நாம் அனைவருமே வாழ்க்கையில் ஏதோ ஒன்றை அடைய விரும்புகிறோம். அது புதிய வேலை, ஒரு அழகான வீடு, காதல், திருமணம் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், பெரும்பாலும் நாம் விரும்பும் அனைத்தையும் நம்மால் அடைய முடிவதில்லை. அது ஏன்? அதற்கு பதில் அந்த விஷயங்களின் மீது நமக்கு இருக்கும் அதிகப்படியான பற்றுதான். நாம் விரும்பும் விஷயங்களில் அதிக பற்றுடன் இருப்பதால், நம்மை நாமே கட்டுப்படுத்திக் கொள்கிறோம். இந்த பிடிப்பு நம்மை முக்கியமான செயல்களை செய்யவிடாமல் தடுக்கிறது.
எனவே, எதன் மீதும் பற்று இல்லாமல் இருப்பது, உங்களை நீங்கள் விரும்பும் விஷயங்களை நோக்கி கொண்டு செல்லும். இதை ஆங்கிலத்தில் Detachment என்பார்கள். அதாவது, பொருட்கள் நபர்கள், சூழ்நிலைகள் போன்றவற்றில் இருந்து உங்களை எப்போதும் விலக்கியே வைத்திருங்கள். அது நம்முடைய எண்ணங்கள், உணர்வுகள், நடத்தைகளில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். பற்றில்லாமல் இருப்பது நம்மை நாமே அறிந்து கொள்வதாகும்.
Detachment நம்முடைய வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். தேவையில்லாமல் பிறரைப் பற்றி தவறாக நினைக்க வைக்காது. நீங்கள் உங்கள் வேலையை சிறப்பாக செய்ய உதவியாக இருக்கும். நீங்கள் மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும், நிறைவாகவும் வாழ உதவும். இது உங்களின் உண்மையான தன்மையை வெளிப்படுத்த உதவுகிறது.
Detachment நம்மை எவ்வாறு விரும்பியதை அடைய உதவும்?
எதன் மீதும் அதிக பிடிப்பு இல்லாததால் நாம் தெளிவாகவும், தடையின்றியும் சிந்திக்கலாம். இது நம்முடைய இலக்குகளை அடைய சிறந்த வழிகளைக் கண்டுபிடிக்க உதவும். மேலும், செய்யும் செயல்களை எதைப் பற்றியும் கவலைப்படாமல் செய்ய வைக்கும். இதனால், புதிய விஷயங்களை தைரியமாக முயற்சி செய்து, பல புதிய அனுபவங்களை நாம் பெறலாம்.
இது நம்முடைய திறமைகளை மேம்படுத்தவும், மேம்படுத்திய திறனை பயன்படுத்தவும் உதவுகிறது. மேலும், மற்றவர்களுடன் ஆழமான உறவை ஏற்படுத்திக் கொள்ளவும், Detachment உதவுகிறது. எதையும் எதிர்பாராமல் பிறருடன் பழகினால், அந்த உறவில் எவ்விதமான பிரச்சனைகளும் ஏற்படாது.
எனவே, பற்றில்லாமல் இருப்பது உங்கள் வாழ்க்கையை நேர்மறையான திசையை நோக்கி நகர்த்திச் செல்லும். இதன் மூலமாக நீங்கள் உங்களின் உண்மையான தன்மையை வெளிப்படுத்தி, வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கலாம்.