்போல நாம் நல்லது கெட்டதை சீா்தூக்கிப்பாா்த்து வாழ்க்கைப்பயணத்தை ஓட்டவேண்டியுள்ளது.
அடுத்தவர் மீது நமது கருத்துகளை திணிக்கவேண்டாம். அது அவர்களுக்கு பிடிக்கலாம், பிடிக்காமலும் போகலாம். அதேபோல அடுத்தவர் முன்னேற்றம் கண்டு பொறாமைப் படவேண்டாம். நமது பொறாமை நமக்கே எதிாி என்பதை நினைவில் கொள்வதே நல்லது.
நமது வயதிற்கு ஏற்ப உற்ற நண்பர்களிடம் மனம் விட்டு பேசுங்கள். எப்போதும் மனதை ரிலாக்ஸ் இல்லாமல் வைத்துக்கொள்ளவேண்டாம். மனதில் உள்ள சஞ்சலங்களை உரம் போட்டு வளர்க்கவும் வேண்டாம்.
யாா் மீதும் வீண்பழி சுமத்தவேண்டாமே! எதுவாய் இருந்தாலும் நோில் பேசிவிடுங்களேன் அது நல்லதுதானே! யாருடைய முதுகிற்குப் பின்னாலும் பேசவதைத்தவிா்க்கலாம்.
ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுங்களேன், உடற்பயிற்சி, யோகா, தியானம், கடைபிடிப்பது மிகவும் நல்லதுதானே.
சொத்து இருந்தால் வாாிசுகளை நம்பி பிாித்துக்கொடுக்க வேண்டாம், அவர்கள் நம்மை கடைசி காலம் வரை காப்பாற்றுவாா்கள் என நம்ப வேண்டாம்.
அதற்காக எனது ஆயுளுக்குப் பின்னால் வாாிசுகள் சொத்துகளை அடைந்து கொள்ளலாம் என உயில் எழுதவேண்டாம், உங்களது மரணத்தின் நாட்கள் வாாிசுகளால் எண்ணப்படுமே!
மனைவிக்கு உாிய மரியாதை கொடுப்பதை நிறுத்த வேண்டாம். இளமையிலேயே பணம் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள், முதுமைக்கு தேவை என இளமையில் பணம் சேமிப்பது நல்லதுதான். அதற்காக இளமையில் உபவாசம் தவிா்க்கலாமல்லவா.எங்கும் எதிலும் நிதானம் கடைபிடிக்கலாம்.
உறவுகளில் கூடுமான வரையில் கொடுக்கல் வாங்குதல் தவிா்க்கலாம்.
நாம் எதையும் கொண்டு வரவில்லை எதையும் கொண்டு செல்லப்போவதில்லை. அதை கவனத்தில் கொள்வதே நல்லது. அதிகப்பிரசங்கித்தனமாய் பேசுவதை தவிா்கலாம், ஊதாாித்தனம் கைவிடலாம், யாாிடமும் அளவோடு பேசுவதே நல்லது, யாாிடமும் எந்தப் பொருளையும் இரவல் வாங்கவேண்டாம்.
எந்தக் காரணம் கொண்டும் இறை நம்பிக்கை தொடர்வதே நல்லது.
தகுதி தராதரம் பாா்த்து பழகுவது நல்லது. மகன் மகள் திருமணம் தொடர்பாக நன்கு விசாாித்து அவசரம் காட்டாமல் திருமணம் செய்யுங்கள் அதுவே நல்லது. வயோதிகத்தில் கணவனுக்கு மனைவியும், மனைவிக்கு கணவனும்தான் துணை. ஆக மனைவியும் கணவனும் புாிதலோடு வாழுங்கள். சொந்த பந்தங்களில் அளவோடு பழகுங்கள், நம்பகமான நட்பு வட்டங்களோடு பழகுங்கள். இப்படி பலவிதமான பழக்க வழக்கங்களை கடைபிடித்து வாழ்வதே நல்லதாகும்!