
(கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வணக்கம். தொடர்ந்து எங்களுடைய தளத்திற்கு நீங்கள் கொடுக்கும் ஆதரவுக்கு நன்றி. இந்த வாரம் முதல் நம்முடைய தளத்தில் புதிதாக Movie Motivation என்ற எபிசோட் தொடங்கப்படுகிறது. அதாவது திரைப்படங்களில் வரும் அயன் மேன், ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் போன்ற குறிப்பிட்ட கேரக்டர்களிடமிருந்து, நமது சுய முன்னேற்றத்திற்குத் தேவையான விஷயங்களை நாம் கற்றுக் கொள்ளலாம் என்பதைப் பற்றிய பதிவுதான் இது.)
அதன்படி, இந்த வாரம் நாம் பார்க்கப் போவது Batman கதாபாத்திரத்திடமிருந்து நாம் என்ன கற்றுக் கொள்ளலாம் என்பதுதான்.
இந்த கதாபாத்திரம் தன்னம்பிக்கை, தைரியம் விடாமுயற்சி போன்ற பல விஷயங்களுக்கு பெயர் போனது என்பது உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும். இதுவரை Batman-ஐ நீங்கள் வெறும் சூப்பர் ஹீரோவாக மட்டும்தான் பார்த்திருப்பீர்கள். ஆனால் இந்த பதிவு வாயிலாக அவரைப் பற்றிய சில விஷயங்களைப் புரிந்து கொண்டு, அதை நம்முடைய வாழ்க்கைக்கு எப்படி பயன்படுத்தலாம் எனத் தெரிந்து கொள்ளலாம்.
வாழ்க்கையில் ஏதோ ஒன்றை சாதிக்க வேண்டும் என நினைப்பவர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், Batman-ஐ போல, நீங்கள் நினைத்தால் உங்கள் வாழ்வை மாற்றலாம். பேட்மேன் எப்படி தானாகவே முன்வந்து கோத்தம் நகரை நாம் பாதுகாக்க வேண்டும் என முடிவெடுத்தாரோ, அதேபோல நீங்கள் நினைத்தால் உங்கள் வாழ்க்கையை சரியான திசைக்கு கொண்டு சென்று வெற்றியடைய முடியும்.
அதற்கான ஆசையும், ஆற்றலும் நமக்குள்ளேயே தான் இருக்கிறது என்பதை முதலில் உணருங்கள். பேட்மேன் தனி ஆளாக நின்று கோத்தம் சிட்டியை காப்பாற்றுவது போல, உங்கள் ஒருவரால் மட்டுமே உங்களுடைய வாழ்க்கையை காப்பாற்ற முடியும்.
பேட்மேன் போல உங்களுக்கு நீங்களே ஹீரோவாக இருங்கள். நாம் அனைவருக்குமே வாழ்க்கையில் ஏதோ ஒரு பயம் இருக்கத்தான் செய்கிறது. நம்முடைய சிறப்பான விஷயங்களை வெளிக்கொண்டு வருவதிலிருந்து, insecurities, self doubts போன்ற விஷயங்கள் தடுத்து நிறுத்துகிறது. நீங்கள் ஒரு விஷயம் நன்றாக யோசித்துப் பார்த்தால், பேட்மேனுக்கு எந்தவிதமான சூப்பர் பவரும் இருக்காது.
இருந்தாலும் அவருடைய தனிப்பட்ட முயற்சியால், அவருக்குத் தேவையான கேஜெட்களை அவரே உருவாக்கிக் கொள்வார். இப்படிதான் நம்மை தடுத்து நிறுத்தும் விஷயங்களை தகர்த்தெறிந்து, நம்மை நாமே சிறப்பாக மாற்றும் விஷயங்களை செய்ய வேண்டும்.
பேட்மேன் கோத்தம் நகரை நம்புவது போல நீங்கள் உங்களை நம்புங்கள். என்ன ஆனாலும் பேட்மேன் அந்த நகரை விட்டுக்கொடுக்க மாட்டார். எவ்வளவு பெரிய பிரச்சனைகள், தடைகள் வந்தாலும் கோத்தம் நகரை காப்பாற்றுவதிலிருந்து அவர் பின்வாங்க மாட்டார்.
இதன் மூலமாக, தனி மனிதனாக ஒரு நகரை காப்பாற்ற முடியும் என்று அவர் தன் மீது வைத்துள்ள நம்பிக்கையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. நம்மால் ஒரு விஷயத்தை செய்து முடிக்க முடியும் என்ற நம்பிக்கை நமக்கு முதலில் இருந்தால் மட்டுமே, எதுவாக இருந்தாலும் சாதிக்க முடியும். எனவே முதலில் நீங்கள் உங்களை நம்புங்கள்.
“இருளில் இருந்துதான் ஹீரோ வருவான்”. இதற்கான பெஸ்ட் உதாரணம் நம்முடைய பேட்மேன் தான். பேட்மேனின் பேக் ஸ்டோரியை கொஞ்சம் புரட்டிப் பார்த்தால், மிகவும் மோசமானதாக இருக்கும். சிறுவயதிலேயே அவரது கண்முன்னே தாய், தந்தை இருவரையும் சுட்டுக் கொன்று விடுவார்கள். இருப்பினும் அந்த மோசமான நிகழ்வு, அவர் பேட்மானாக மாறி பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதற்கு தடையாக இருக்காது.
தன்னுடைய வலிகள் அனைத்தையும் பாசிட்டிவாக மாற்றி இருளிலிருந்து ஹீரோவாக வந்திருப்பார். எனவே உங்களுடைய குடும்ப சூழல், தற்போதைய நிலை உங்களின் எதிர்காலத்தை மோசமாகிவிடும் என நினைக்க வேண்டாம்.
இப்படி பல விஷயங்களை பேட்மேன் கதாபாத்திரத்திடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள முடியும். இறுதியாக நான் ஒன்றை உங்களிடம் கூற விரும்புகிறேன்.