அடிச்சு கேட்டாலும் இந்த 5 விஷயங்களை எப்போதும் ரகசியமாக வைத்துக்கொள்ளுங்கள்!

Always keep these 5 things a secret.
Always keep these 5 things a secret.Imge credit: wired

கடவுளிடம் பிரார்த்தனை செய்யும்போது அதை எப்போதும் வெளியில் சொல்ல மாட்டோம். ஏனெனில் வெளியில் சொன்னால் அது நடக்காது என்பது நம்முடைய நம்பிக்கை. கண்களுக்குத் தெரியாத கடவுளிடம் சொன்னாலே நடக்காது என்றால், எந்த நம்பிக்கையில் நாம் மனிதர்களிடம் கூறுகிறோம். மனிதர்களிடம் சொன்னால் நடக்காது என்பது நம்பிக்கையல்ல. அதுதான் உண்மை.

உங்களுடைய சந்தோசத்தை உண்மையிலேயே யாரெல்லாம் விரும்புகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? தெரியும் என்றுத்தான் நீங்கள் கூறுவீர்கள். ஆனால் உண்மையில் உங்களுக்கு அது தெரியாது. ஒருநாள் சூழ்நிலை உங்களுக்கு அதைக் கற்பிக்கும்போது உண்மை புலப்படும். அதுவரையில் உங்களுக்கு இவரிடம் இது சொன்னால் ஒன்றும் ஆகாது என்றுத்தான் நினைப்பீர்கள்.

உண்மை தெரியும் வரை சில விஷயங்களையாவது ரகசியமாக வைத்துக்கொள்ளுங்கள். அதாவது:

1. உங்களுடைய வருமானம்: வீட்டிலும் சரி வெளியிலும் சரி யாராவது உங்களுடைய சம்பளத்தைப் பற்றிக் கேட்டால், ஒரு மடங்கு குறைவாகவே சொல்லுங்கள். ஏனெனில் அப்போதுதான் உங்கள் சுய செலவுகளுக்கு பணம் மிஞ்சும். அதேபோல் உங்களிடம் பழகுபவர்களும் அதை கணக்கு செய்ய மாட்டார்கள். நீங்கள் தனியாக செல்லும்போது முழு துணையாக இருப்பது பணம் தான் என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

2.  உங்களுடைய பயம்: பயம் என்பது உங்களுடைய பலவீனம் ஆகும். அதைப் பயன்படுத்தி உங்களை எப்படி வீழ்த்தலாம் என்று பலரும் போட்டிப்போட்டுக் கொண்டு வருவார்கள். வீழ்த்துவது கூடப் பரவாயில்லை. உங்களை அடிமையாக்கி அனைத்து வேலைகளையும் செய்துக்கொள்வார்கள். அந்த வேலைகளை நீங்கள் சுயமாய் செய்தால் கூட பெரிய அளவில் முன்னேறி விடாமல்.

3. உங்களுடைய காதல்: உங்களுடைய காதல் கதையையும் காதலையும் மற்றவர்களிடம் இடியே விழுந்தாலும் சொல்லிவிடாதீர்கள். பிறகு நீங்கள் காதல் தோல்வியின் கதையில் தான் வாழ நேரிடும். அழகான விஷயங்களைக் கண்டால் சிலருக்குப் பிடிப்பதில்லையாம்.

இதையும் படியுங்கள்:
உங்கள் வாழ்வில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய 6 விஷயங்கள் எவை தெரியுமா?
Always keep these 5 things a secret.

4. உங்களின் பெரிய திட்டங்கள்: திட்டங்களை அந்த துறை சம்பதப்பட்ட ஆட்களிடம் கேட்டு ஆலோசனைப் பெற்றுக்கொள்வது சரி. ஆனால் அந்த திட்டம் சரி வரும் என்று தெரிந்தப் பிறகு அனைவரிடமும் கூறிக்கொண்டிருந்தீர்கள் எனென்றால், ஆளாலுக்கு ஒரு யோசனைக் கூறி அதன்படி செய்யும்படி உங்களைக் கட்டாயப்படுத்துவார்கள். அதேபோல் நீங்கள் உங்களுடைய திட்டத்தில் நிலையாக இருப்பதும் அவசியம்.

5. குடும்ப விஷயங்கள்: குடும்பத்திற்குள் எதாவது பிரச்சனை வந்தால் அதை அங்கேயே சரி செய்துவிடுங்கள். அல்லது நாட்கள் இழுத்தது என்றால், அப்போதும் பொருமையாக இருந்து குடும்பத்தார்களிடமே பேசுங்கள். குடும்ப விஷயங்களை மட்டும் வெளியில் சொல்லாதீர்கள். இது குடும்பத்தில் மேலும் மேலும் பிரிவினையையே உண்டாக்கும்.

இந்த 5 விஷயங்களை எப்போதும் ரகசியமாக வைத்துக்கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com