
ஒருவர் எவ்வளவு கடின உழைப்பாளியாகவும் புத்திசாலியாகவும் இருந்தபோதும், சிலர் அவருக்கு அளிக்கும் ஊக்குவிப்பே முழுமையான வெற்றிபெற வழிகாட்டும். நல்ல மனப்பான்மையுடன் பிறர் கூறும் நேர்மறையான வார்த்தைகள் நற்பலன் பெற பெரிதும் உதவும். அவ்வாறான நேர்மறையான மேற்கோள்கள்
சிலவற்றை இப்பதிவில் பார்க்கலாம்.
எதிர்மறை எண்ணங்களுடன் செய்யும் செயலை விட, நேர்மறை எண்ணங்களுடன் செய்யும் செயலானது அதிகளவு சிறப்பாக அமையும்.
பலமான நேர்மறை எண்ணங்கள் கொண்ட மனோபாவத்துடன் ஒன்றை அணுகும்போது அதன் விளைவுகள் அதிசயிக்கத் தக்க மருந்துகள் தரும் விளைவுகளைவிட சிறப்பாக அமையும்.
சிறப்பாக செயல்படுவதென்பது ஒரு திறமையை குறிப்பதல்ல. அது ஒரு சிறப்பான அணுகுமுறையின் வெளிப்பாடு.
நன்னம்பிக்கை என்பது நினைத்ததை அடைவதற்கான வழிகாட்டி. தன்னம்பிக்கை இல்லாமல் எவராலும் எதையும் அடையமுடியாது.
உனது நேர்மறையான அணுகுமுறையே உனது வெற்றிக்கான திசையை தீர்மானிக்கிறது.
வாழ்க்கை ஒரு சைக்கிள் போன்றது. சமநிலையுடன் வாழ்க்கை ஓட, நீ நகர்ந்து கொண்டேயிருப்பது அவசியம். (Albert Einstein)
சிறந்ததொரு வெற்றியாளனாக, நீ சிறப்பாக செயல்படக் கூடியவன் என்ற நம்பிக்கை உனக்குள் இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், நம்பிக்கை இருப்பதுபோல் கற்பித்துக்கொள்.
சூரிய ஒளிக்கு முன்பாகவே எப்பொழுதும் உன் முகத்தை வைத்திரு. இருள் பின்புறம் சென்றுவிடும்.
நேர்மறை எண்ணங்கள் கொண்ட மனோபாவம் ஒரு தெளிவற்ற நிலையல்ல. பிரச்னைகளையும், சவால்களையும், தடைகளையும் தகர்த்தெறிய உதவும் வலுவான புத்திசாலித்தனம் அது.
உனது மனோபாவத்தை மாற்றியமைப்பதன் மூலம் சூழ்நிலைகளையும் உனது விருப்பப்படி மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
ஒரு வேலையை ஆரம்பிப்பதற்கான சிறந்த வழி, பேசுவதை நிறுத்தி செயலில் இறங்குவதேயாகும்.
உன்னால் கனவு காண முடியும்போது, அதை நிஜத்தில் செய்து முடிக்கவும் உன்னால் முடியும்.
வாழ்கை எவ்வளவு கடினமானதாகத் தோற்றமளித்தாலும் அதை வெல்வதற்கு ஒரு வழி கண்டிப்பாக இருக்கும்.
வெற்றியாளனாக மாற முயற்சிக்கும் முன், பிறர் மதிக்கும் மனிதனாக மாற முயற்சிசெய்.
உங்கள் மனோபாவம் பலவீனமாயிருந்தால், உங்கள் நடத்தையும் பலவீனமாகவே இருக்கும்.
நீ பார்க்கும் பார்வை சரியான கோணத்தில் இருந்தால், உலகமே ஒரு பூந்தோட்டமாகத் தெரியும்.
ஒரு பெரிய மலையைப் புரட்டினவனும், முதலில் ஒரு சிறு கல்லைத்தான் பெயர்த்தெ டுத்திருப்பான்.