புன்னகை தருமே புத்துணர்வு! மகிழ்ச்சியை பரப்பும் 10 செயல்பாடுகள்!

Motivation image
Motivation image

வாழ்க்கை என்பது உணர்ச்சிகளின் ஒரு ரோலர் கோஸ்டர் போன்றது, அதில் உங்கள் நாளை பிரகாசமாக்கும் மற்றும் உங்களைச் சுற்றி உள்ளவர்களின் உற்சாகத்தை உயர்த்தக்கூடிய ஒரு எளிய செயல் உள்ளது. அது தான் புன்னகை, நீங்கள் ஒரு பரபரப்பான நாளை எதிர்கொண்டாலும், டிராஃபிக்கை கையாள்வது அல்லது வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகளை கையாள்வது என்று எதுவாக இருந்தாலும், அதை எதிர்கொள்ள உண்மையான புன்னகை உங்கள் ரகசிய ஆயுதமாக இருக்கும். எனவே, மகிழ்ச்சியை பரப்பும் இந்த தந்திரத்தை எவ்வாறெல்லாம் வெளிப்படுத்தலாம் என்பதை தெரிந்து கொள்வோம் 

1. நன்றியுணர்வுடன் உங்கள் நாளைத் தொடங்குங்கள்

நீங்கள் படுக்கையில் இருந்து இறங்குவதற்கு முன், உங்களை சுற்றி நடக்கும்  மூன்று விஷயங்களைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். அது உங்கள் ஜன்னல் வழியாக வரும் சூரிய ஒளியின் அரவணைப்பாக இருக்கலாம், நீங்கள் பருகும் ஒரு கப் காபி  அல்லது பறவைகளின் சத்தமாக இருக்கலாம். ஆக எல்லாவற்றையும் அனுபவிக்க கூடிய பாக்கியம் இன்றைக்கு உங்களுக்கு கிடைத்துள்ளது என்று கருதி நன்றி தெரிவித்து உங்கள் நாளை நன்றியுணர்வோடு ஆரம்பியுங்கள். 

2. நிதானமாக குளிக்கவும்

சூடான அல்லது வெதுவெதுப்பான குளியல் உங்கள் தசைகளை தளர்த்துவது மட்டுமல்லாமல், உங்கள் மனதையும் அமைதிப்படுத்துகிறது. ஆகையால் அவசரப்படாமல் நிதானமாக, எந்த ஒரு மன அழுத்தமும் இல்லாமல்  குளித்து முடித்து, உங்கள் நாளை புத்துணர்ச்சியுடன்  எதிர்கொள்ளுங்கள்.

3. குழந்தை பருவத்தை வெளிப்படுத்துங்கள்

நீங்கள் உங்களை சீரியஸான கேரக்டராக யாரிடமும் காட்டிக்கொள்ளாதீர்கள். அதை போக்க, கண்ணாடியில் வேடிக்கையான முகபாவனைகளை உருவாக்கி ரசித்திடுங்கள். யாரும் பார்க்காத நேரத்தில் நடனமாடுங்கள் அல்லது ஒரு நகைச்சுவையான விஷயத்தை நினைத்து சிரித்து கொள்ளுங்கள். இந்த வகையான வேடிக்கையான விஷயங்களை செய்து பார்த்து உங்களை இறுக்கமான நிலையில் இருந்து வெளிவர உதவும்.  

4. மக்களையும் அவர்தம் செய்கைகளையும் கவனியுங்கள்

உங்கள் ஃப்ரீ டைம்களில்  பொதுவெளியில் சென்று  கடை வீதிகளில் சுற்றி வரும் மக்களை கவனித்து பாருங்கள். அவர்களின் வெளிப்பாடுகள், ஒருவருக்கொருவர் செய்கின்ற வினோதமான விஷயங்களை கவனியுங்கள். அதுவே நீங்கள் புன்னகைக்க பல காரணங்களைக் உருவாக்கி கொடுக்கும்.

5. மகிழ்ச்சியான உணவை அனுபவிக்கவும்

உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் உணவைச் சாப்பிடுங்கள். ஒருவேளை இது உங்கள் பாட்டியின் செய்முறையாக இருக்கலாம் அல்லது வேறேதேனும் வெளியில் நீங்கள் ருசிக்கும் உணவாக கூட இருக்கலாம். பிடித்ததை ருசிக்கும் போது அதில் உண்டாகும் புன்னகை வேறு ரகம். 

6. வேலைகளைச் செய்யும்போது பாடுங்கள்

சாதாரணமான பணிகளை கூட சிறு கொண்டாட்டங்களாக மாற்றிக்கொள்ளுங்கள். துணிமணிகளை  சலவைகளை செய்யும் போதோ  அல்லது பாத்திரங்களைக் கழுவும்போதோ உங்களுக்குப் பிடித்த ட்யூன்கள் மற்றும் பாடல்களை பாடி பாருங்கள். அதில் உண்டாகும் புன்னகை உங்கள் மனதை லேசாகிவிடும். 

7. உங்கள் தாவரங்கள் மற்றும் விலங்குகளுடன் பேசுங்கள்

தாவரங்களை பராமரிக்கும் போது உங்களுக்கு நல்ல  ஆற்றல் கிடைக்கும்  மேலும் செல்லப்பிராணிகளுடன் விளையாடும் போது உங்களை அறியாமல் நீங்கள் ஈர்க்கப்படுகிறீர்கள் . அந்நேரங்களில் உங்கள் எண்ணங்களை அவைகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அவர்களிடம்  நீங்கள் எதிர் கருத்தை எதிர்பார்க்க முடியாது. ஆனால் ஒவ்வொரு நாளும் உங்களால் உணரப்படும் அவற்றின் வளர்ச்சியே, உங்கள் நாளை சிறு புன்னகையோடு நல்ல அணுகுமுறையோடு இருக்க உதவும்.

இதையும் படியுங்கள்:
ஆந்திரா ஸ்பெஷல் பேப்பர் ஸ்வீட் பூதரெகுலு ரெசிபி!
Motivation image

8. மற்றவர்களை ஊக்குவிக்கவும் பாராட்டாவும் 

அந்நியர்களுக்கு உண்மையான பாராட்டுக்களை நல்ல புன்னகையோடு மனதார வெளிப்படுத்துங்கள். அது அவர்களின் செயலுக்காகவோ  அல்லது இரக்கம் என்று எதுவாக இருந்தாலும், உங்கள் வார்த்தைகள் அவர்களின் நாளை பிரகாசமாக்கும். ஒரு சில உற்சாகமான வார்த்தைகள் நேர்மறை அலைகளை உருவாக்கலாம். சக ஊழியர், குடும்ப உறுப்பினர் அல்லது அந்நியரை ஊக்குவிக்கவும். 

9. நீங்கள் சந்திக்கும் அனைவரையும் பார்த்து புன்னகைக்க பழகுங்கள் 

உங்கள் புன்னகை ஒரு பரிசு. தாராளமாக பகிருங்கள். அது உங்கள் எதிர்த்திசையில் வருபவராக  இருந்தாலும், பேருந்து ஓட்டுநராக இருந்தாலும் அல்லது வரிசையில் காத்திருக்கும் நபராக இருந்தாலும், உங்கள் புன்னகை அவர்களின் நாளை பலவகைகளில் ஒளிரச் செய்யலாம். அந்த புன்னகை உங்களுக்கும் புத்துணர்ச்சியூட்டும்.

10. பாராட்டுக்களை மனதார ஏற்றுக் கொள்ளுங்கள்

யாராவது உங்களைப் புகழ்ந்தால், பாராட்டினால், பதிலுக்கு ‘நன்றி’ என்று கூறி புன்னகையுடன் கடந்து வாருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com