
இன்று படிக்கின்ற பிள்ளைகளுக்கு மனதை ஒருநிலைப் படுத்துவது என்பது சற்று கடினமான வேலையாக இருக்கிறது. காரணம் சமூக வலைத்தளங்கள் அதிகமாக உள்ளது. அதில் அவர்கள் மனதில் பதிய செய்யும் விஷயங்கள் எக்கச்சக்கமாக இருக்கிறது. அப்படி இருக்கும்போது மனதை ஒரு நிலை படுத்துவது என்பது சற்று கடினமான விஷயம். அதை எப்படி தகர்த்து எறிந்து படிப்பில் கவனம் செலுத்தலாம் என்பதை இப்பதிவில் பார்ப்போம்.
கல்வி பெறுவது என்றால் அறிவைத் திரட்டி மூளையில் திணிப்பது அன்று. கல்வியின் உண்மையான குறிக்கோள் மன ஒருமை பெறுவதுதான். நான் மீண்டும் கல்வி பயில்வதாக இருந்தால் விஷயங்களைப் பற்றி படிக்கவேமாட்டேன். நான் விரும்பிய நேரத்தில் விரும்பிய இடத்தில் செலுத்தும் திறமை பெற்று பெருக்கிக் கொள்வேன். அதன் பின்னர் மன ஒருமை எனும் கருவிக்கொண்டு விரும்பிய அறிவையெல்லாம் விரைவில் திரட்டிக்கொள்வேன் என்று கூறுகிறார் விவேகானந்தர்.
எங்காவது அமைதியான ஒரு இடத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டு எவரும் வராத, எவ்வித ஆரவாரமும் இல்லாத இடமாய் வீட்டின் மாடியாகவோ, மொட்டை மாடியாவோ இருந்தாலும் அங்கு அமைதியான சூழல் இருக்க வேண்டியது அவசியம். அந்த இடத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.
அந்த இடத்தில் சுவையான கதை புக்கை படிக்கும்போது எப்படி அமர்வோமோ, உல்லாசமாய் இருக்கும்போது
எப்படி அமர்வோமோ அதுபோல் அமர்ந்துகொள்ள வேண்டும்.
அங்கு ஏதாவது ஒரு பொருளை தேர்ந்தெடுத்து அதில் நம் மனத்தை செலுத்த வேண்டும். செலுத்திய மனம் அங்கு மீண்டும் அசைந்து விடாது அதனை நிறுத்தி முதலில் ஏதாவது ஒரு கருத்தை நினைத்துக்கொள்ள வேண்டும். அதாவது என்னால் மற்றவர்களுக்கு எந்தவித துன்பமும் நேந்து விடாதபடிக்கு என் வாழ்க்கை முறை அமைய வேண்டும். என்று நாம் எதை நினைக்கிறோமோ அதை மனத்தில் செலுத்தி வேறு எண்ணங்களை அகற்றி விடவேண்டும். நாம் எந்த நல்ல எண்ணத்தை நிறுத்துகிறோமோ அதிலேயே நம் மனத்தை குவித்து, கவனத்தைச் செலுத்தவேண்டும். இதுதான் மனதை ஒருமுகப்படுத்த வேண்டிய முறை.
இது ஆரம்பத்தில் சற்று முரண்டு பிடிக்கும் என்றாலும், தினசரி ஒரு தியானம் போல் செய்ய செய்ய பழகிவிடும். பிறகு மனனம் செய்வதிலிருந்து புரிந்து படிப்பதில் இருந்து எதையும் எளிதாக படித்து முன்னேறலாம். பிறகு எவ்வளவு சத்தம் வரும் சூழ்நிலையில் இருந்தாலும் மனதை ஒரு நிலைப்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாதபடிக்கு ஒரு தன்மை ஏற்படுவதை அறிய முடியும்.