சைக்கிள் சொல்லி கொடுத்த விடாமுயற்சி பாடம்!

சைக்கிளை ஓட்டுவது....
சைக்கிளை ஓட்டுவது....kuvikam.com

சிறுவயதில் அப்பாவுடைய சைக்கிளை ஓட்ட எடுத்து செல்வது வழக்கம். பெரியவர்கள் சைக்கிளை ஓட்டுவதை பார்த்து அதுபோலவே ஓட்ட வேண்டும் என்ற ஆசை.

ஆனால் உயரம் பத்தாததால், குரங்கு பெடல் போட்டு ஓட்ட வேண்டியிருக்கும். என்றைக்காவது ஒருநாள் எல்லோரையும் போல சீட்டில் அமர்ந்து வண்டி ஓட்டிவிட வேண்டும் என்ற ஆசை, கனவு மட்டும் அந்த சிறு வயதில் மனதில் இருந்தது.

தினமும் அதற்கான முயற்சியில் எத்தனையோ சறுக்கல்கள், கீரல்கள், காயங்கள் ஏற்பட்டதுண்டு. இருப்பினும் முயற்சியை கைவிடவில்லை.

அந்த ஒரு நாளுக்காக காத்திருந்தது மனது. அந்த நாளும் வந்தது. வழக்கம் போல ஏற பயிற்சி எடுத்து கொண்டிருந்த போது மனதில் “இன்று எப்படியாவது காலை தூக்கி போட்டு சீட்டில் ஏறி அமர்ந்துவிட வேண்டியது தான்” என்ற உந்துதல் தோன்றியது.

ஒருவழியாக ஏறி அமர்ந்து பெடலையும் மிதித்தாகி விட்டது. அந்த ஒரு நொடி எதையோ பெரிதாக சாதித்த ஒரு பேரானந்தம்!

சைக்கிளை நேர கொண்டு சென்று புதருக்குள் விட்டேன். ஏற மட்டும் தானே கற்று கொண்டேன். எப்படி இறங்குவது என்று தெரியாதல்லவா? கை, கால்களில் சிராய்ப்புகள். இருப்பினும் நண்பர்கள் என்னை விரிந்த கண்களுடன் பார்த்ததை பார்த்து ஒரு ஆனந்தம்.

நம் அனைவருக்குமே சிறு வயதில் இப்படியொரு சைக்கிள் ஓட்ட பழகிய கதையிருக்கும். சிலருக்கு பின்னே வந்து கற்று தந்து உதவி செய்ய யாராவது இருந்திருப்பார்கள். இன்னும் சிலர் என்னை போல தானாகவே கற்றிருப்பார்கள்.

இப்போது நிகழ்காலத்திற்கு வாங்களேன். நம்மால் சைக்கிளில் ஏறிவிட முடியும் என்று அப்போது மனதில் இருந்த விடாமுயற்சியும், தைரியமும்  இப்போது நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
அயோத்தி ராமர் கோவிலுக்கு குவியும் பிரமாண்ட பரிசுகள்.. என்னென்ன தெரியுமா?
சைக்கிளை ஓட்டுவது....

சாதிக்க வேண்டும் என்று போராடும்போது வரும் இன்னல்கள், தடங்கல்கள், கஷ்டங்கள், தடைகளை தாண்டி ஓடியும் ஒரு கட்டத்தில் போதும் விட்டு விடுவோம் என்ற எண்ணம் இப்போது நமக்கு எப்படி தோன்றுகிறது?

அன்று நாம் விட்டுக்கொடுக்கவில்லையே! இன்று மட்டும் ஏன் போதும் என்ற எண்ணம் வர வேண்டும்?

நம்மை சுற்றியிருப்பவர்களின் பேச்சோ, செயலோ நாம் மழுங்குவதற்கு காரணமாக இருந்தாலும் பரவாயில்லை.

ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள், நாமெல்லாம் சொந்த முயற்சியில் சைக்கிள் ஓட்ட கற்றுக் கொண்டவர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com