
வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கு இருக்கும். ஆனால் அனைருமே இலக்கை அடைந்து வெற்றியாளர் களாக, சாதனையாளர்களாக மாறிவிடுவது கிடையாது. ஏன் தெரியுமா? வெற்றியடைய வேண்டும் என்ற ஆசை இருந்தால் மட்டும் போதாது அதற்கு முக்கியமாக சில வழிமுறைகள் மற்றும் பழக்கங்கள் இருக்க வேண்டும்.
முதல் வெற்றிதான் அடுத்தடுத்து பெறப்போகும் வெற்றிகளுக்கு அடிப்படை என்று கண்டறிந்துள்ளனர் உளவியல் நிபுணர்கள். முதல் வெற்றியானது நாம் பெறப்போகும் அடுத்த வெற்றிக்கு அடித்தளமாக அமைகிறது. நாம் பெறும் வெற்றிதான் மக்கள் மத்தியில் நமது செல்வாக்கை உயர்த்துகிறது.
நாம் எந்த செயலையும் பரபரப்புடன் கூச்சலும் குழப்பமாக செய்தால் எதையும் சிறப்பாக செய்யவே முடியாது. இதில் சலிப்பும் வெறுப்பும் வந்துவிடும் இதனால் குழப்பம்தான் ஏற்படும் எதையும் நிதானமாக அமைதியாக யோசித்தால் சிறப்பான முடிவுகள் எடுக்க முடியும் அது எளிதான தீர்வையும் கொடுத்துவிடும் அனைத்து விஷயங்களிலும் நிதானமும் அமைதியும் தேவை மனம் பரபரப்பாக இருந்தால் எந்த செயலையும் செய்யாதீர்கள் ஒரு வேலையை செய்ய தொடங்குவதற்கு முன்பாக நிதானமாக யோசித்து அமைதியாக முடிவு எடுங்கள்.
வாழ்வில் விரைவில் இலக்கை அடையவேண்டும் என்றால் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும் என்கிறார்கள் சாதனையாளர்கள். நாம் ஒரு விஷயம் நடக்க வேண்டும் என நினைத்தவுடனேயே அதனை யாரிடமாவது பகிர்நதுக்கொள்ள நினைக்கின்றோம். ஆனால் இது இந்த பழக்கம் வெற்றியை உங்கள் பக்கத்தில் நெருங்கவே விடாது என்கிறார்கள் சாதனையாளர்கள்.
"முதல் கோணல் முற்றிலும் கோணல்"என்பார்கள். எந்த ஒரு செயலையும் முதலில் செய்யும்போது வெற்றி பெறும் வகையில் சிறப்பாக செய்து முடிக்க வேண்டும். இதற்கு நீங்கள் அமைதியாக வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும் என்கிறார்கள்.
"நான் ஒரு காரியத்தில் வெற்றி பெற்று விட்டால், அதைப் பற்றி தம்பட்டம் அடித்து கொண்டாட மாட்டேன், அமைதியாக இருந்து அடுத்த சாதனைக்கான முயற்சியில் அமைதியாக இறங்கிவிடுவேன்" இப்படி சொன்னவர் யார் தெரியுமா? உலகின் டாப் ஒன் பணக்காரராக இருக்கும் எலன் மாஸ்க்.
நீங்கள் ஒரு இலக்கை கொண்டிருக்கின்றீர்கள் என்றால், அது நிறைவேறும் வரையில் யாரிடமும் பகிராதீர்கள். அதற்கு பதிலாக நீங்கள் தனிப்பட்ட ரீதியில் அதனை ஒரு ஒரு நோட்டு புத்தகத்தில் அதை எழுதி வைக்கலாம்.
இதனால் மற்றவர்களின் பல்வேறு கருத்துக்களில் இருந்து தப்பிக்கலாம். இல்லாவில் நீங்கள் உங்கள் இலக்கை பகிரும் ஒவ்வொரு நபரும் அவர்களின் நேர்மறை மற்றும் எதிர்மறை கருத்துக்களை கூறி உங்களை திசைத்திருப்ப நேரிடும்.
உங்களின் இலக்கை அடைய நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் ஏற்படும் சின்ன சின்ன வெற்றிகள் அல்லது சின்ன சின்ன தோல்விகள் என அனைத்தையும் எழுதி வைப்பதால் எதை செய்தால் வெற்றி என்பதும், எதை செய்தால் தோல்வி ஏற்படும் என்பதும் உங்களுக்கு தெளிவாக தெரிந்துவிடும்.யாரிடமும் விவாதித்து ஆலோசனை கேட்கவேண்டாம்.
இதை செய்யப்போகிறேன் அதை செய்யப் போகிறேன் என மற்றவர்களிடம் சொல்லுவதை நிறுத்திவிட்டு செய்யவேண்டியதை செய்தே காட்டிவிடுங்கள். உண்மையில் செயல்கள்தான் பேசவேண்டும் அதில்தான் வெற்றி ஒழிந்திருக்கின்றது. உங்கள் இலக்கு நோக்கி செல்லும் போது இடர்பாடுகள் ஏற்படும்போது. கிடைக்கப்போகும் வெற்றியை கற்பனையில் நினைத்து கொள்ளுங்கள். உற்சாகம் ஏற்படும். அது மிகப்பெரும் பலத்தை கொடுக்கும்.
குறிப்பாக உங்களின் திறமையை குறைத்து மதிப்பிடுபவர்களிடமும் , உங்களை மட்டந்தட்டுபவர்களிடமும் நீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள் என்பதை சொற்களால் புரியவைக்க ஒரு போதும் முயற்சி செய்யாதீர்கள். சாதித்து விட்டு அவர்களுக்கு உங்கள் திறமையை வெளிக்காட்டுங்கள்.
நீர் நிலைகளில் மிதக்கும் வாத்துக்களை பார்த்து இருக்கிறீர்களா! அது வெளியே பார்க்க அமைதியாக இருப்பதுபோல் தெரியும். ஆனால், அதன் கால்கள் தண்ணீருக்குள் ஒரு நிமிடத்தில் பல நூற்றுக்கு மேற்பட்ட முறைகள் இயங்கிக் கொண்டு இருக்கும். நமது நடவடிக்கைகளும் இப்படிதான் இருக்க வேண்டும். வெளியே அமைதியாக இருந்து, உள்ளே நமது இலக்கு நோக்கி வேகமாக பயணித்து கொண்டிருக்க வேண்டும் என்கிறார்கள். இதை அறிந்துதான் நம் பெரியவர்கள் "எதையும் அமைதியாக இருந்து சாதித்து காட்டு" என்கிறார்கள்.