புது வருடம் புது துவக்கம்!

புது வருடம் புது துவக்கம்!
Updated on

புது வருடம் என்றாலே புதுமையாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற பாஸிட்டிவ் எண்ணங்கள் தோன்றும்.

நிறைய பேர் புது வருடத்தில்தான் நியூ இயர் ரெஸலூஷன்ஸ் எடுப்பார்கள். புத்தாண்டில்தான் ஏதாவது செய்ய வேண்டும் என்ற உத்வேகம் வரும் பலருக்கும். ஆனால் அதை வருடம் முழுவதும் கடைப்பிடிப்பது என்பது தான் பலருக்கும் குதிரை கொம்பாக இருக்கும்.

·         உடல் எடை குறைக்க வேண்டும்.

·         தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

·         உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும்.

·         புது வேலையில் சேர வேண்டும்.

·         வீடு கட்ட வேண்டும்.

·         கடனை அடைத்துவிட வேண்டும்.

என்பதுபோல நிறைய காரணங்கள் இருக்கும். அப்படியிருக்கும் காரணங்களை பாதை மாறாமல் எப்படி சரியாக செய்து முடிக்க வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.

முதல் அடி:

முதல் அடி மிகவும் முக்கியம். நாம் முதலில் எடுத்து வைக்கும் அடி, எங்கேயிருந்து தொடங்க வேண்டும் என்பதை தெரிந்து செய்ய வேண்டும்.

சுற்றுப்புறத்தை மகிழ்ச்சியாக வைத்து கொள்ளுங்கள்:

உங்களை சுற்றியிருப்பவர்களின் ஊக்குவிப்பு மிகவும் முக்கியமானது. அவர்கள் நமக்கு கொடுக்கும் பாஸிட்டிவிட்டு நம்முடைய இலக்கை விரைவில் அடைவதற்கு உதவியாக இருக்கும். நீங்களும் மகிழ்ச்சியாக இருந்து மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்று.

 உங்கள் பார்வையை விசாலப்படுத்துங்கள்:

உங்கள் இலக்கை பற்றிய பார்வையை அகலப்படுத்துங்கள். புதுமையான வழிகளை கண்டுப் பிடியுங்கள். அதை செயல்படுத்தவும் முயற்சியுங்கள்.

உங்களை முதலில் நேசியுங்கள்:

உங்களை நீங்கள் பார்த்து கொள்வது, உங்களுக்கு ஏதேனும் பரிசு நீங்களே அளித்து கொள்வது, உங்களை பற்றிய பிடித்தமான விஷயத்தை நினைத்து பாஸிட்டிவாக சிந்திப்பது, உங்களுக்காக நேரம் ஒதுக்கி கொள்வது போன்ற செயல்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை தரும்.

உங்களை தயார் செய்யுங்கள்:

90% வெற்றி எப்போதுமே நாம் இலக்கை தயார் படுத்துவதில்தான் இருக்கிறது. எதை நீக்க வேண்டும், எதை சேர்க்க வேண்டும் என்ற தெளிவு கண்டிப்பாக இருக்க வேண்டும்.

நம்பிக்கையை கை விடாதீர்கள்:

நம்மால் முடியாது என்று மனதில் இருக்கும் எண்ணத்தை நீக்கி விட்டு முகத்தில் சிரிப்பை எப்போதும் விதைத்திருங்கள். உங்கள் முயற்சியை மதிப்பீடு செய்வதற்கு, ஏற்கனவே முயற்சி செய்து வெற்றி பெற்ற விஷயங்களை நினைவு கூறுங்கள்.

தடைகளை தகர்த்து எறியுங்கள்:

நாம் செய்யும் முயற்சிகளில் தடைகளும், பின்னடைவுகள் இருக்க தான் செய்யும். நாம் அதை எப்படி எடுத்து கொள்கிறோம் என்ற நம்முடைய மனநிலையும் கூட வெற்றிக்கான படியாக அமையும்.

குறை கூறுவதை நிறுத்துங்கள், வெற்றியை அடைய தடையாக இருப்பது எதுவென்று யோசியுங்கள். காரணங்கள் சொல்வதே வெற்றியடைவதை தடுக்கும் தடைகற்கள். அதை முதலில் உடையுங்கள்.

எடுத்த தீர்மானத்தில் உறுதியாக இருங்கள்:

உறுதி எடுத்து அதில் தீர்மானமாக இருக்கும் போது சில சறுக்கல்கள் வர தான் செய்யும். அதற்காக எடுத்த இலக்கை பாதியிலேயே விட்டு விட்டு செல்வது சரியாக இருக்காது. பாதை மாறி சென்றாலும் திரும்பி வர கூடிய மன உறுதி இருக்க வேண்டும்.

கடந்தகாலத்தை நினைத்து கலங்காமல் நிகழ்காலத்தை வாழ முயற்சித்தால், உங்கள் எதிர்காலம் வெற்றியும் மகிழ்ச்சியுமாக அமையும்.

logo
Kalki Online
kalkionline.com