
பரபரப்பான அன்றாட வாழ்கை சூழலில் மனதை அமைதியாக வைத்து, பணிகளை சிறப்பாக செய்ய மனக்கட்டுப்பாடு அவசியம். அதை அடைய உதவும் பயிற்சிகள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
மனதைக் கட்டுப்படுத்துதல் என்றால் என்ன? (What is mind control?)
மனக்கட்டுப்பாடு என்பது மனிதர்களின் எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளை திறம்பட நிர்வகிக்கும் செயலைக் குறிக்கிறது. அது மனதை அடக்கி நடக்கும் மன ஒழுக்கத்தைப் பற்றியது. மனக்கட்டுப்பாடு ஒருவரது உணர்ச்சிகளை சம நிலையில் வைக்கவும், சிறந்த கவனம் செலுத்தி, வேலையை திறமையாக கையாளவும் உதவும்.
மனதைக் கட்டுப்படுத்துதல் பயிற்சி செய்வதன் நன்மைகள் (Benefits of practicing mind control)
1. மனக்கட்டுப்பாட்டை பயிற்சி செய்வதால் மன அழுத்தத்தின் போது கூட ஒருவரால் அமைதியாக இருக்க முடியும். உணர்ச்சிகளை சம நிலையில் வைப்பதால் மனம் அமைதியான நிலைக்கு மாறிவிடும்.
2. அமைதியான மனநிலையில் ஆழ்ந்த கவனம் செலுத்தி பணிகளை செய்வதால் அது சிறப்பாகவும் எளிதாகவும் முடிகிறது.
3. சுய விழிப்புணர்வு அதிகரிக்கிறது. மனக்கட்டுப்பாட்டில் இருக்கும் ஒருவரால் சிக்கலான தீர்வுகளுக்குக் கூட சிறந்த முடிவுகளை எடுக்க முடியும்.
4. எதிர்மறை சிந்தனைகளை உடைக்க உதவுகிறது. இதனால் ஒட்டுமொத்த மனநலனும் மேம்பாடு அடைகிறது.
5. உயர்ந்த லட்சியங்களை இலக்குகளை அடைய நினைப்போருக்கு மனக்கட்டுப்பாடு மிகவும் முக்கியம். எளிதாக தங்களது இலக்குகளை அடைய முடியும் என்பது இதனுடைய சிறப்பம்சம்.
6. உறவினர்கள், நண்பர்களிடையே ஏற்படும் மனக்கசப்புகளை மனக்கட்டுப்பாட்டின் மூலம் எளிதில் தீர்க்க முடியும். நல்ல உறவு மற்றும் நட்பு வட்டத்தை பேண முடியும்.
3. மனதைக் கட்டுப்படுத்துவதற்கான எளிய நுட்பங்கள் (Simple techniques for mind control)
தற்போதைய தருணத்தில் வாழ்தல்: எதிர்கால, கடந்தகாலக் கவலைகளை நிறுத்திவிட்டு நிகழ்காலத்தில், தற்போதைய தருணத்தில் வாழ வேண்டும். ஒவ்வொரு செயலையும் கவனம் செலுத்தி செய்வதால் தற்போதைய தருணத்தை உணர முடியும்.
சுவாசப் பயிற்சிகள்: மன அழுத்தத்தில் இருக்கும் ஒருவரது சுவாசம் தாறுமாறாக இருக்கும். அவர்கள் ஆழமாக, மெதுவாக சுவாசிக்க வேண்டும். சுவாசத்தில் மட்டும் கவனம் இருக்க வேண்டும்
எதிர்மறை எண்ணங்கள் மறைய: இவை மனதில் எழும்போது நிறுத்து என்று வாய்விட்டு சத்தமாகவோ அல்லது மனதிற்குள் அமைதியாகவோ சொல்லிக் கொண்டு சுற்றியுள்ள ஏதாவது ஒன்றின் மீது கவனத்தை திசை திருப்ப வேண்டும். மனம் வசப்படாமல் இருந்தால், உடலில் எங்கேயாவது கிள்ளி கொண்டால், எதிர்மறை எண்ணங்கள் சட்டென்று விலகும்.
நேர்மறையான உறுதிமொழிகள்: ஊக்கமளிக்கும் நேர்மறையான உறுதிமொழிகள் மற்றும் சொற்றொடர்களைப் பயன்படுத்த வேண்டும். அமைதியான இடங்கள் அல்லது சூழ்நிலைகளை கற்பனையில் காட்சிப்படுத்தி பார்க்க வேண்டும்.
விருப்பமான செயல்கள்: விரும்பத்தகாத எண்ணங்கள் எழுந்தால் அதிலிருந்து விடுபட, நண்பர்களுடன் பேசுவது, இசை கேட்பது, புத்தகம் படிப்பது போன்ற ஏதாவது ஒன்றை செய்யலாம்.
நன்றியுணர்வு பயிற்சி: துயரமாக இருக்கும் மனதை நேர்மறையான மனநிலைக்கு மாற்ற நாம் பெற்றிருக்கும் விஷயங்களுக்கு நன்றியுணர்வு பாராட்ட வேண்டும்.
உங்கள் மனதைக் கட்டுப்படுத்தும் திறனை எவ்வாறு மேம்படுத்துவது? (How to improve your mind control?)
1. தினமும் பத்து நிமிடங்களாவது எண்ணங்கள், சுவாசம் அல்லது சுற்றுப்புறத்தை கவனிக்க வேண்டும். அடிக்கடி செய்யும் போது கவனச் சிதறல்களை புறக்கணிப்பது எளிதாக இருக்கும்.
2. எதிர்மறை எண்ணங்கள் எழும்போது அவை யதார்த்தமானமையா, வாழ்க்கைக்கு உதவுபவையா என்று சிந்திக்க வேண்டும். அவற்றை நேர்மறையான எண்ணங்களாக மாற்றவும்.
3. தேவையற்ற எண்ணங்களுக்கு வழிவகுக்கும் சூழ்நிலைகள் அல்லது சமூக ஊடகப் பழக்கங்களை அடையாளம் கண்டு அவற்றை கட்டுப்படுத்தவும்.
4. தினமும் நன்றாக தூங்கி, மிதமாக சாப்பிட்டு, உடற்பயிற்சிகளும் செய்ய வேண்டும். இவை மனதை அமைதிப்படுத்த உதவும்.
5. தேவையற்ற தொடர்ச்சியான எண்ணங்கள் தோன்றி மனதை பதட்டத்திற்கு ஆளாக்கினால், ஒரு மனநல ஆலோசகரை அணுகலாம்.