வயது ஒரு நம்பர் மட்டுமே... என்றும் வெற்றிக்கனி நம் கையில்!

Age is just a number...
motivational article
Published on

யதையும், வசதியையும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல். உங்கள் கையில் இருக்கும் கடமையை உடனுக்குடன் செய்து முடியுங்கள். மூளை சுறுசுறுப்பாக இருந்தால்தான் எல்லா உறுப்புகளும் சீராக இயங்க மூளையிலிருந்து கட்டளை கிடைத்து ஆரோக்கியமும் ஆயுளும் நீடிக்கும்.

யது என்பது வெறும் நம்பர்தான் என்பதை உலகிற்கு உணர்த்தியவர்கள் உலகில் பலருண்டு அதில் உதாரணமாக சிலர்..

குஜராத் மாநிலம் வதோதராவில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேசிய ஓபன் மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டபந்தயத்தில் 105 வயது மூதாட்டி ராம்பாய் என்பவர் கலந்து கொண்டு ஓடியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

100 வயதில் ஓவியங்கள் வரைவது, சிற்பங்கள் செய்வது என அசத்தியவர்கள் உலகில 120 நபர்களுக்கும் மேற்பட்டவர்கள் உண்டு.

94 வயதில் பெர்ட்ரண்டு ரஸ்ஸல் சர்வதேச அமைதிக்காக கட்டுரைகள் எழுதினார். இதற்காக நோபல் பரிசை பெற்றார்.

புகழ்பெற்ற ஆங்கல நாடகாசிரியர் பெர்னாட் ஷா தன்னுடைய 93 வயதில் எழுதியதுதான் " ஃபார் ஃபெட்ஷுகு ஃபேயின்ஸ்" என்ற நாடகம்.

டர்லப்ஃஜுகர் புகழ்பெற்ற ஹாலிவுட் பாரமவுண்ட் சினிமாக் கம்பெனியின் சேர்மனாகச் செயல்பட்டார். அப்போது அவரின் வயது 91.

லகப்புகழ் பெற்ற ஓவிமர் பாப்லோ பிக்காசோவின் பல புகழ்பெற்ற ஓவியங்கள் வரையப்பட்டது அவரின் 90 வயதில்தான். அந்த காலகட்டத்தில்தான் அவர் செதுக்கு உருவங்களையும் வரைந்தார்.

89 வயதில் மேரிபேக்கர் எட்டி கிறிஸ்டியன் சயின்ஸ் சர்ச்சின் நிர்வாக இயக்குநராக பணியாற்றினார்.

லகப்புகழ் பெற்ற மருத்துவர் ஆல்பர்ட் சுவைட்சர் ஆப்பிரிக்க காட்டில் உள்ள மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணியாற்றினார். அப்போது அவரின் வயது 88.

88 வயதில் மைக்கேல் ஏஞ்சலோ சர்ச் ஆப் சாண்டர மரியாவின் கட்டப்பணியில் ஈடுபட்டார். அப்போது சிற்பங்களும், ஓவியங்களையும் வரைந்தார்.

இதையும் படியுங்கள்:
எந்தச் செயலையும் தள்ளிப் போடாதீர்... காலம் குறைவாகவே இருக்கிறது!
Age is just a number...

சாமர் செட்மாம் "பாய்ண்ட்ஸ் ஆப் வியூ" என்ற புத்தகத்தை எழுதியபோது அவரின் வயது 84.

82 வயதில் வின்ஸ்டன் சர்ச்சில் எழுதிய புத்தகம் தான் " ஆங்கிலம் பேசும் மக்களின் வரலாறு " என்பது.

82 வயதில் ரஷ்யா எழுத்தாளர் டால்ஸ்டாய் " என்னால் சும்மா இருக்க முடியாது' என்ற புத்தகத்தை எழுதினார்.

ம் வாழ்வில் வயது என்பது ஒரு அடையாள நம்பர் மட்டுமே. வாழ்க்கை போகும்போதே என்னை ரசித்துக் கொண்டே போ, திரும்ப உனக்காக வர மாட்டேன் என்கிறது. "நம் எல்லோருக்கும் திறமை ஒளிந்து கிடக்கிறது. அதை நாம்தான் வெளிப்படுத்த வேண்டும். சிந்திக்கும் திறன் மட்டுமே வாழ்வை மாற்றிவிடாது சிந்தனையை தைரியத்துடன் செயல்படுத்துபவனே வாழ்வில் வெற்றி பெறுகிறான். இதற்கு கடவுளின் அனுக்கிரகமும் தேவை " எனவே எதையும் ஈசியாக எடுத்துக் கொண்டு உங்கள் இலக்கை நோக்கி பயணியுங்கள் வெற்றிக்கனி உங்கள் கையில்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com