முடியும் என்றால் எல்லாமும் முடியும்!

you can do it...
motivational articlesImage credit - pixabay
Published on

முடியும் என்ற  மந்திரச் சொல்லை மனதிற்குள் ஆழமாக உரக்கச் சொல்லுங்கள்.

மகான் ராமக்ருஷ்ணர் ஒரு கதை சொன்னார். அடர்ந்த காடு வழியே   நடந்துபோன வழிப்போக்கன் களைத்து ஒரு மரத்தின் கீழ் அமர்ந்தான்.  அந்த மரம் கேட்டதெல்லாம் தரும் கற்பக விருட்சம் என்று அவனுக்குத் தெரியாது. அவன் மனத்தில்  இந்த நேரத்தில் பஞ்சு மெத்தை படுக்கை சுகமாக இருக்குமே என நினைத்தான்.  படுக்கை வந்தது.  வயிற்றுக்கு உணவு வந்தால் நன்றாக இருக்குமே என நினைக்க சுடச்சுட உணவு வந்தது. உணவால் களைப்பு போனது.  உறக்கம் எட்டிப் பார்த்தது.  அடர்ந்த காட்டில் ஒரு புலி என்னைத் தாக்கினால் என எண்ண புலி வந்தது. ஆளே காலி. எதை நினைக்கிறோம் அதுவாகவே ஆகும் மனம். நல்லதை நினைத்தால் நல்லதையும்,தீயதை நினைத்தால் தீமையும் தரும். எண்ணங்கள் சுத்தமானால்  செயல் சுத்தமாகும்.  விஷம எண்ணம் விஷமாக ஆகும். சுத்தமான உறுதியான தன்னம்பிக்கை கொண்ட எண்ணம்  கொண்டவனால் அனைத்தையும்  சாதிக்க முடியும். மன எண்ணத்தின் மூலம் எதுவும் சாதிக்கலாம்.

முடியும் என்ற மனம் கொண்டவனாய் இங்கு எதுவும் முடியும். பிரம்மாண்ட ஆலமரம். அதன் வேர்கள், விழுதுகள், கிளைகள் எல்லாம் எப்படி எழுந்தன. அதன் உயிர் யாரோ விதைத்த சின்ன விதை. அது நிழல் கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் விதைத்த விதை. தான் அழியும் வரை நிழல் கொடுத்து நிற்கும். மாவீரன் அலெக்சாண்டர் உலகின்  பெரும் பகுதியைப் பிடித்தான். அந்த மாவீரன் ஒருமுறை தன் படை தளபதிகள், போர் வீரர்கள் அனைவரையும் அழைத்தான். 

இதையும் படியுங்கள்:
மனதை மதித்து வெற்றியை வரவேற்போம்!
you can do it...

அதுவரை தன்வசம் வைத்திருந்த நிலப்பகுதிகள் அனைத்தையும் பிரித்து தனக்கென எதுவும்  வைத்துக் கொள்ளாமல் எல்லோருக்கும் பகிர்ந்து அளித்தான். இதை கவனித்த படைத் தளபதி ஓருவர் "மன்னா, உங்களுக்கென்று ஒரு பிடி நிலத்தை கூட வைத்துக் கொள்ளாமல் எல்லாவற்றையும் கொடுத்து விட்டீர்களே! உங்களுக்கு என்று எது இருக்கிறது" என்றான்.

கம்பீரமாக சிரித்தபடி  அலெக்சாண்டர் "இருக்கிறது. இந்த நிலங்களைக் பிடிக்க வைத்த விதை இருக்கிறது.  அந்த விதையின் பெயர் தன்னம்பிக்கை. அதை வைத்து என்னால் உலகத்தையே புரட்டிப்  போட முடியும்"  என்றார். வரலாற்று நினைவுகளில் மட்டுமல்லாது, தன்னம்பிக் கையின் அபார பலம், அதன் வீச்சு, ஒவ்வொரு தனி மனித வாழ்விலும் விழித்துக் கொண்டே இருக்கிறது. விழித்துக் கொண்டவர்கள்தான் விண்ணை கூட விலை பேசுகிறார்கள். விழிப்புடன் எழுங்கள்.  அந்த நம்பிக்கையைக் கொண்டு எதையும் சாதிக்க முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com