எளிமை! இது என்றைக்குமே நமக்கு கைகொடுக்கும் ஒரு வரம் என்று சொன்னால் அது மிகையல்ல. வாழ்க்கையில் சாதித்தவர்களின் வாழ்க்கையை திரும்பிப் பாருங்களேன் அதில் நிச்சயமாக அவர்கள் எளிமையை கடைப்பிடித்து இருப்பார்கள். நமக்கு என்ன தேவையோ அதை வாங்க வேண்டும். அதை பேச வேண்டும் நடந்து கொள்ளவும் வேண்டும்.
எளிமையை கடைப்பிடித்தால் மகாத்மா காந்தியடிகள் தேசத்தந்தை ஆனார். எளிமையாக வாழ்ந்து பாருங்களேன் எந்த மன உளைச்சலும் இருக்காது எந்த கவலையும் இருக்காது அப்புறம் என்ன நீங்கள்தான் ராஜா. எளிமையை கடைபிடிக்கும் சில யோசனைகள் இப்பதிவில்.
அனுபவங்களின் கவனம் செலுத்துங்கள்:
எளிமையான வாழ்க்கையை வாழ்வதற்கு முதலில் புற உலக பொருட்களின் மீது உள்ள ஆசையை குறைத்து கொண்டாலே உங்கள் மனதை மகிழ்ச்சியாக வைத்து, உங்களை முழுமையாக மாற்ற உதவும் அனுபவங்களை பெறுவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
நிகழ் காலத்தில் வாழ வேண்டும்:
எப்போதும் நிகழ்காலத்தில் வாழவேண்டும். கடந்த காலத்தில் நிகழ்ந்தவற்றை பற்றி நினைத்து வருத்தப் படுவதும் எதிர்காலத்தில் வரப்போவது நினைத்து கவலைப்படுவதும் நம்மை மகிழ்ச்சியாக வைக்க உதவாது. இதுவே நீங்கள் நிகழ்காலத்தில் மனதை நிலை நிறுத்தி வாழ துவங்கும்போது, மிக எளிமையான விஷயங்களை கூட நீங்கள் ரசிக்க ஆரம்பித்து விடுவீர்கள். இவை உங்களை முழுமையாக்குவதோடு மகிழ்ச்சியாக வைக்கவும் உதவுகிறது.
சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டும்:
நம்மில் பலரும் நல்ல வாழ்க்கைமுறை அமைத்துக் கொள்வதற்கும் புற உலக பொருட்கள் மீது ஆசை கொண்டும் வாழ்ந்து கொண்டிருக்கும் வேளையில், நம்முடைய சுதந்திரத்தை தவற விட்டு விடுகிறோம். அது போன்ற விஷயங்களை நீங்கள் காட்டும்போது அவை உங்களுக்கே தெரியாமல் உங்களை சுற்றி ஒரு எல்லையை வகுத்துவிடும். உங்களுக்கு தேவையில்லாத விஷயங்களை புறந்தள்ளி உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் விஷயங்களில் மனதை செலுத்தும்போது கிடைக்கும் சுதந்திரமானது அனுபவித்து பார்த்தால் தான் புரியும்.
வாழ்க்கைக்கு முக்கியமானது எது?
வாழ்வில் எவை எல்லாம் முக்கியமானது என்பதை பற்றி தெளிவு தேவை. தேவையில்லாத விஷயங்களுக்கும் மற்றவர்கள் என்று நினைப்பார்கள் என்று எண்ணங்களுக்கும் இடம் கொடுக்காமல், உங்கள் வாழ்க்கையில் என்ன தேவை என்பதையும் நீங்கள் நினைத்ததை சாதிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதையும் மனதில் நிறுத்தி அதற்கு ஏற்ப நமது வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.
மனதளவில் முழுமையாக இருக்க வேண்டும்:
மேலே சொன்ன விஷயங்களின் முழு பொருளை உண்மையாக புரிந்து கொள்ளாத பலரும் இவை அனைத்தையும் தியாகங்களின் மூலமாக மட்டும்தான் பெற முடியும் என்று மனநிலையில் இருப்பார்கள். மேலே கூறப்பட்டுள்ள விஷயங்கள் எதுவும் தியாகம் செய்வதற்கான படிகள் அல்ல. அதற்கு பதிலாக நம்மை மகிழ்ச்சியாக வைத்து, முழுமையாக்குவதற்கான வழிமுறைகள் ஆகும். நாம் சரியான வகையில் புரிந்து கொள்ளாத காரணத்தினால்தான், நமது வாழ்வில் இருக்கும் பல்வேறு விஷயங்களையும் போற்றி பாராட்ட தவறிவிடுகிறோம். இவற்றை சரி செய்தாலே நம்மால் எளிமையான வாழ்க்கை அமைத்து முழுமையாக வாழ முடியும்.