
தென்கோடியில் பிறந்து, உலகுக்கே ஒரு வழிகாட்டி விஞ்ஞானியாக வாழ்ந்தவர்தான் இராமேஸ்வரத்தின் மண்ணின் மைந்தர் அப்துல் கலாம் ஐயா அவர்கள். ஏவுகணை நாயகனின் பொன்மொழிகள் இளைஞர்கள் சக்தியை தட்டி எழுப்பும் மந்திர மொழிகள்… அப்துல் கலாம் கூறிய வெற்றிப் பொன்மொழிகள்..!
ஏழ்மையாக பிறப்பது தவறல்ல ஏழ்மையாக இறப்பதுதான் தவறு..!
உலகம் முதலில் உன்னை அறிவதைவிட, உலகிற்கு முதலில் உன்னை அறிமுகம் செய்துகொள்.
கனவு காணவேண்டும்... கனவு மெய்ப்பட கனவு காணவேண்டும். தூக்கத்தில் வருவது கனவல்ல, உங்களை தூங்கவிடாமல் செய்வதே கனவு.
வாழ்க்கையில் வாய்மை வேண்டும். உண்மையே பேசவேண்டும். உழைக்க வேண்டும். துன்பத்தைக் கண்டு பயப்படக்கூடாது இதுவே வாழ்வின் வெற்றி.
முடியாது என்று சொல்லும் நோய்தான் நம்மிடம் அதிகம் பரவி இருக்கிறது, முடியும் என்று சொல்பவர்களால் மட்டுமே வரலாறு படைக்க முடிகிறது.
உனது கைரேகையை பார்த்து எதிர்காலத்தை தீர்மானித்துவிடாதே, ஏனென்றால் கை இல்லாதவனுக்கும் எதிர்காலம் உண்டு..!
குறிக்கோள், கற்றல், கடின உழைப்பு, விடாமுயற்சி இவை நான்கும் இருந்தால் எதையும் சாதிக்க முடியும்..!
வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டுமானால் நல்ல நண்பர்கள் தேவை. ஆனால் வாழ்நாள் முழுவதும் வெற்றிபெற வேண்டுமானால் ஒரு எதிரியாவது தேவை.
வாய்ப்புக்காக காத்திருக்காதே, உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக்கொள்.
வெற்றிபெற வேண்டுமென்ற பதற்றம் இல்லாமல், இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி.
நீங்கள் சூரியனைப்போல் பிரகாசிக்க வேண்டுமானால், முதலில் நீங்கள் சூரியனைப்போல் எரியவேண்டும்.
அழகைப் பற்றி கனவு காணாதீர்கள், அது உங்கள் கடமையை பாழாக்கிவிடும்..!
கடமையைப் பற்றி கனவு காணுங்கள் அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்..!
கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே, அது உன்னை கொன்றுவிடும். கண்ணைத் திறந்து பார் அதை நீ வென்றுவிடலாம்.
நம்பிக்கை நிறைந்த மனிதர் யார் முன்னேயும் எப்போதும் மண்டியிடத் தேவையில்லை.
சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவையில்லை. அதேபோல் துன்பத்தை சமாளிக்க தெரிந்தவனுக்கு வாழ்வில் தோல்வியே இல்லை.