
இன்றைய இளைஞர்களிடையே பெரும் தொல்லையாக இருப்பது அளவுக்கு அதிகமாக யோசிப்பதே. அதாவது over thinking. “நாம் இன்று over think செய்ய வேண்டும்” என்று தினமும் திட்டம் போட்டு யாரும் செய்ய மாட்டார்கள். ஆனால், இந்த overthink தானாகவே தினமும் வந்து ‘உள்ளேனைய்யா’ என்று கூறி மனதையும் மூளையையும் நிம்மதி இல்லாமல் ஆக்கிவிடும்.
குறிப்பாக இரவு நேரங்கள் என்றால் சொல்லவே தேவையில்லை. அந்த நாள் முழுவதும் வேலை பார்த்து சோர்வடைந்து உடம்பு சற்று நிம்மதியாக ஓய்வெடுக்க செல்லும்போது ‘ஓய்வா? அதெல்லாம் உனக்கெதுக்கு? என்று இந்த overthink வந்துவிடும்.
இரவு நேரங்கள் மட்டும் இல்லாமல், வேலை இல்லாமல் இருக்கும் நேரத்திலோ, யாராவது ஏதாவது கூறிவிட்ட பிறகோ நாம் வழக்கத்தை விட அதிகமாக யோசிப்போம். ஒரு குழப்பநிலை ஏற்படும் போது overthink செய்வோம். அது ஒரு பெரிய மன உளைச்சலை தந்து வேலைகளை செய்வதிலிருந்து நம்மை தடுக்கும். நம் மன நிம்மதியும் கெடுத்து டிப்ரஷனுக்குள் தள்ளிவிடும்.
மனதில் ஏற்படும் குழப்பத்தின் காரணமாக overthink செய்வது ஒருவகை. அதாவது நாம் இந்த வேலையை செய்யலாமா? வேண்டாமா? செய்தால் என்னவாகும்? செய்யவில்லை என்றால் என்னவாகும்? போன்ற எண்ணற்ற கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக்கொண்டு overthink செய்வது.
நீங்கள் தொடர்ந்து இந்த வகையான overthink ல் ஈடுபட்டு மன நிம்மதி இல்லாமல் இருந்தால் இந்த யுக்திகளை பின்பற்றுங்கள்.
1. Overthink செய்ய ஆரம்பிப்பது போல் இருந்தால் ஏதாவது வேலையிலேயோ அல்லது உங்களுக்கான பொழுதுபோக்கு திறன்களிலோ உடனே உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.
2. பொதுவாக அதிகமாக யோசித்தால் அதிக பசி எடுக்கும். ஆனால் நீங்கள் யோசிக்க ஆரம்பிப்பதற்கு முன்பே நன்றாக சாப்பிட்டு விட்டு தூங்கி விடுங்கள்.
3. நாம் அதிகமாக யோசிப்பதால் நமது அதிகப்படியான பொன்னான நேரங்கள் தான் வீணாகிறது என்பதை அவ்வப்போது நினைவு கூர்ந்து பாருங்கள்.
மற்றொரு வகையான overthink என்பது ஆரம்பிக்காத வேலைக்கு பூஜை போட்டு, ஆட்கள் கூட்டி வேலை செய்து பெரிய ஆளாக மாறுவது போல் அதில் எண்ணற்ற கதைகளையும் திணித்து யோசித்து கொண்டு இருப்பார்கள். இன்னும் சிலர் தொழில் ஆரம்பிப்பதற்கும், பரீட்சையில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கும் திட்டம் தீட்டிக்கொண்டும் அதிக யோசனைகளை செய்து கொண்டும் வெட்டியாக பொழுதை போக்கிக் கொண்டிருப்பார்கள்.
இந்த வகையான overthink நமது நிம்மதியை கெடுக்காவிட்டாலும், நமது நேரத்தை வீணடிக்கும். செயல்முறை படுத்தாத திட்டங்கள் இருந்தால் என்ன? இல்லை என்றால் என்ன? Overthink செய்யாமல் ஒரு திட்டத்தை செய்ய ஆரம்பித்தாலே போதும், பிறகு தானாகவே அந்த திட்டம் உங்களை அழைத்துச் செல்லும்.
இந்த இரு வகையான overthink ல் நீங்கள் எதை அடிக்கடி செய்கிறீர்கள் என்று தெரிந்து கொண்டு அதிலிருந்து வெளிவரும் முயற்சியை மேற்கொள்ளுங்கள்.