வித்தியாசமாக இருங்கள். வெற்றி நிச்சயம்!

காந்திஜி, விவேகானந்தர்...
காந்திஜி, விவேகானந்தர்...
Published on

சுயமாக முன்னுக்கு வருவதைவிடப் பிறரைக் காப்பி அடித்து முன்னுக்கு வருவது சுலபம். மனிதர்கள் மூன்று வகை.

1.எல்லாரும் செய்வதையே தானும் செய்கிறவர்கள்.

2.எவரும் செய்யாததை தான் செய்து வாழ்ந்து காட்டுகிறார்கள்.

3.எவரும் செய்ய முடியாததை செய்து மரணத்தைக் கொல்கிறவர்கள்.

ஊரோடு ஒத்து வாழ். உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்ற அறிவுரையை தவறுதலாக புரிந்து கொண்டு பிறரைத் காப்பி அடித்து வாழும் வாழ்க்கை சரியல்ல.

ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் பொறியியல் படித்து பிறகு சட்டம் படித்தார். பிறகு வித்தியாசமானத் தகுதிகளோடு பல்கலைக்கழக டாக்டர் பட்டம் பெற்று  வித்தியாசமாக நிற்கிறார்.

வயலினை வெறும் பக்க வாத்தியமாக வைத்திருந்த இசையுலகில்  வயலியனுக்கு பக்க வாத்தியமாக முரட்டு மேளத்தை வைத்துக் கொண்டு  அமர்க்களப்படுத்தியவர் கலைமாமணி குன்னக்குடி வைத்தியனாதன்.

வலயப்பட்டி சுப்ரமணியமும் குன்னக்குடியும் ஈட்டிய புகழும் செல்வமும் ஏராளம். வித்தியாசத்திற்கு உலகம் கொடுத்த வெகுமதி அது.

லேடீஸ் அண்ட் ஜென்டில்மென் என்று அமெரிக்காவில் அத்தனை பேரும் அரைத்த மாவையே அரைத்தபோது பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் என்று வித்தியாசமாக விளித்ததால்தான் விவேகானந்தர் கவனிக்கப்பட்டார். வித்தியாசம் வேறு. விபரீதம் வேறு. வேறுபாட்டை விளங்கிக் கொள்ளவில்லை என்றால்  விபரீதம் நேரும்.

இதையும் படியுங்கள்:
திருவேங்கடவனின் தயை மழை!
காந்திஜி, விவேகானந்தர்...

உலக நாடுகளில் போர் நடத்திய எல்லா தலைவர்களும் கத்தி, துப்பாக்கி, பீரங்கி, கப்பல், விமானம் இவற்றை நம்பி போராடினார்கள். குஜராத்தில் இருந்து புறப்பட்ட அந்த ஒற்றை மனிதன் எந்த ஆயுதமும் எடுக்காமல் போர்க்களத்தில் புகுந்தார் மகாத்மா காந்தி. நிராயுத பாணியாக நின்று போராடும் ஒற்றை மனிதரின் போராட்டத்தை வலிமை மிக்க ஆயுதங்கள் வைத்திருந்த ப்ரிட்டிஷ்காரர்களால் ஏன் நசுக்க முடியவில்லை  என்று எதிர்க்கட்சிகள் சொன்னபோது சர்ச்சில் சொன்ன பதில் ஆழமானது.  "அந்த மனிதன் கத்தியை எடுத்தால் நான் துப்பாக்கியை எடுப்பேன். துப்பாக்கியைத் தூக்கினால் நான் பீரங்கியால் நசுக்கி இருப்பேன். பீரங்கியால் போராடினால் குண்டு மழை பொழிந்து இருப்பேன். ஆனால் அவர் சத்தியத்தை அல்லவா எடுத்துக் கோண்டு போராடுகிறார். சத்தியத்தை எதிர்க்கும் ஆயுதம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதை நண்பருக்குச்  சொல்ல விரும்புகிறேன்" என்றார் சர்ச்சில்.

வித்தியாசமான ஆயுதத்தை எடுத்ததால் காந்தி கவனிக்கப்பட்டார். வித்தியாசமாக விளங்குபவர்கள் கவனிக்கப்படுவார்கள். விபரீதமாக இருப்பவர் விலக்கப்படுவார்கள். வித்தியாசமாக இருங்கள் வெற்றி நிச்சயம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com