நம்பினால் மாறும்: ரோஜர் பானிஸ்டருக்கு வெற்றி கிடைத்ததும் இப்படித் தான்!

Roger Bannister
Roger Bannister

ஒரு சாதனையை நாம் செய்வதற்கு எத்தனையோ தடைகளைத் தாண்ட வேண்டி இருக்கலாம். ஆனால் எல்லாவற்றுக்கும் முன்பாக நாம் தாண்ட வேண்டியது நம் மனத்தடையைத் தான். இதை உணர்த்திய ரோஜர் பானிஸ்டரின் விடாமுயற்சியை எடுத்துரைக்கிறது இந்தப் பதிவு.

நவீன ஒலிம்பிக் போட்டிகள் 1896 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. ஒலிம்பிக்சில் முன்பு ஒரு மைல் தூர ஓட்டப்பந்தயம் ஒரு போட்டியாக இருந்தது. பிறகு அது 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயமாக மாற்றப்பட்டது. 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகள் வரை கூட இந்த தூரத்தை நான்கு நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் யாரும் ஓடியதில்லை. ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடங்கள் ஓடி முடிப்பது சாத்தியமில்லை என்று மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் சொன்னார்கள். மனிதர்களின் நுரையீரல் அந்த வேகத்தில் ஓடும் போது மூச்சு வாங்க சிரமப்படுவதோடு, இதயமும் திணறும். ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடங்களுக்குள் ஓடிக் கடப்பது மனித சக்திக்கு அப்பாற்பட்டது என்று பலரும் நம்பினார்கள்.

பிரிட்டனில் நரம்பியல் மருத்துவராக பணிபுரிந்தவர் ரோஜர் பானிஸ்டர். இவர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்பதை தனது பொழுதுபோக்காக வைத்திருந்தார். 1952 ஒலிம்பிக் தொடரில் 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்று நான்காவது இடம் பிடித்தார். பதக்கம் வெல்லவில்லை என்றாலும் அவர் அப்போது ஓடிய நேரம் பிரிட்டனைப் பொறுத்தவரை சாதனை அளவு தான். ஒரு மருத்துவராக இருந்தாலும், நான் இந்த தூரத்தை 4 நிமிடங்களுக்குள் ஓடி சாதனை புரிவேன் என அறிவித்தார். ஒலிம்பிக்கில் பதக்கம் கூட வாங்காமல் திரும்பி வந்த இவர் இப்படி பேசியதால் மக்கள் சிரித்தனர். இருப்பினும் முறையான பயிற்சி இல்லாமலே திரும்பத் திரும்ப ஓடிப் பழகிய ரோஜர் பானிஸ்டர் 2 ஆண்டுகள் தொடர்ந்து முயற்சி செய்ததால், 1954 ஆம் ஆண்டு மே 6 ஆம் தேதி ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மைதானத்தில் 3 நிமிடங்கள் 59.4 நொடிகளில் 1500 மீட்டர் தூரத்தைக் கடந்து, மகத்தான சாதனையை செய்தார். ரோஜர் பானிஸ்டர் உலக சாதனை படைத்தார் என்று மைதானத்தில் அறிவித்த போது அன்று கேலி செய்த பிரிட்டிஷ் மக்கள் ஆரவாரம் செய்தார்கள்.

இதையும் படியுங்கள்:
மாற்றி யோசித்தால் வெற்றி நிச்சயம்: உருளைக்கிழங்கு பிரபலமானதும் இப்படித்தான்!
Roger Bannister

இந்த தூரத்தை நான்கு நிமிடங்களுக்குள் ஓடிக் கடப்பது மனித சக்திக்கு அப்பாற்பட்டது என்று 58 ஆண்டுகளாக உலகம் நம்பி வந்தது. அந்த நம்பிக்கையை தன் சொந்த நம்பிக்கையால் தகர்த்தார் ரோஜர். வேடிக்கை என்னவென்றால் அவர் செய்த சாதனையை அடுத்த 46 நாட்களுக்குள் இன்னொருவர் முறியடித்தார். மேலும் அதே ஆண்டில் இன்னும் 26 பேர் இந்த தூரத்தை நான்கு நிமிடங்களுக்குள் ஓடி சாதனை படைத்தார்கள். அடுத்த ஆண்டில் 235 பேர் இந்த சாதனையை செய்தார்கள்.

தனது மகத்தான வெற்றியால் மற்றவர்களின் தவறான நம்பிக்கையைத் தகர்த்தார் ரோஜர். நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் செயல்படும் போது நாம் என்னவாக நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com