மாசம் ஒரு சம்பளத்தை மட்டும் நம்பி இருக்கீங்களா.. கேம் ஓவர் ஆகுறதுக்குள்ள இத படிச்சு உஷாராகுங்க!

ai impact on jobs
ai impact on jobs
Published on

எல்லார் மனதிலும் நன்றாக சம்பாதித்து லைஃபில் செட்டில் ஆக வேண்டும் என்ற பெரிய கனவு நிச்சயமாக இருக்கும். நமது முந்தைய தலைமுறையினர் ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தால், சுமார் 30 வருடங்கள் அங்கேயே பொறுமையாக உழைத்துவிட்டு இறுதியில் நிம்மதியாக ஓய்வு பெறுவார்கள். 

ஆனால், தற்போதுள்ள அதிவேக இன்டர்நெட் உலகத்தில் அந்த மாதிரி பொறுமையாக காலம் தள்ளுவது என்பது சாத்தியமே இல்லாத ஒரு விஷயம். அடுத்த 5 வருடங்களுக்குள் உங்களை நீங்கள் பொருளாதார ரீதியாக தயார் செய்து கொள்ளவில்லை என்றால் நிலைமை ரொம்பவே மோசமாகிவிடும். 

இது ஏதோ உங்களை சும்மா பயமுறுத்துவதற்காக சொல்லப்படும் விஷயம் கிடையாது, இதுதான் நிதர்சனமான உண்மை. 

செயற்கை நுண்ணறிவின் விஸ்வரூபம்!

இன்றைய காலகட்டத்தில் உலகத்தையே தூங்க விடாமல் மிரட்டிக்கொண்டு இருக்கும் ஒரு பிரம்மாண்டமான தொழில்நுட்பம் என்றால் அது செயற்கை நுண்ணறிவு (AI) தான். ஒரு காலத்தில் ஒரு புதிய டெக்னாலஜி கண்டுபிடிக்கப்பட்டால், அது சாதாரண மக்களை வந்து சேர பல வருடங்கள் ஆகும். ஆனால் இப்போது சாட் ஜிபிடி (ChatGPT) போன்ற ஏஐ டூல்ஸ் வந்த சில மாதங்களிலேயே பலருடைய வேலைகளுக்கு ஆப்பு வைத்துவிட்டது. 

இன்னும் சில வருடங்களில் மனிதர்கள் கஷ்டப்பட்டு செய்யும் பல வேலைகளை ஒரு சின்ன கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் மிக சுலபமாக செய்து முடித்துவிடும். அதனால், இந்த காலமாற்றத்திற்கு ஏற்ப உங்களை நீங்கள் அப்டேட் செய்து கொள்ளவில்லை என்றால், வேலைவாய்ப்பை இழப்பது நூறு சதவீதம் உறுதி.

காணாமல் போகும் மிடில் கிளாஸ்!

இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு பகீர் தகவல் என்னவென்றால், இனி வரும் காலங்களில் நடுத்தர வர்க்கம் என்ற ஒரு பிரிவே உலகில் இருக்காதாம். ஒன்று நீங்கள் பணக்காரராக இருப்பீர்கள், இல்லை என்றால் வறுமைக்கோட்டிற்கு கீழ் ஏழையாக இருப்பீர்கள். அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி ராக்கெட் வேகத்தில் விண்ணை முட்டுகிறது. ஆனால் உழைக்கும் மக்களின் சம்பளம் மட்டும் அதே இடத்திலேயே நிற்கிறது. இதே நிலைமை நீடித்தால், இப்போது மிடில் கிளாஸாக காலரை தூக்கி விடுபவர்கள் மிக சீக்கிரமே ஏழைகளாக மாறும் அபாயம் உள்ளது.

இதையும் படியுங்கள்:
தித்திப்பின் கதை: ஒரு விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு!
ai impact on jobs

இதிலிருந்து தப்பிக்க சில வழிகள்! 

  • மணிக்கணக்கில் மொபைல் போனில் ரீல்ஸ் பார்ப்பதை உடனே நிறுத்திவிட்டு, அந்த பொன்னான நேரத்தை உருப்படியாக ஏதாவது ஒரு புதிய விஷயத்தை கற்றுக்கொள்ள பயன்படுத்துங்கள்.

  • வெறும் டிகிரியை மட்டும் வைத்துக்கொண்டு இனி வேலை தேட முடியாது. கோடிங், டிஜிட்டல் மார்க்கெட்டிங், கன்டென்ட் கிரியேஷன் மற்றும் ஏஐ பிராம்ப்டிங் போன்ற எந்த வேலைக்கு மார்க்கெட்டில் அதிக டிமாண்ட் உள்ளதோ அதை தேடிப்பிடித்து கற்றுக்கொள்ளுங்கள்.

  • கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை பேங்க் அக்கவுண்டில் சும்மா தூங்க வைக்காதீர்கள். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட் அல்லது உங்களுக்கு தெரிந்த ஏதாவது ஒரு பிசினஸில் பணத்தை முதலீடு செய்யுங்கள். பணம் உங்களுக்காக உழைக்க வேண்டும்.

  • மாசம் பிறந்தால் வரும் அந்த ஒரே ஒரு சம்பளத்தை மட்டும் நம்பி இருக்காமல், உங்களின் ரெகுலர் வேலைக்கு நடுவே கூடுதல் வருமானம் தரக்கூடிய ஒரு சைடு பிசினஸை இன்றே தொடங்குங்கள்.

இதையும் படியுங்கள்:
ஒரு நாளைக்கு ஒரு முட்டை ok... அதற்கு மேல் சாப்பிட்டால் என்ன ஆகும்?
ai impact on jobs

எல்லாவற்றையும் நாளைக்கு பார்த்துக்கலாம், அடுத்த வருடம் ஆரம்பிக்கலாம் என்று சோம்பேறித்தனமாக இருப்பவர்களுக்கு அடுத்த 5 வருடங்கள் மிகப்பெரிய நரகமாக மாறப்போகிறது. இப்போது விட்டால் வேறு எப்போதுமே வாய்ப்பு கிடைக்காது என்ற இக்கட்டான நிலையில் தான் நாம் நிற்கிறோம். 

வாய்ப்புகள் நம் கண் முன்னாடியே கொட்டி கிடக்கின்றன. அதை சரியாக பிடித்து பயன்படுத்துபவர்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியாளர்களாக மாறுவார்கள். எல்லாவற்றையும் வேடிக்கை மட்டும் பார்ப்பவர்கள் கடைசி வரை ஏழையாகவே இருக்க நேரிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com