18லும் சாதிக்கலாம்; 81லும் சாதிக்கலாம்! சாதனைக்கு வயதா ஒரு தடை?

Achievers of All Ages
Achievers of All AgesImg credit: AI Image
Published on

சிலர் எந்த நேரத்திலும் சாதனை புரிந்ததை பார்க்கலாம். சிறையில் இருந்தபடியே உலகப் புகழ்பெற்ற நூல்களை எழுதி சாதனை படைத்தவர்களைப் பற்றி படித்திருக்கிறோம். இக்கட்டான தருணத்தில் சாதனை புரிந்தவர்கள் உண்டு. வயது முதிர்ந்த பொழுது சாதனை படைத்தவர்கள் உண்டு. மிகவும் இளம் வயதிலேயே சேவை செய்து சாதனை படைத்தவர்களும் உண்டு.

ராஜா தேசிங்கு முரட்டுக்குதிரையை அடக்கும்போது அவருக்கு வயது 9 தான்.

குறுகலான ஆழமான குழிக்குள் விழுந்த பந்தை எடுப்பதற்கு தண்ணீரை ஊற்றி பந்தை மேலே வரவழைக்கும் உத்தியை பயன்படுத்தும் போது ஜவஹர்லால் நேருவுக்கு 10 வயது தான்.

உலகம் உருண்டையானது என்று விளக்கி பேசிய போது கொலம்பஸுக்கு வயது 12.

ஆங்கிலத்தில் அசர வைக்கும் கவிதைகள் இயற்றிய கவிக்குயில் சரோஜினி நாயுடுவின் வயது 13.

ஷேக்ஸ்பியரின் 'மாக்பெத்' நாடகத்தை வங்க மொழியில் மொழிபெயர்க்கும் போது ரவீந்திரநாத் தாகூரின் வயது 14 தான்.

முகலாய சக்கரவர்த்தியான அக்பர் முடிசூடிய போது அவருக்கு வயது 14.

வில்லியம் மிட் என்பவர் தனது அரசியல் கலந்த அருமையான நாடகம் எழுதி புகழ்பெற்ற போது அவரின் வயது 14.

விக்டர் ஹிகா பிரெஞ்சு இலக்கியக் கழகத்துக்கு சிந்தனைகள் பொதிந்த கவிதைகள் எழுதி அனுப்பியபோது அவரின் வயது 15.

மாவீரன் அலெக்சாண்டர் தனது தந்தையின் போர்ப்படையில் தளபதியான போது அவரின் வயது 16.

விஞ்ஞானி கலீலியோ பைசா நகரத்தின் சாய்ந்த கோபுரத்தில் உள்ள விளக்கு இப்படியும் அப்படியும் ஊசலாடுகிறதே ஏன்? என்பது குறித்து ஆராய்ந்த பொழுது அவரின் வயது 17.

பிராங்கிளின் அரசியல் சட்டத்தை இயற்றிய போது அவரின் வயது 81.

இதையும் படியுங்கள்:
குட்டி ஸ்டோரி: விலைமதிப்பற்ற இரு கற்கள்!
Achievers of All Ages

டால்ஸ்டாய் 'என்னால் மௌனமாய் இருத்தலாகாது' என்னும் உலகப் புகழ்பெற்ற நூலை எழுதிய போது அவரின் வயது 82.

வின்ஸ்டன் சர்ச்சில் ஆங்கில மக்களின் சரித்திரத்தை எழுதிய போது அவரின் வயது 82.

கிரான்மா மோசஸ் என்னும் பாட்டி அழகாக சித்திரம் வரைந்த போது அவரின் வயது 100.

மிக இளம் வயதிலும் சாதிக்கலாம். மிகவும் வயதான காலத்திலும் சாதிக்கலாம் என்பதற்கு மேலே கூறியவர்களே சிறந்த எடுத்துக்காட்டு.

ஆதலால், எந்த வயதிலும் சாதனையை தொடங்குபவர்கள் சாதிப்பதற்கு எனக்கு வயது போதவில்லை அல்லது அதிகமாகிவிட்டது என்று கூறாமல் இலக்குகளை நோக்கிப் பயணியுங்கள். வெற்றித் திருமகள் உங்கள் வாசல் கதவை திறந்து வைப்பார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com