மனதை மதித்து வெற்றியை வரவேற்போம்!


Let's welcome success!
success articles...Image credit - pixabay
Published on

மது நலம் விரும்பிகள் இப்படி சொல்வார்கள். 'உன் மனசுக்கு பிடிச்சா செய் அல்லது விட்டுடு. பிடிக்காம செய்து நேரத்தோட வாழ்க்கையை வீணடிக்காதே' .  ஆம் உங்கள் மனதில் இதை செய்தால் என்னால் வெற்றிபெற முடியும் என்ற எண்ணமும் அதற்கான இலக்கும்  இருந்தால் நிச்சயம் அதை அடைய முடியும்.

இலக்கை அடைய முடியும் என்ற நம்பிக்கை மனதில் இருக்கும்போது எக்காரணத்தைக் கொண்டும் எந்தத் தடைகள் வந்தாலும் அந்த பயணத்தை நிறுத்திவிடாமல் மேலே தொடரவேண்டும்.  அது மட்டுமே நீங்கள் செய்யவேண்டியது. உங்கள் உழைப்பிற்கான உடனடி பலன்கள் கிடைக்காமல் போகலாம்.  இடையே பலவித எதிர்மறை பேச்சுகளுக்கு ஆளாகலாம். ஆனால்  இலக்கை அடையும் வரை பயணத்தைத் தொடரும் விடாப்படியான உறுதியை மனதில் விதைத்துக் கொள்ளுங்கள்.

அந்த விளையாட்டு மைதானத்தில் எப்பொழுதும் சிறுவர்கள் ஒன்று கூடி விளையாடுவது வழக்கம். அங்கு வரும் கல்லூரி இளைஞர்கள் கிரிக்கெட் ஆடும்போது அந்த சிறுவர்களின் வேலை வெளியே விழும் பந்தை எடுத்து வந்து அவர்களிடம் தருவதுதான். அதில் ஒரு சிறுவன் மட்டும் பந்தை எடுத்து வந்து தர மாட்டான். அவனுடைய விளையாட்டில் மட்டுமே கவனமாக இருப்பான்.

அந்த சிறுவர்களில் ஒருவன் கேட்டான். "ஏன் உனக்கு பந்து போடுவதில் ஆசையே இல்லையா?" என்று. அவன் சொல்கிறான் "இல்லை எனக்கு அதற்கு மேல் பெரிய ஆசை ஒன்று இருக்கிறது பந்தை தூக்கி போட வேண்டும் என்று என் மனம் சொல்லவில்லை. அதோ அந்த  அண்ணாக்களின் இடத்தில் நான் இருந்து பந்தை எதிர் கொள்பவன் ஆகத்தான் இருப்பேன்" என்று சொல்கிறான். பின்னாளில் அந்த சிறுவன் நிச்சயமாக நல்ல கிரிக்கெட் வீரராகத்தான் உயர்வான். ஏனெனில் அவன் மனம் சொல்வதை மட்டும் கேட்பதுடன் அவனுக்கென்று ஒரு இலக்கையும் தீர்மானிக்கிறானே?

வெற்றியாளர்கள் பலரும் தங்கள் மனதில் நிர்ணயித்த இலக்கைப்பெற கடுமையாக போராடியவர்களாகத்தான் இருப்பார்கள். காரணம் என்ன என்றால் அவர்களுக்கு நம்பிக்கையான விஷயத்தில் கடைசிவரை உறுதியாக இருந்து அதை விட்டுக் கொடுக்காமல் செயல்பட்டதுதான். சாதிக்க நினைக்கும் பலரும் தங்களுக்கு நம்பிக்கை உள்ள தாங்கள் மனதால் விரும்பிய விஷயத்தை விட்டுக் கொடுத்ததே இல்லை என்பதுதான்.

இதையும் படியுங்கள்:
செயல்பாடுகளே வெற்றியின் விதைகள்!

Let's welcome success!

வாழ்க்கை விலைமதிப்பற்றது. வீணாக்கும் காலங்கள் ஆயிரம் கோடி தந்தாலும் திரும்பவராது. அதேபோல் மனது விரும்பாத விஷயங்கள் உங்களைத்தேடி வந்தாலும் அதைத் தவிர்க்கும் முடிவை உடனே எடுங்கள்.

Life is Always About Decisions என்று சொல்வார்கள் அதாவது குறிப்பிட்ட நேரத்தில் நாம் என்ன முடிவெடுக்கிறோம் என்பதை பொறுத்துதான் வெற்றி என்பது கிட்டும்.

நமக்குப் பிடித்தமில்லாதவற்றில் சக்தியையும் நேரத்தையும் இழந்துவிட்டு மனதில் வேதனையுடன்  தோல்வியாளராக வாழ்வதை விட மனதை மதித்து மனதுக்கு பிடித்த வற்றில் கவனம் செலுத்தி அதில் சில தோல்விகள் வந்தாலும் விடாப்பிடியான உழைப்பைக் தந்து வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்தலே சிறந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com