கூட்டாளியைத் தேர்ந்தெடுங்கள், உங்கள் வாழ்க்கையை அல்ல!

Lifestyle articles
Choose a partner
Published on

வீட்டில் பெரியவர்கள் நல்ல குணவான்களுடன் பழகுவதை ஆதரித்துப் பேசுவார்கள். அதேபோல் குழந்தைகளோ மற்றும் வளரும் பருவத்து பிள்ளைகளோ சற்று தீயபழக்கவழக்கங்கள் சரியில்லாதவர்களுடன் சேர்ந்து பழகினால் அந்தப் பக்கமே போகக்கூடாது என்று தண்டிப்பார்கள். காரணம் "கூடா நட்பு கேடாய் முடியும்" என்பதுதான். நாம் யாருடன் சேர்கிறோமோ அவர்களின் செயல்பாடுகள் நம்மையும் தாக்கும் என்பதால்தான், அதுவும் நம்மை அறியாமலே அந்தப்பழக்க வழக்கங்கள் நம்மையும் பற்றிக் கொள்ளும் என்பதை அனுபவங்களின் மூலம் அறிந்து வைத்திருக்கும் பெரியவர்கள், சிறியவர்களை பார்த்து அப்படி கூறுவது உண்டு. 

ஒரு மனிதனைச் சுற்றி எத்தனையோ மனிதர்கள் உலவுகிறார்கள். அவர்களில் எத்தனையோ வகையினர் இருக்கிறார்கள். அவர்கள் எத்தனையோ செய்திகளைப் பற்றி உரையாடுகிறார்கள். அவையெல்லாம் ஒரு மனிதனை பாதிக்காது இருப்பது இல்லை. என்றாலும், ஒருவன் சந்திக்கும் மனிதன், பார்க்கும் காட்சி, கேட்கும் செய்தி, அறியும் செய்தி ஆகிய அனைத்தும் அவனை  உடனடியாக பாதிக்கின்றன.

அவன் அறியாமலேயே அவை அவனை அமைக்கின்றன. அவற்றின் தன்மை அவனின் உள்ளும் , புறமும் படிப்படியாகப்படிகிறது. நல்ல சூழ்நிலையாய் இருப்பின் அவன் நல்லவனாய் இருக்கிறான். தீயசூழ்நிலையாய் இருப்பின் அவன் தீயவனாக மாறுகிறான்.

ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த இளைஞன் ஒருவன் வானை நிமிர்ந்து பார்த்தான். வெண்மேகச் சிதறல் போன்று நாரை ஒன்று பறந்து கொண்டிருந்தது. அது வானில் சிறகடிப்பதைக்கண்டு அவன் வியந்து சில கணங்கள்தான் இருக்கும். அந்த நாரையின் வேகம் சிறுகச் சிறுக குறைவதுபோல் தோன்றியது. உண்மையில் அது பறக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தது. அப்பொழுது இளைஞனுக்குக் காரணம் என்னவென்று புரியவில்லை. முதலில் நாரையின் ஓர் இறகு கீழே விழுந்தது. பிறகு வேறொரு இறகும் கீழே விழுந்தது.  அதன் பின் நாரையே தரையில் பொத்தென்று விழுந்துவிட்டது. இளைஞன் ஓடோடிச் சென்று அதனை எடுத்துப் பார்த்தான். அந்த நாரையின் இறகின் இடையில் ஒரு நச்சு அரவம் நெளிந்தது. அந்த இளைஞனுக்கு அப்பொழுதுதான் புரிந்தது. நாரை ஏன் விழுந்தது என்று. 

இதையும் படியுங்கள்:
மகிழ்ச்சியான மண வாழ்க்கைக்கு நாம் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?
Lifestyle articles

நாரை மரத்தில் வீற்றிருக்கும்பொழுது அதற்குத் தெரியாமல் அதன் இறகு இடுக்கில் ஒரு நச்சரவம் எப்படியோ புகுந்து இருக்கிறது. இதனை அறியாது எழுந்த நாரையை அது தீண்டி இருக்கிறது. அதன் காரணமாக நாரையின் தலைக்கு நஞ்சேறி நாரை கீழே விழுந்துவிட்டது என்ற குட்டிக்கதையை இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

தீமை ஒருவனுக்கு தெரியாமலேயே அவனுக்குள் புகுந்து அவனுடைய மனதை கெடுத்துவிடும் என்றும் நஞ்சை சுமந்து வரும் பாம்பைவிட, தீயபழக்கத்தைச் சுமந்து வரும் மனிதன் கொடுமையானவனாக மாறிவிடுவான் என்பதால்தான், தீயபழக்கம் உடையவர்களுடைய நட்பை துண்டித்தும், நல்லவர்களின் நட்பை நாள்தோறும் நாடவேண்டும். அவர்களுடன் பழகவேண்டும் என்றும் நம் பெரியோர்கள் நமக்கு எப்பொழுதும் எடுத்துரைத்து வருகின்றார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com