யாரும் சொல்லாத ஒரு ரகசிய Prompt: இந்த New Year Goals இனி உங்கள் கையில்!

Chat Gpt prompt goals
Chat Gpt prompt goals
Published on

ருடத்திற்கு இரண்டு கோடி ரூபாய் பிஸினஸ் செய்யும் ஒரு தொழில் அதிபர், தான் எந்த துறையில் இருக்கிறாரோ அந்த துறை சார்ந்த வல்லுனர்களுடன் உட்கார்ந்து அடுத்த வருடம் என்ன செய்ய போகிறோம், அடுத்த ஐந்து வருடத்தில் நாம் எங்கே இருக்கப் போகிறோம் என்று புத்தாண்டு Goalsஐ தீர்மானிக்கிறார். அந்த துறை சார்ந்த consultant க்கு லட்ச கணக்கில் சம்பளம் கொடுக்கப்படுகிறது.

நம் இலக்குகள் என்ன? அதை எப்படி அடையப்போகிறோம் என்று திட்டங்கள் மட்டும் தான் அந்த கன்சல்டென்ட் போட்டுக் கொடுப்பார். அதற்கு அவருக்கு லட்சத்தில் சம்பளம். இதுப்போல ஒரு கன்செல்டென்ட் உங்களுக்கு இலவசமாகவே செய்துக் கொடுத்தால் எப்படியிருக்கும். இன்று எல்லோருமே Chat Gpt மூலமாக தான் தன்னுடைய புது வருடத்தை பிளான் பண்ணுகிறார்கள். ஒரு ரூபாய் செலவில்லாமல் Chat Gpt யில் சரியான பிராம்ப்டை போடுவதனால் ஒரு மிக சிறந்த கன்செல்டென்டுடன் உங்கள் புத்தாண்டை பிளான் செய்யலாம்.

வரக்கூடிய  2026 ல் Chat Gptயுடன் சிறப்பாக திட்டமிடலாம். இதை விட சிறந்த கன்செல்டென்ட் யாரும் இல்லை. உங்களுடைய தேவைகளை புரிந்துக் கொண்டு உங்கள் துறையில் நீங்கள் எப்படி முன்னேற வேண்டும், இலக்குகளை எப்படி அடைய வேண்டும் என்பதையெல்லாம் தெளிவாக சொல்லிவிடும்.

1. Prompt

2026 LIFE VISION ACT AS A WORLD CLASS LIFE STRATEGIST. HELP ME DESIGN A CLEAR AND REALISTIC LIFE VISION FOR 2026 COVERING HEALTH, WEALTH, CARRER/BUSINESS, SKILL, RELATIONSHIP, MENTAL WELL-BEING. ASK ME POWERFUL QUESTIONS FIRST THEN CREATE A ONE PAGE VISION SUMMARY.

இதை Chatgpt யில் கொடுக்கும் போது அது உங்களை பல கேள்விகள் கேட்கும். உதாரணத்திற்கு உங்கள் Health goal, weight, financial savings இதெல்லாம் எப்படியிருக்க வேண்டும் என்பதுப்போல கேட்கும். இதுப்போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்லும் போது Chat Gpt உங்கள் இலக்குகளை உங்களுக்கு செட் பண்ணிக் கொடுக்கும்.

Goals to system conversion

நிறைய பேர் இலக்குகளை தீர்மானிப்பார்கள். அதாவது இந்த வருடம் உடல் எடையை குறைக்க வேண்டும், பணம் சேமிக்க வேண்டும் என்பது போன்ற இலக்குகள் வைப்பது மட்டுமே பத்தாது. அதை சிஸ்டமாக மாற்ற வேண்டும். அதாவது உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால், தினமும் காலையில் நடக்க வேண்டும், உணவுகளில் கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்பதுப்போல சிஸ்டமாக மாற்ற வேண்டும். அதற்கு இந்த பிராம்ப்டை போடுங்கள்.

2. Prompt

ACT AS A SYSTEMS THINKING COACH. I WILL GIVE YOU MY 2026 GOALS. CONVERT EACH GOAL IN TO DAILY SYSTEM, WEEKLY SYSTEM, MONTHLY SYSTEM. KEEP IT SIMPLE, PRACTICAL, TRACKABLE.

இதை செய்யும் போது Chat Gpt உங்களுக்கு எந்த உணவு சாப்பிட வேண்டும், என்னென்ன சிஸ்டத்தை பின்பற்ற வேண்டும் என்று சொல்லிவிடும்.

Quarterly focus

இப்போது 2026ல் 100 விஷயங்களை செய்ய வேண்டும் என்று யோசித்தால் எதையுமே சரியாக முடிக்க முடியாது. என்னவே, ஒவ்வொரு கால் ஆண்டுகளில் என்ன முடிக்க வேண்டும் என்பதை தீர்மானியுங்கள். இதற்கு இந்த பிராம்ப்டை பயன்படுத்துங்கள்.

3. Prompt

ACT AS A PROFESSIONAL ANNUAL PLANNING COMSULTANT WITH EXPERTISE IN GOAL EXECUTION. MY GOALS IN 2026 ARE(ENTER YOUR GOALS HERE) 

இந்த பிராம்ப்டை போடும் போது Chat Gpt ஒவ்வொரு Quarter month க்கும் தேவைகள் என்ன, அதனுடைய Result என்னவென்பதைக் கொடுக்கும். இதை பின்பற்றினால் வருடம் முழுவதும் குழப்பமில்லாமல் உங்கள் இலக்கை தொடுவதற்கு உதவியாக இருக்கும்.

Skill and learning Roadmap

2026 முடிவதற்குள் எந்த Skillல் கைத்தேர்ந்தவராக ஆக வேண்டும் Communication skills, AI automation, Content creation இப்படி எது உங்கள் துறைக்கு ஏற்றதாக இருக்கிறதோ அதை மட்டும் இந்த பிராம்ப்டில் போடுங்கள்.

இதையும் படியுங்கள்:
AI உடன் இப்படி இணைந்து செயல்பட்டால் 100% வெற்றி உறுதி!
Chat Gpt prompt goals

4. Prompt

ACT AS A FUTURE SKILL ADVISOR WITH EXPERTISE IN GLOBAL WORKFORCE TRENDS WITH EMERGING TECHNOLOGIES. BASED ON A FOLLOWING SKILLS I WANT TO IMPROVE: (INSERT SKILLS HERE)

இந்த பிராம்ப்டை Chat Gptயில் போட்டுப் பார்த்தால் எந்த Skills க்கு டிமாண்ட் இருக்கும், எந்த Skillsல் Focus செய்யலாம். தினமும் எவ்வளவு நேரம் Practice பண்ண வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கும். இந்த Prompts ஐ பயன்படுத்தி இந்த புதுவருடத்தை பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com