
நம்மிடம் இருக்கும் சில குணங்களே நமக்கு பலவிதங்களில் சாதக பாதகங்களை ஏற்படுத்திவிடும். அதற்கு தகுந்தாற்போல நாம் பல தருணங்களில் நம்மை நாம் மாற்றிக்கொள்ளவேண்டும்.
அப்படி வளைந்து கொடுத்து போகும் தன்மை இருப்பதே நமக்கு நல்லது.
பொதுவாக நமக்கு மேலே உள்ளவர்களைப் பாா்த்து நாம் ஏக்கப் பெருமூச்சு விடவே கூடாது. அந்த நேரம் நமக்கு தாழ்வு மனப்பான்மை வந்துவிடும். அதேபோல நமக்கு கீழே இருப்பவர்களைஏளனமாக பாா்க்கக்கூடாது. அப்படி பாா்க்கும் நிலையில் தலைக்கனம் வந்துவிடுமே! அதேபோல நம்மை நாமே யாரோடும் ஒப்பிட்டுப்பாா்க்கக் கூடாது. அப்படி ஒப்பிட்டுப்பாா்த்தால் நமக்குள் நம்மைக் கேட்காமலே ஈகோ வந்துவிடும்.
அதை நம்மால் சமாளிக்க முடியாமல் போகும் நிலை வரும்போது நமக்கு வந்த தலைக்கனம் பலவித சங்கடங்களை ஏற்படுத்திவிடும்.
அதனால் வரும் இழப்பானது நட்பு மற்றும் உறவுகளில் விாிசலை ஏற்படுத்திட வாய்ப்புகளே அதிகம். ஆனால் எது எப்படி இருந்தாலும், எந்தவித குணங்களையும் மாற்றி அமைக்கும் பக்குவம் பணத்திற்கு மட்டுமே உண்டு.
அப்படிப்பட்ட சூழலில் பணம் இருந்தால் மதிப்பு அதிகமாகும்.
அதேபோல காசு பணம் தரும் தைரியத்தை யாராலும் தரமுடியாது.
அதனால் முடிந்தவரை வாலிபம் இருக்கும்போதே பணம் சம்பாதித்து. வைத்துக்கொள்ளவேண்டும்.
அதற்கு சில உதாரணங்களை சொல்லலாம். அதாவது பகலில் எாியும் விளக்கானது பயன் தரப்போவதில்லை. கடலில் பெய்யும் மழை பயனற்றதாகிப் போய்விடும். வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றதாகி விடும். நோய் உள்ளவனுக்கு கொடுக்கப்படும் உணவு பயனில்லாமல் போகும்.
அதேபோல முட்டாள்களுக்கு கூறும் அறிவுரை பயனற்றதாகிவிடும். இவையெல்லாம் எதற்கு உதாரணமாக சொல்லலாம் என்றால் பணமே உலகத்தில் பிரதானமாகும். (An investment essential for life) பணம் இல்லை என்றால் நிலைமை தலைகீழ்தான்.
இந்த தத்துவத்தை உணர்ந்து நம்மை நாமே முதலில் புாிந்துகொண்டு யதாா்த்தம் உணர்ந்து வாழ்க்கைப் பாதையை கடந்து வந்தாலே நல்லது. அதுவே நல்ல வாழக்கைக்கான ஆரம்பமாகும்.