நண்பர்களை விடப் புத்தகமே சிறந்தது என நினைப்பவரா நீங்க... உளவியல் சொல்லும் அதிர்ச்சி உண்மை!

Living Alone
Living Alone
Published on

வெள்ளிக்கிழமை இரவு வந்துவிட்டாலே பலருக்கும் கொண்டாட்ட மனநிலை வந்துவிடும். நண்பர்களுடன் வெளியே செல்வது, திரைப்படங்களைப் பார்ப்பது அல்லது உணவகங்களில் அரட்டை அடிப்பது எனப் பலரும் திட்டமிடுவார்கள். ஆனால் ஒரு குறிப்பிட்ட சாரார் மட்டும், எனக்கு உடல்நிலை சரியில்லை அல்லது வேலை இருக்கிறது என்று ஏதாவது ஒரு பொய்யைச் சொல்லிவிட்டு, வீட்டிற்குள் தாழிட்டுக்கொண்டு கையில் ஒரு புத்தகத்துடன் அமைதியாக அமர்வார்கள். 

இப்படிச் சமூகத்தை விட்டு விலகி, புத்தகங்களை மட்டுமே நேசிப்பவர்கள் வெறுமனே அமைதியானவர்கள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உளவியல் ரீதியாகப் பார்க்கும்போது, இவர்களிடம் சமூக விரோதப் பண்புகள் எனப்படும் ஆண்டி சோஷியல் குணாதிசயங்கள் இருக்க வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

கவசமாக மாறும் புத்தகங்கள்!

இப்படிப்பட்ட மனிதர்கள் சமூகத்தை வெறுப்பவர்கள் அல்ல. மனித உறவுகள் தங்களுக்கு மன உளைச்சலைத் தரும் என்று நம்புபவர்கள். ஒரு மனிதரிடம் பழகும்போது ஏற்படும் ஏமாற்றம், பொய் மற்றும் போலி ஆகியவற்றை எதிர்கொள்ளும் சக்தி இவர்களிடம் குறைவாக இருக்கலாம். எனவே, தன்னை யாரும் காயப்படுத்தாத, திருப்பிக் கேள்வி கேட்காத ஒரு உலகத்தைத் தேடுகிறார்கள். அதற்குப் புத்தகங்களே சிறந்த வழியாக அமைகின்றன. நிஜ உலகத்தின் சத்தத்தை விடப் புத்தகங்களின் அமைதி இவர்களுக்குப் பாதுகாப்பான உணர்வைத் தருகிறது.

ஆறு விதமான குணாதிசயங்கள்!

சமூகத்தில் கலக்காமல் தனிமையில் இருப்பவர்களிடம் பொதுவாக ஆறு விதமான குணங்கள் மறைந்திருப்பதாக உளவியல் நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். 

  1. இவர்களிடம் உணர்வுப்பூர்வமான விலகல் இருக்கும். யாரோடும் அதிகம் ஒட்டாமல் தள்ளி நிற்பார்கள். 

  2. மற்றவர்கள் மீது நம்பிக்கை இன்மை. மனிதர்கள் சுயநலவாதிகள் என்றும், எப்போது வேண்டுமானாலும் நம்மை ஏமாற்றுவார்கள் என்றும் இவர்கள் சந்தேகப்படுவார்கள். 

  3. சமூக அங்கீகாரத்தின் மீது பற்று இல்லாமை. எனக்கு யாரும் லைக் போட வேண்டாம், என்னைப் புகழ வேண்டாம் என்ற மனநிலையில் இருப்பார்கள்.

  4. முகத்தில் அடித்தாற்போல் பேசும் குணம். சமூக நாகரிகம் என்ற பெயரில் பொய்யாகப் பேசுவதை இவர்கள் வெறுப்பார்கள். 

  5. தங்களின் பலவீனத்தை மறைத்தல். மற்றவர்களிடம் மனம் விட்டுப் பேசினால் தங்கள் ரகசியங்கள் வெளியே தெரிந்துவிடும் அல்லது தாங்கள் காயப்படுத்தப்படுவோம் என்று அஞ்சுவார்கள். 

  6. எதையும் மிகையாகச் சிந்திக்கும் குணம். ஒரு சிறிய நிகழ்வு நடந்தாலும், அதைப்பற்றியே மணிக்கணக்கில் யோசித்துத் தங்களைத் தாங்களே குழப்பிக் கொள்வார்கள்.

இதையும் படியுங்கள்:
மணமக்கள் கவனத்திற்கு: திருமண வாழ்க்கைக்கான 'மேஜிக்' பார்முலா... 7-7-7 மற்றும் 3-3-3 விதிகள்!
Living Alone

ஒரு பார்ட்டிக்கோ அல்லது திருமணத்திற்கோ சென்றால், அங்கு நடக்கும் மேலோட்டமான பேச்சுகள் இவர்களுக்கு எரிச்சலைத் தரும். மற்றவர்கள் தங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற கவலை இவர்களுக்கு இருப்பதில்லை. எனவே அந்தச் சூழலைத் தவிர்க்கவே இவர்கள் புத்தகங்களுக்குள் தஞ்சம் அடைகிறார்கள். இது அவர்களுக்கு ஒரு மன அமைதியைத் தந்தாலும், நீண்ட கால அடிப்படையில் இது சமூகத்திலிருந்து அவர்களைத் தனிமைப்படுத்திவிடும் அபாயம் உள்ளது.

புத்தகம் வாசிப்பது ஒரு மிகச்சிறந்த பழக்கம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் மனிதர்களைச் சந்திப்பதைத் தவிர்ப்பதற்காக மட்டுமே புத்தகங்களைப் பயன்படுத்துவது ஆரோக்கியமானது அல்ல.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com