தனிமையில் இருக்கீங்களா? இந்த 5ல் கவனம் செலுத்துங்கள்!

Self-examination
Are you single
Published on

னிமையில் இருக்கும் நேரத்தை வரப்பிரசாதமாக நாம் கருத வேண்டும். ஆனால் நாம் இப்படி தனிமையில் இருக்கும்போது அதை பயனுள்ள வகையில் கழிக்கவேண்டும். தனியாக இருக்கும் நேரத்தில் இதெல்லாம் செய்யக்கூடாது, இதெல்லாம் செய்ய வேண்டும் என சில விஷயங்கள் உள்ளன. அதை நீங்கள் கண்டிப்பாக கடைபிடித்தாக வேண்டும். 5 விஷயங்களை பார்ப்போம்.

1-சுய பரிசோதனை: 

நீங்கள் தனியாக இருக்கும் சமயத்தில், உங்களை சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள். உங்கள் எண்ணங்கள், உணர்வுகள், அனுபவங்கள் குறித்து ஆழமாக யோசியுங்கள். உங்கள் இலக்கு என்ன, குறிக்கோள் என்ன போன்ற அர்த்தமுள்ள கேள்விகளை உங்களிடமே கேட்டுக்கொள்ளுங்கள். இதை செயல்படுத்த சிறந்த வழி, இவை எல்லாவற்றையும் எதிலாவது எழுதி வையுங்கள். அப்போதுதான் உங்கள் ஆழ்மனசு குறித்து உங்களுக்கு ஒரு புரிதல் ஏற்படும். உங்களை நன்கு புரிந்து கொள்வீர்கள்.

2- தனிமைப்படுத்தி கொள்ளாதீர்கள்:

நீங்கள் தனிமையில் நேரத்தை செலவிடும்போது உங்கள் மனநிலை நன்றாக இருக்கும் என்பது உண்மைதான் என்றாலும், மற்றவர்களோடு பழகுவதை முற்றிலும் நிறுத்திவிடாதீர்கள். முக்கியமாக உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்ளாதீர்கள். நம் மனநிலை நன்றாக இருக்க வேண்டுமென்றால் மனிதர்களோடு அவசியம் உரையாட வேண்டும். உங்கள் நண்பர்கள், உறவினர்களை அடிக்கடி சந்தித்து பேசுங்கள். உங்களுக்கு விருப்பமான சமூக நடவடிக்கைகளில் கலந்து கொள்ளுங்கள்.

3-பொழுதுபோக்கு:

நாம் தனிமையில் இருக்கும் சமயத்தில்தான் நமக்கு விருப்பமுள்ள, ஆர்வமுள்ள விஷயங்களை பின் தொடர முடியும். அது ஓவியம், எழுத்து, கவிதை, இசை என எதுவாகவும் இருக்கலாம். நீங்கள் சுதந்திரமாக இருக்கும் இந்த சமயத்தில்தான் உங்களுக்கு மகிழ்ச்சியை தரக்கூடிய விஷயங்களை செய்ய முடியும். இது உங்களின் படைப்புத் திறனை மட்டும் வளர்ப்பதில்லை; உங்களுக்கு ஒரு நிறைவையும் எடுத்துக்கொண்ட செயலை முடித்துவிட்டோம் என்ற சாதித்த உணர்வையும் கொடுக்கும்.

இதையும் படியுங்கள்:
உங்கள் சந்தோஷத்தை மற்றவர்களுக்காக அடமானம் வைக்காதீர்கள்!
Self-examination

4-தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதிலிருந்து விலகியிருங்கள்: 

தனிமையில் இருக்கும் அந்த சமயத்திலும் ஸ்மார்ட்போனையும் சமூக ஊடகங்களையும் பயன்படுத்திக் கொண்டிருக்காதீர்கள். தொடர்ந்து நீங்கள் இதை பயன்படுத்தி வந்தால், அதிகப்படியான தகவல்கள் உங்கள் மூளைக்குள் செல்லும். இதிலிருந்து கொஞ்சம் விலகி இருந்து பாருங்கள். உங்கள் சிந்தனைகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் நீங்கள் மதிப்பு கொடுக்க ஆரம்பிப்பீர்கள்.

5-எதிர்மறை சிந்தனைகளை:

நாம் தனிமையில் இருக்கும்போது பழைய நினைவுகளும் எதிர்மறை எண்ணங்களும் தோன்றும். இது இயல்பானது தான். ஆனால் எப்போதும் அதிலியே மூழ்கி இருந்தால், உங்களின் எதிர்கால வளர்ச்சி தடைபடும். நேர்மறை எண்னங்களை வளர்த்துக்கொண்டு, அடுத்து என்ன செய்யலாம் என்பதில் கவனம் செலுத்துங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com