

விஜய் அவர்கள் சி.எம் ஆகவேண்டும் என்று தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார். மேடைப்பேச்சுகளை நன்றாக பேசுகிறார். அவருடைய ரசிகர்கள் அவருக்காக கிளம்பி வருகிறார்கள். இதைப் பார்த்த பலரும் அவருக்கு கூட்டம் சேர்கிறது என்பதற்காக ஜெயிக்க முடியாது என்று கூறுகிறார்கள். ஆனால், ஆந்திராவில் பவன் கல்யாண் வெற்றி பெற்று Deputy CM ஆக இருக்கிறார். மற்றவர்கள் நம்புவதை காட்டிலும் தன்னைத்தானே ஒரு மனிதன் கண்ணாடியில் பார்க்கும்போது நம்பவேண்டும். ஆமாம். நான் அந்த இடத்திற்கு வந்துவிட்டேன் என்று.
ஒரு பத்து வருடத்திற்கு முன் இருந்த விஜய் இப்படிப்பட்ட விஜயா? என்று பார்த்தால் கண்டிப்பாக இல்லை. ஆனால், இந்த பத்து வருடத்தில் அவர் கொஞ்சம் கொஞ்சமாக அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். இன்று அரசியலுக்குள் (Politics) முழுமையாக வரக்கூடிய தகுதி வந்துவிட்டதாக அவர் நம்புகிறார். சிலருக்கு மனதில் Hunch சரியாக சொல்லும். இதை செய்தால் சரியாக தான் இருக்கும் என்று. அதுபோல இருக்கும் தியரிக்களைத்தான் இந்தப் பதிவில் காண உள்ளோம்.
1. Granovetter's Threshold model
ஒரு கூட்டத்தில் ஒருவர் பேசிக்கொண்டிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் பேசுவது மக்களுக்கு புரியவேயில்லை. ஆனால், ஒரு கட்டத்தில் ஒருவர் அவர் பேசுவதைக் கேட்டு கைத்தட்ட ஆரம்பிக்கிறார். உடனே கூட்டத்தில் இருக்கும் அனைவரும் புரிந்தாலும், புரியாவிட்டாலும் கைத்தட்ட தொடங்குவார்கள்.
நாம் மட்டும் கூட்டத்தில் எதற்கு தனியாக தெரிய வேண்டும் என்று நினைத்து மக்கள் செய்யும் விஷயம் இது. இதில் முதல் பத்து பேர் கிடைத்துவிட்டால் போதும். பிறகு கூட்டத்தை திரட்டுவது கடினமாக இருக்காது.
2. Types of fans
சில நடிகர்களுக்கு இருக்கும் Diehard Fans படம் எவ்வளவு மோசமாக இருந்தாலும் என்னுடைய தலைவனுக்காக பார்த்தேன் என்று சொல்லக் கூடியவர்கள். இவர்களுக்கும் அந்த நடிகர்களுக்கும் ஒரு Bond இருப்பதாக நம்புவார்கள். இதை Para social relationship என்று கூறுவார்கள். இவர்கள் அந்த நடிகரை நேரில் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், தன்னுடைய குடும்பத்தில் ஒருவரைப்போல எண்ணுவார்கள். விஜய் அவர்களை அவருடைய விசிரிகள் எப்போதிலிருந்து அண்ணா என்று கூப்பிட ஆரம்பித்தார்கள் என்று யோசித்துப் பாருங்கள்.
3. Base multiplication k factor
ஒரு விசியால் இன்னும் எத்தனை விசிறிகளை அந்த நடிகருக்காக சேர்க்க முடியும் என்பதுதான் இந்த தியரி. நம்முடைய அப்பாவை நமக்கு மிகவும் பிடிக்கும். அவருக்கு ஒரு நடிகரை பிடிக்கும் என்று பார்க்கும்போது அவரை நமக்கும் பிடிக்க ஆரம்பித்துவிடும்.
அதைப்போல வீட்டில் உள்ள பையன் சொன்னால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று வயதானவர்களும் அந்த குறிப்பிட்ட நடிகரின் விசிறிகளாக மாற வாய்ப்புகள் அதிகம்.
விஜய் அவர்களுக்கு Diehard Fans என்று பார்த்தால் 16 முதல் 25 வயதில் உள்ளவர்கள் தான் இருப்பார்கள். இதை வைத்துப் பார்க்கும்போது கிட்டத்தட்ட 70 முதல் 80 லட்சம் பேர் விஜய் அவர்களின் Diehard fans ஆக இருப்பார்கள். இவர்கள் ஆளுக்கு இரண்டு பேர் கூட்டி வந்தாலும் பார்த்துக்கொள்ளுங்கள்.
4. Halo effects
இப்போது ஒரு நடிகர் சினிமாவில் நல்லதே செய்கிறார். அதைப்போல அறிவாளித்தனமாக சில விஷயங்களில் முடிவெடுக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இதை பார்க்கும் விசிறிகள் அவர் அரசியலுக்கு வரும் போதும் நல்லது செய்வார், திறமையான முடிவுகளை எடுப்பார் என்று நம்புவது. இது ஒரு பிம்பத்தை உருவாக்குகிறது அல்லவா அதுதான் Halo effects ஆகும்.
விஜய் அவர்களுக்கு இந்த தியரிகள் கை கொடுக்குமா? என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.